திங்கள், 2 பிப்ரவரி, 2009
ஜமா-அத் தேர்தல் : ஒரே நாளில் 3 பேர் மனுதாக்கல்
பரப்பாக எதிர்பார்க்கப்பட்டு எதிர்பாராத திருப்பங்களுடன் சுமுகமாக முடிவடைந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் பொதுக்குழு, அதை கொண்டாடும் வகையில் நேற்று நடைபெற்று முடிந்த ஊர் தாவத் என பரபரப்பு குறைந்திருந்த நிலையில் வரும் 15/பிப்ர/2009 -ல் நடைபெற இருக்கும் இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் தலைவர் பதவிற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.மனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
முழு விபரம் அறிய இங்கு சொடுக்கவும் அல்லது MYPNO இணையத்திற்கு செல்லவும்.
நாங்கள் வேண்டுமென்று புறக்கனிக்கவில்லை
இம்மாதம் நடைபெறவுள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்களுக்கு ஓட்டு போடும் உரிமையை மறுத்துவிட்ட தேர்தல் குழு, இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிற காரணத்தையும் சொல்லியிருக்கிறது. ஆனால் இது வெளிநாட்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் ஓட்டு (எப்படி) பொருந்தி வராது என்கிற காரணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்துக்கள் அதிகமாக NRI களிடையே எழுந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான I. இஸ்மாயில் மரைக்காயரை தொடர்பு கொண்டு கேட்டோம்.
"NRIகளை வேண்டுமென்று நாங்கள் புறக்கனிக்கவில்லை. இதில் சில சிக்கல்கள் இருந்து வருகிறது. குறிப்பிட்டு சொன்னால், இத்தேர்தலில் 4-5 ஓட்டு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற நேரிடுமேயானால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தை நாடினால், அது பல வகையில் சிக்கல்களை ஏற்படுத்தும். பிறகு இத்தேர்தல் நடந்தேறியதற்கான அவசியம் இல்லாமல் போய்விடும். எனவே இந்த ஆன்லைன் ஓட்டு முறையை இத்தேர்தல் குழு இதற்கு பொருந்தி வராது என்கிற முடிவை எடுத்துள்ளது" என்று கூறினார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...