கடந்த மூன்று ஆண்டு காலமாக சவூதி அரேபியா கிழக்கு மாகாண அமைப்பின் தலைவராக பொறுப்பாற்றிய MYPNO.COM ஆசிரியர் S.வஜ்ஹுதீன், அவ்வமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார்
சவூதி அரேபியா கிழக்கு மாகாண அமைப்பின், மாதாந்திர கூட்டம் கடந்த வெள்ளியன்று M.E.கவுஸ் மாலிமார் வசிப்பிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாக பட்டியல் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. MYPNO.COM ஆசிரியரும், கிழக்கு மாகாண அமைப்பின் தலைவராக கடந்த மூன்று ஆண்டு காலமாக பணியாற்றிய S.வஜ்ஹுதீனுக்கு S.K.காஜா முஹைய்யதீன் அமைப்பின் சார்பாக சான்றிதழ் வழங்கினார்.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டதேர்தல் குழு பல வெளிநாட்டு அமைப்புகளின் மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க தேர்தலை தவிர்த்து தேர்வு குழு மூலம் ஜமாஅத் பொறுப்பாளர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.