பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008 2 கருத்துரைகள்!

இது மட்டும் மாறலீங்க.....
நம் ஒவ்வொருவருக்கும் ரமலான் மாத நினைவுகள் என்று டன்கணக்கில் அழகிய நினைவலைகள் மனதில் புதைந்திருக்கும். நம் சிறுவயதில் ரமலான் என்பது கொண்டாட்டங்களின் மாதம். தராவீஹ் தொழுகைக்கு பிறகு துவங்கும் தெரு விளயாட்டுக்கள், சஹர் நேர ஒளிபரப்பில் நாக்கு மணி மூக்கு நிமிடம் என்று கும்மியடிக்கும் குறும்புத்தனங்கள்... அரைத்தூக்க மயக்கத்திலும் மூன்று வகை உணவுகள வகையாய் முடித்துவிட்டு தொழுகைக்கு கிளம்பும் சின்ஸியாரிட்டி.... முட்லூருக்கோ, கடற்கரைக்கோ.. சைக்கிள் பயணங்ள்.. தெருக்கள சுத்தம் செய்யும் களப்பணிகள்... என
ரமலான் என்பது கொண்டாட்டங்களின் மாதம்.
குறிப்பாக 27ம் கிழமை ஜொலிக்கும் இறையில்லங்கள், மணக்கும் புத்துடைகளுடன் குஞ்சுகுலுவான்கள்.. இனிய நாதத்துடன் நீட்டி முழங்கப்படும் இரவு வணக்கங்கள்...

ஆனால்... நாம் பார்ப்பது உண்மையோ, அல்லது நமக்குதான் வயதாகிவிட்டதோ தெரியவில்லை... இப்போதெல்லாம் ரமலான் இரவுகள பழைய பொலிவுடன் பார்க்கமுடியவில்லை..
தராவீஹிற்கு வரும் கூட்டமாகட்டும்,
வெளியே வெட்டியடிக்கும் குழுக்களாகட்டும்,
பயான் செய்யும் சிறு இளஞர்களாகட்டும்,
சலாத்துல் லைல் தொழுகைக்கு இரவில் பள்ளியில் கூடும் இளஞர் கூட்டமாகட்டும்...
ம்ஹூம்... மிகப்பெரும் வெற்றிடத்தை காண முடிகிறது...
ஒரே ஆறுதல்...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில்... பிரச்சாரத்தில் தப்பி பிழைத்திருக்கும் சில அழகியல் விஷயங்களில் ஒன்றான 27ம் கிழமை...

எப்படி மங்கிப்போனது இந்த ரமலான் இரவின் வெளிச்சங்கள்?
எங்கே பறிபோனது எம் இளம் சிறார்களின் துடிப்புக்கள்? கொண்டாட்டங்கள்? அமைப்பு சார்ந்த மார்க்க பிரச்சாரங்கள விடுங்கள்... தனிப்பட்ட முறையில் இளஞர்களால் நடத்தப்படும் சிறு சிறு இஸ்லாமிய விழிப்புணர்வு கூட்டங்களகூட காணவே காணோமே...
நம் சிறார்கள டி.வி. முடக்கி போட்டுவிட்டதா?
அல்லது பணம் ஈட்டும் மிஷின்களாக மட்டும் தமது பிள்ளகள வளர்த்தெடுத்து வரும் பெற்றோர்கள் காரணமா?
முழுக்க முழுக்க கல்வியிலேயே மூழகிபோய்விட்டார்களா?
என்ற குழப்பத்தில் நாமிருக்கையில்....

கரை மக்கிய அழுக்கு துப்பட்டிகளுடன்
பணிக்கும் கண்களில் தெறிக்கும் வெட்கத்துடன்...
பிச்சை ஈர்க்கும் factor ஆக தங்கள் சிறு பிள்ளகள ஏந்திக்கொண்டு...
அசட்டு சிரிப்புடன் வீடுவீடாய் ஏறி இறங்கி பிச்சைஎடுக்கும்
எம் சகோதரிகள் தெருவெங்கும்....
இது மட்டும் இன்னும் மாறவேயில்லை என்ற மனதை அறுக்கும் ரண வேதனையுடன் நாமும் ரெடியாவோம் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு..

