பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 8 மே, 2011 0 கருத்துரைகள்!
பரங்கிப்பேட்டை பாத்திமா நகரில் அப்துல் பாரி அவர்களின் சகோதரி மைமூன் பீவி வீட்டில் இன்று பகல் சுமார் 1.30 மணி அளவில், சமையலில் ஈடுப்பட்டிருந்த போது எரிந்து கொண்டிருந்த கொட்டாங்குச்சி, வெடித்து சிதறியதில் மேற்கூரைக்கு தீ பரவி பணம், ரேஷன் கார்டு, துணிகள், டீ.வி. மிக்ஸி , பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக தீக்கிரையானது., உடனடியாக பொதுமக்கள், தீயணைப்பு துறையினர் ஒன்று திரண்டு தீ அணைக்கும் பணியில் ஈடுப்பட்டதால், தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆறுதல் கூறி, அரசின் நிவாரணத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். கிராம நிர்வாக அதிகாரியும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டறிந்தார்.

படங்கள்: இஸ்மாயில்
மேலும் வாசிக்க>>>> "பாத்திமா நகரில் தீ விபத்து"

4 கருத்துரைகள்!

மார்ச் 2 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை காலையில் வெளியிடப்பட உள்ளன. இதற்கான அனைத்துப் பணிகளும் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தன. . இந்தத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர். இதனையொட்டி இறைவன் நாடினால் நமது இணையத்தளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு முடிவுகளும் நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க>>>> "MYPNO.COM -ல் +2 தேர்வு முடிவுகள்"

1 கருத்துரைகள்!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், வேலூர் ஆகிய இடங்களில் நேற்று சனிக்கிழமை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவானது. அதன் விவரம் வருமாறு: வெப்பநிலை (ஃபாரன்ஹீட்டில்) சென்னை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பரங்கிப்பேட்டை 104, சென்னை மீனம்பாக்கம், வேலூர் 108, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், புதுச்சேரி 102, கடலூர் 100. குறைந்தபட்சமாக உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய ஊர்களில் 72 டிகிரி வெப்பம் பதிவானது என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "கொளுத்தும் கோடை..!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234