சனி, 30 ஏப்ரல், 2011

ஜமாஅத்துல் உலமாவின் 7-ம் ஆண்டு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. ஏழாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் பள்ளி மாண-மாணவியர்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

கடந்த 16-ந்தேதி துவங்கிய இப்பயிற்சி வகுப்புகள் இன்றுடன் முடிவடைகிறது. கௌஸ் பள்ளி வாசலில் நடைபெற்று வரும் இப்பயிற்சிக்காக தேர்வுகளும் நேற்று நடைபெற்றது.
 

தேர்வில் வெற்றி பெற்ற மற்றம் கலந்துக் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு இன்று பரிசுகளும் வழங்ப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில், திருக்குர்ஆனை எப்படி முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவை இடம்பெ;ற்றதுடன், உலமாக்களில் சொற்பொலிவுகளும் நடைபெற்றன.

மின்சார வாரிய செய்திக்குறிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் இது நாள் வரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. நாளை (01-05-2010) முதல், நேரம் மாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை கணணிமயமாக்கப்பட்ட பரங்கிப்பேட்டை தபால் நிலையத்தில் செலுத்தலாம் என்றும் இதற்கான சேவைக் கட்டணம் ரூ.5 மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு: சமாதான கூட்டத்தில் முடிவு!

 
பரங்கிப்பேட்டை : மீன் வியாபாரிகளுக்கு, விசைப்படகு சங்கத்தினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்துவாரம் பகுதியில் வெளியூர் மீன்களை வாங்க விசைப்படகு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீன் வியாபாரிகளுக்கும், விசைப்படகு சங்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

இதுகுறித்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டி.எஸ்.பி., நடராஜன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடந்தது.விசைப்படகு சங்கம் சார்பில் சங்கர், சுப்ரமணியன், நாகராஜன், சீனிவாசன், ஜெகதீசன் ஆகியோரும், மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலு, துணைத் தலைவர் ராமலிங்கம், அரவிந்தன், செழியன், ராஜேந்திரன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வரும் மே மாதம் 6ம் தேதி வரை அந்தந்த பகுதியில் பிடிக்கும் மீன்களை அந்தந்த பகுதிகளிலும் அதன் பிறகு வழக்கம் போல் பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் விற்பனை செய்யலாம். மீன் வியாபாரிகளுக்கு, விசைப்படகு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...