சென்னையில் நடைபெற்ற உலகலாவிய இஸ்லாமிய மாநாடு பற்றி அதில் கலந்து கொண்ட பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி
மாநாடு எப்படி இருந்தது?
மிகச்சிறப்பாக இருந்தது மாநாட்டு ஏற்பாடுகள், பேச்சாளர்கள், கலந்து கொண்ட மக்கள் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், அனைத்தும் நிறைவாகவும் பெருமிதம் கொள்ளதக்க வகையிலும் இருந்தன.
மாநாட்டின் சிறப்பம்சமாக நீங்கள் கருதுவது...?
சமுதாயத்தில் இன்றைய நிலையில், இது போன்ற மாநாடு உணர்த்தும் கொள்கைகள் தாண்டிய சகோதரத்துவ ஒற்றுமை, பல்வேறு கொள்கைகள் சார்ந்த சகோதரர்கள், மூஃமின் என்ற அடிப்படையில் தங்கள் முகமூடிகளை கழற்றிவிட்டு அங்கு தேடலாக அலைந்தது நல்லவிஷயம். இதைதவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் நடத்திய இஸ்லாமிய வகுப்புக்களும், பயிற்சி வகுப்புகளை(Workshop)யும் சொல்லலாம்.
பரங்கிப்பேட்டையிருந்து எத்தனை பேர் வந்தனர்?
தனிப்பட்ட முறையில் சகோதரர்கள் பலரும், அல்ஹஸனாத் மகளிர் கல்லூரி, மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் பள்ளிவாசல் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டும், விளம்பரங்கள் செய்யப்பட்டும் பிரயோஜனமிக்க விஷயங்களில் கலந்துகொள்வது என்பது நமதூரிpல் இன்னும் பழக்கமாகவில்லை என்பதை குறையாக அல்லாமல் ஆதங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அருகில் நெய்வேலியில் புத்தக கண்காட்சி, கடலுரர் சிதம்பரம் போன்ற நகரங்;களி;ல் பல விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், ஏன் தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் கூட நாங்கள் கவனித்த வரை பெரிய அளவிளான பரங்கிமாமக்களின் பங்கேற்பு இல்லை என்பது வருத்தம்தான். இந்த மனப்போக்கை வரும் இளைய சமுதாயத்தினரிடம் மாற்ற கல்விகுழு இன்ஷh அல்லாஹ் முயலும். துஆ செய்யவும் கோருகிறோம்.