இறைவன் வகுத்தளித்த வாழ்நெறியை உண்மையாகவே உணர்ந்திருந்தால் இதை கண்டு விம்மி வெடிக்காதோ நம் மனம்?
ஜகாத்தை விதித்த படைப்பாளன் நம்மை எந்த கேள்வியும் கேட்காமல் விட்டுவிடுவானா என்ன?
மேலும் வாசிக்க>>>> "விம்மி வெடிக்காதோ நம் மனம்?"

புதன், 24 செப்டம்பர், 2008 11 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டையில் ஒரு மாநில சாம்ப்பியன்.....
மாநில அளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டி (Professional Boxing) 21, மற்றும் 22 செப்டம்பர் அன்று கடலூர் அண்ணா விளயாட்டு அரங்கில் நடைபெற்றது. 63 - 65 kg வெல்டர் வெயிட் ( Welder Weight ) பிரிவில் மாநில சாம்ப்பியன் பட்டத்தை நமதூரை சேர்ந்த சகோதரர். ஹ.ஹமீது கவுஸ் அவர்கள் வென்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

 நமதூரில் இருந்து குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் சாம்ப்பியன் பட்டத்தை பெற்ற முதல் மற்றும் ஒரே சகோதரர் இவர்தான். 

        கிரிக்கெட், பால் பேட்மின்டன் தவிர வேறு மாற்று விளயாட்டுக்கள இல்லை என்பதான பிம்பம் நம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட இந்த காலத்தில் குத்துச்சண்டை போன்ற தீரமிக்க, ரிஸ்க் (இதற்கு சரியான தமிழ் வார்த்தை இப்னு ஹம்துன் முதலியோர் பிரதியிடலாம்.)  நிறைந்த விளயாட்டினை ஊரில் அறிமுகப்படுத்தி, அதில் கடுமையான பயிற்சியும் மேற்கொண்டு சாதித்து காட்டியுள்ளார் நமது இந்த சகோதரர். 

தனது சாதனையை ஏக இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிப்பதாக கூறி நம்மிடம் பேசிய சகோதரர். ஹமீது கவுஸ் அவர்கள் இதுபோன்ற வலிமையை நிருபிக்கும் உண்மையான விளயாட்டுக்களுக்கு உரிய இடம், உபகரணப்பொருட்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் இல்லாமல் இருப்பது சாதிக்க துடிப்பவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும்  பெரும் பின்னடைவாக இருக்கும் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

பரங்கிப்பேட்டையை சார்ந்த சமுதாய ஆர்வலர்களும், தனவந்தர்களும், இந்நிலையை நீக்கி இது போன்ற விளயாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க முன்வர வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கை தெரிவித்தார்.

               இதுவிஷயத்தில் பயிற்சிப்பொருட்கள், ஊக்கத்தொகைகள் கொடுத்து தனது சக்திக்கு மீறி ஆரம்பம் முதலே பெறும் ஊக்கமளித்து வந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தினையும், அதன் தலைவர் ஜனாப். முஹம்மது யூனுஸ் அவர்களின் தனிப்பட்ட உதவிகளயும் நன்றியுடன் நினைவுகூர்நதார்.

மேலும், சிறப்பான பயிற்சியும், பயிற்சியளவில் மிக ஊக்கமும் கொடுத்த மாநில தொழிற்முறை குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர். ஜி.பி.மகேஷ் பாபு அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார் கல்விக்குழுவின் இந்த மூத்த உறுப்பினர். 

இவரின் அடுத்த இலக்கு... வருகின்ற டிசம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள தேசியஅளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் சாம்ப்பியன் பட்டத்தை வெல்வதுதான். 

மிகசமீபத்தில் தன் வாழ்வில் மிகப்பெரும் இழப்பு ஒன்றினை சந்தித்தாலும் அல்லாஹ்வின் அருள கொண்டு இத்தனை தூரம் சாதித்துகாட்டிய சகோதரர் ஹமீது கவுஸ்அவர்களுக்கு mypno வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள்

மேலும் வாசிக்க>>>> "மஹ்மூத்பந்தரில் ஒரு முஹம்மது அலி...!!!"

வெள்ளி, 19 செப்டம்பர், 2008 0 கருத்துரைகள்!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சின்னக்கடை மார்க்கெட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆடு அடிக்கும் கூடம் நேற்று திறந்த வைக்கப்பட்டது. சுகாதரமற்ற சூழலில் ஆடுகள் வெட்டப்படுவதை தவிர்க்கும் பொருட்டு 1.50 லட்சம் செலவில் அமைக்கபட்டுள்ள இந்த கட்டிடத்தை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்த கொண்டனர்.

