திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

தோணித்துறை தெரு, மர்ஹூம் யூசுப் அவர்களின் மனைவியும் அஜீஸ்மியான் அவர்களின் தாயாரும் யூசுப் அலி அவர்களின் பாட்டியாருமாகிய செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

பரங்கிப்பேட்டை தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி 2-வது ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா இறைவன் நாடினால் வருகின்ற 07-08-2009 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமாகிய முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெறும் இந்த விழாவில் மீராப்பள்ளி முத்தவல்லி அப்துல் சமது ரஷாதி கிராஅத் ஓதுகிறார், தெளலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி வரவேற்புரையாற்றுகின்றார். மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல், அல்ஹாஸ் அறக்கட்டளை தலைவர் ஷேக் அலாவுதீன், நிர்வாகி காதர் ஹஸனா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் துணை முதல்வர், ரூஹூல் ஹக் பாகவி ரஷாதி, பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதர் மதனி ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவில் தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ரேடியன்ட் I.A.S அகடாமி கள்ளக்குறிச்சி இயக்குநர் ரஹ்மத்துல்லாஹ், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் நூருல் அமீன் ஹஜ்ரத், சிதம்பரம் அல்மதரஸதுல் ஆலியா தலைவர் இஸ்மாயில் நாஜி, நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் காஜா முயினுதீன் மிஸ்பாஹி, அல்மதரஸதுல் மஹ்மூதியா முதல்வர் சித்திக் அலி பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பட்டமளிப்பு விழாவினையொட்டி பெண்களுக்காக கிராஅத் போட்டி, பட்டம் பெறும் மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு ஆகியவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைப்பெறுகிறது. கடந்த ஆண்டு உள்ளுர் மாணவிகள் 8 பேர் மட்டுமே முபல்லிகா பட்டம் பெற்றனர், இந்த ஆண்டு பட்டம் பெறும் உள்ளூர் மாணவிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஸ் அறக்கட்டளை செயலாளர் செய்யது ஆரிப் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.