பரங்கிப்பேட்டை ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற தலைப்பில்
10 , 11, 12ஆம் வகுப்புகள் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது
அன்வாருஸ்_ஸுஃபா
தீனியாத் மக்தப் மதரஸா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மீராப்பள்ளி நிர்வாகிகள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவருமான முஹம்மது யூனுஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மீராப்பள்ளி முத்தவல்லி ஜமால் முஹம்மது வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்வில் முனைவர் சாதிக் அப்துல் ஹமீது
தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து உரையாற்றினார்.
அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வின் நுணுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி சகோ.அலி அப்பாஸ் பேசியதை மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
தேர்வு குறித்தான இஸ்லாமிய பார்வை மேலும் தேர்வோடு சேர்ந்த இஸ்லாமிய முறை, தொழுகை, நிய்யத் போன்றவைகள் குறித்து மீராப்பள்ளி இமாம் அஹமது கபீர் மற்றும் ஹமீது மரைக்காயர் ஆகியோர் உரையாற்றினர்கள்.
நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் அரசு பள்ளி மாணவர்களின் வருகை சொற்பமாகவே இருந்தது.
உலகக்கல்வியும் மார்க்கக் கல்வியும் தனித்தனியாக பார்க்கப்படுகின்ற நிலையில் பள்ளிவாசல்கள் இதுபோன்ற கல்வி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது நிச்சயம் ஆரோக்கியமானது. மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
#MYPNOnews