மேலும் சின்னக்கடை மார்க்கெட்டில் முன்பு பயன்பாட்டிலிருந்த இரண்டு வழிகளும் அடைக்கப்பட்டு மார்கெட் வளாகத்தின் பின்புறம் புதிய வழி உருவாக்கபட்டுள்ளதால் சின்னக்கடை மார்க்கெட்டை அதன் முழு அளவில் பயன் படுத்திக்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க>>>> "சின்னக்கடை மார்க்கெட்டில் ..."

புதன், 17 செப்டம்பர், 2008 1 கருத்துரைகள்!

* வங்கி திவால் ஆகிவிட்டதாக ஏற்பட்ட புரளியால் கச்சேரி தெரு விழாகோலம் கட்டியது.
* இன்று மட்டும் 3 முறை ATM-ல் பணம் நிரப்பட்டது.
* கையிருப்பு தீர்ந்தும் 3 முறை பணம் பெறப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.
* இரவு 8.30 மணி வரையிலும் தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து செல்கின்றனர்.
* நாளை காலை 7.30 மணிக்கு வங்கி திறக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
* இன்று மடடும் தோரயமாக 3 கோடிக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டதாக வங்கி வட்டாரம் தெரிவிக்கிறது.
* இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.
* இது வதந்தி என்று ஓரளவு எல்லோருக்கும் தெரிந்திருந்தும் மக்கள் (குறிப்பாக பெண்கள்) முற்றுகையிட்டவாறே உள்ளனர்.

குறிப்பு: இந்த வதந்தியானது பரங்கிப்பேட்டை மற்றும் ஓரிரண்டு ஊர்களில் மட்டுமே பரவியது.
மேலும் வாசிக்க>>>> "ICICI திவால் வதந்தி: லேட்டஸ்ட் அப்டேட்."

2 கருத்துரைகள்!

ICICI பாங்கின் பிரதான முதலீட்டு நிருவனமான லிமென் பிரதர்ஸ் பாங்க் திவால் ஆனதை தொடர்ந்து, அதன் எதிரொலி ICICI பாங்கின் பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, முதலிட்டாளர்கள் அச்சம் காரணமாக தனது முதலீடு மற்றும் பங்குகளை திரும்ப பெருகிறார்கள். இதன் காரணமாக கச்சேரி தெருவில் அமைந்துள்ள ICICI பாங்கில் சுமார் 12 மணியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கூடி தனது முதலீட்டை திரும்ப பெற்றனர், குறிப்பாக நமதூர் பெண்கள் ATM மையத்தில் நீண்ட வரிசையில் நின்று தனது முதலீட்டை திரும்ப பெறுவதற்க்கு பதற்றதுடன் காத்து கொண்டுயிருந்தனர் .மேலும் சிலர் தனது வங்கி லாக்கரில் வைத்துள்ள தனது நகைகலையும் திறும்ப எடுத்து சென்றனர். இதனையடுத்து ஏராளமானோர் வங்கி மேலாளரை முற்றுகையிட்டு விளக்கம் கேட்டனர், இது குறித்து அவர் தெருவிக்கையில், இது பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய வீழ்ச்சிதான், இது குறித்து முதுலீட்டார்கள் அச்சபட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதுலீட்டார்கள் தனது முதுலீட்டை என்நேரத்திலும் பெற்றுக்கொள்ளாம் என்று தெருவித்தார். இதையடுத்து ICICI பாங்க பரங்கிப்பேட்டை கிளை மாலை 6 மணிவரை செயல்படும் என்று கூறினார்

இதன் காரணமாக கச்சேரி தெருவில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டு சிறிது பரப்பரப்புடன் கானப்பட்டது

மேலும் வாசிக்க>>>> "ICICI திவால் திருவிழா....."

செவ்வாய், 16 செப்டம்பர், 2008 1 கருத்துரைகள்!

1. கலிமா நகரில்...
மர்ஹூம் முஹமது இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மனைவியும் காட்டானை ஷேக் காமில் அவர்களின் மாமியாருமாகிய் ஹலிமா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

2. வானுவர் தெருவில்...
சின்னத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் செய்பாய் அவர்களின் மகளாரும், மர்ஹூம் கவுஸ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது உசேன் (லெப்பை), அப்துல் உசேன், முஹம்மது இஸ்மாயில், பஷீர் பண்டாரி இவர்களின் சகோதரியுமான ஜொஹாரா பீ அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்திகள்"

6 கருத்துரைகள்!மதங்களில் கடவுள் கொள்கை மற்றும் பிற சமயத்தவருடனான புரிந்துணர்விற்காக மதுரை இறையியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 34 கிறிஸ்துவ சகோதரர்கள் நேற்று 15.09.2008 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வந்திருந்தனர்.

மீராப்பள்ளி பேஷ்இமாம் ஜனாப் அப்துல்லா அவர்களும், ஜனாப். அப்துல் காதிர் மதனி அவர்களும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கையை பற்றியும், பைபிளில் கிறிஸ்துவை பற்றி கூறப்பட்டவை பற்றியும், குர்ஆனின் பார்வையில் ஏசுநாதர் என்பவர் இறைவன் அல்ல, இறைவனின் செய்தியை மக்களுக்கு சுமந்து வந்த ஒரு தூதர் எனவும், இறைவன் மூவர் அல்ல ஒருவராகத்தான் இருக்கமுடியும் எனவும், இறைவன் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்பதனைப்பற்றியும் மிக விரிவாக பைபிளில் இருந்தே ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்கள். வேதமளிக்கப்பட்டவர்கள் என்று குர்ஆன் அவர்கள பரிவுடன் அழைப்பதாக மதனி அவர்கள் குறிப்பிட்டு பேசி அவர்களின் வேதத்தையும், குர்ஆனையும் திறந்த மனதுடன் படித்துப்பதர்த்து நேர்வழி பெறுமாறு வேண்டினார். 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த உரைகள வந்திருந்த கிறிஸ்துவ சகோதரர்கள் பொறுமையுடன் அமர்ந்திருந்து கேட்டனர். ரமலான் காலமாக இருந்ததால் வந்திருந்த விருந்தினர்கள சரியான முறையில் உபசரிக்க இயலாமல் போனது குறித்து மீராப்பள்ளி நிர்வாகம் தனது வருத்தத்தை வெளியிட்டாலும் நல்ல சில உணவு ஏற்பாடுகள செய்து இருந்தது. 

இம்மாதிரியான புரிந்துணர்வு அமர்வுகள் நமதூருக்கு புதிது என்றாலும் திரளான பொதுமக்கள் அமைதியுடன் கலந்து கொண்டு உரையினை கேட்டனர். இனியாவது உலகமக்களுக்கான இறைவனின் செயதியை மாற்று மத சகோதரர்களுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியின் அருமை நமக்கு புரிபடுமா?
மேலும் வாசிக்க>>>> "கிறிஸ்துவ சகோதரர்கள் வருகை"

திங்கள், 15 செப்டம்பர், 2008 1 கருத்துரைகள்!

மிக நீண்ட காலமாக சாபக்கேடாகவே இருந்து வந்த பெரியத்தெருவின் சாலைப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக தரமான தார் சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முன்பைவிட அகலமான மற்றும் தரமான சாலையை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை ஆலப்பாக்கத்திலிருந்து ஆரம்பித்து புதிய படகு குழாம் வரை முடிவடைகிறது.
மேலும் வாசிக்க>>>> "பெரியத் தெரு சாலைக்கு விடிவுக்காலம்"

2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதரில் உணவகம், பூங்கா மற்றும் குடில்களுடன் எழில்மிகு படகு குழாம் அமையப் பெற்று வருகிறது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை படகு குழாம்: புகைப்படத் தொகுப்பு"

வெள்ளி, 12 செப்டம்பர், 2008 3 கருத்துரைகள்!

நாகரீகத்தில் முன்னேறிவிட்டோம் என்று நாம் மார்தட்டிக்கொள்ள முடியுமா?


மரத்தடியில், மணலில் அமர்ந்து மாணவ மாணவிகள் கல்வி பயிலும் இந்த காட்சி எங்கோ தென்தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்டதல்ல. சுமார் 105 வருடங்கள் பழமையான பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் தான் இந்த காட்சி.


ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கென்றும், அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கென்றும் அரசும், பொதுமக்களும் மிக முயற்சி செய்து வருகையில் இந்த குறிப்பிட்ட பள்ளி ஒரு விதிவிலக்காகவே உள்ளது. 8 ஆம் வகுப்பு வரை சுமார் 240 மாணவ மாணவியர்கள் பயிலும் இந்த பள்ளியில் அரசு ஒதுக்கீட்டின் படி கூட இல்லாமல் 4 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிம் கொடுமை. ( அரசு நிர்ணயத்தின் படி 6 அல்லது 9 ஆசிரியர்கள் இருக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் 25 க்கு 1 என்று ஆரம்ப கோஷங்கள் இட்டு அவர்கள் அடிக்கும் கூத்து நாமறிந்ததே).


கும்மத்பள்ளிவாசலின் இடத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு காலி இடத்தை காட்டினால், தற்போதுள்ள ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக கான்கிரீட் சீலிங் கட்டிடம் ஒன்றினை எஸ்எஸ்ஏ (S.S.A.) திட்டத்தின் கீழ் கட்டிதர அரசாங்கம் முன்வந்தபோது, அது குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், பள்ளிவாசல் நிர்வாகம் ஒத்துக்கொள்ளாததால் அந்த திட்டம் காலவதியானது.

ஏபிஎல் எனும் விளயாட்டு முறை கல்வி திட்டம் அருகிலிருக்கும் சிமெண்ட் சீலிங் கட்டிடத்தில் நடைபெறுகிறது. சில காலம் முன்பு வரை தட்டு ஓடு போடாமல் பெயர்ந்து ஓட்டை உடைசலாக கிடந்தது. மழை நேரம் என்றால் இரண்டு கட்டிடத்திலும் இருக்க முடியாத நிலை இருந்தது.


இடப்பற்றாக்குறையினால் சில வகுப்புகள் நிரந்தரமாக பக்கத்திலுள்ள கவனிப்பாரற்ற தர்கா வளாகத்தில் இப்போதும் நடக்கின்றன.


இன்னொரு கொடுமை.. மாணவர்களின் கல்விநலனிற்காக இப்பள்ளிக்கு 2 புத்தம் புதிய கம்ப்யூட்டர்களை அரசாங்கம் வழங்கியது. அது மொத்தம் 2 நாட்கள் மட்டுமே அங்கு இருக்க முடிந்தது. கட்டிட வசதி மற்றும் பாதுகாப்பின்மையை கருதி அந்த 2 கம்ப்யூட்டர்களும் அரசிடமே திருப்பி அளிக்கப்பட்ட கொடுமையும் நடந்தது.

இந்நிலையில், ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்களின் முன்முயற்சியில் சுமார் 1.50 லட்சம் செலவில் புதியதாக ஓடுகள், தட்டுஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது ஆறுதலான செய்தி.

இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், நமது தந்தைமார்களும், பாட்டன்மார்களும் படித்த இப்பள்ளியினை இடித்து விட்டு அந்த இடத்தில் திருமண மண்டபமும், கடைகளும் கட்ட திட்டமிடப்பட்டு வருவதாக பள்ளிவாசலின் நிர்வாக மட்டத்திலிருந்தே தகவல்கள் கசிகின்றன.

MYPNO வலைப்பூவின் சிறு ஆய்வில், ஊரின் மற்ற பள்ளிகள விட (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தவிர்த்து) கல்வித்தரம் இந்த நடுநிலைப்பள்ளியில் சிறப்பாகவே உள்ளது தெரியவந்தது.

ஆனால்

ஆசிரியர்கள் பற்றாக்குறையும், அங்கு நிலவும் குடிநீர் வசதியின்மையும், (பைப்கள் திடீர் திடீரென காணாமல் போதல்) மிகப்பெரும் பிரச்சனைகளாக உள்ளன.

மேலும் அங்கு பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் சிலரின் முறையற்ற மற்றும் கவனிப்பாரற்ற போக்கும் ஆசிரியர்களுக்கு தங்கள் கடமையை செய்வதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

நிலைமை மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை 2008 ஆம் ஆண்டா அல்லது 1908 ஆம் ஆண்டா?"

வியாழன், 11 செப்டம்பர், 2008 1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை அருகே முதியோர் இல்லம் திறப்பு


பரங்கிப்பேட்டை அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முதியோர் இல்லத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு திறந்து வைத்தார். சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் உத்திரபிரதேச எம்.பி.,க்கள் சைலந்திர குமார், ராம்கோபால் வர்மா, பிரிஜ்பூஷன் சரன்சிங் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதி உதவியுடன் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் முதியோர் இல்லம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது.


கலெக்டர் ராஜேந்திர ரத்னு இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது: இக்கட்டடத்திற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதியோர் இல்லத்தினை கிரீடு தொண்டு நிறுவனம் நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. இங்கு 25 முதியோர்கள் தங்க உள்ளனர். இதன் பராமரிப்பிற்குரிய உதவிகள் மத்திய அரசின் மூலம் பெற்றுத் தரப்படும். முதியோர் தங்கள் பொழுதுபோக்கிற்காக காய்கறி தோட்டம், பூந்தோட்டம் அமைத்து அதன் பயன்களை பெற வேண்டும். அடுத்தாண்டு இந்த இல்லத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என்றார்.


முன்னதாக சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். டி.ஆர்.ஓ., கணேஷ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு சேர்மன் முத்துப் பெருமாள், கொத்தட்டை ஊராட்சித் தலைவர் தங்கபாண்டியன், சென்டெக்ட் இயக்குனர் பச்சைமால், கிரீடு செயலாளர் நடனசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். சுப்பையன் நன்றி கூறினார்.


திருமண உதவி திட்டத்தில் 23 பேருக்கு காசோலை


பரங்கிப்பேட்டையில் திருமண உதவி திட்டத்தில் 23 பெண்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள 23 இளம்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது.

பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு சேர்மன் முத்துப்பெருமாள் தலைமை தாங்கி, காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர்கள் ராமச்சந்திரன், நடராஜன், மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.


நன்றி : ஒரு காலை நாளிதழ்
மேலும் வாசிக்க>>>> "பத்திரிகைகளில் பரங்கிப்பேட்டை செய்திகள்"

புதன், 10 செப்டம்பர், 2008 4 கருத்துரைகள்!

ஜனாப் யூனுஸ் நானா உடைய மூத்த சகோதரி ஹமீத் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று 10/09/2008 - 10 மணிக்கு ஹிளுர்நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்: சகோ.ஜியாவுத்தீன்
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

0 கருத்துரைகள்!

கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைதொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தகவல்

கடலூர், செப். 10-
கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடக்கிறது என்று தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்தார்.

நேரடி சேர்க்கை
அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் செம்மண்டலத்தில் அமைந்திருக்கும் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்புள்ள பல தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற் பிரிவிற்கான சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. மேலும் பிற்படுத்தப்பட்ட மகளிருக்கான சில இடங்கள் காலியாக உள்ளன.
இதில் சுருக்கெழுத்து தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்).

கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும், துணி வெட்டுதலும், தைத்தலும் பிரிவுக்கு குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம். சுருக்கெழுத்து தட்டச்சு (ஆங்கிலம்) பிரிவில் தற்போது புதிய பாடத்திட்டத்தின்படி கணினி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவற்றிற்கான நேரடி சேர்க்கை வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றுடன் நேரில் வந்து முதல்வரை சந்தித்து பயிற்சியில் சேரலாம். ஆண்டு கட்டணமாக ரூ.145-ம், விண்ணப்பக்கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் சேரலாம்

இதே போல மற்றொரு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கடைசலர் மற்றும் பிளாஸ்டிக் குழைம வழிமுறை பணியாளர் தொழிற்பிரிவுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதில் சேர பிளஸ்-2, மற்றும் 10-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், ரூ.205 ஆகியவற்றுடன் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நேரில் வரவேண்டும்.
இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

நன்றிகள்: 1).தினத்தந்தி
2). சகோ. அ.பா. கலீல் அஹமது பாகவீ
மேலும் வாசிக்க>>>> "கடலூர் ஐ.டி.ஐ யில் நேரடி சேர்க்கை- தினத்தந்தி செய்தி."

0 கருத்துரைகள்!

சவுதி அரேபியாவின் அல்-ஜுபைல் நகரில் பணிபுரிய பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
இதுபற்றிய மின்மடல் விபரம்:

As Salam W Aleikum W Rehmatullahe w Barakato.

How r u ?

Here is
the list of 18 Visa which r in my hand.

1. B.E Mechanical Engineer
2. B.E Electrical Engineer
3. B.E Instrument Engineer
4. B.E Civil
Engineer
5. B.E Chemical Engineer
6. Safety Officer


Job
Location Al Jubail

Visa Free
Ticket Free
Medical Free
Accomdation Free
Food Free
Transportation Free

Immediate
Departure please send me C.V on this mail.
Best Regard's


Tabrez
Qureshi
Emarah Al Jubail
Project's Incharge
055 786 51 77

தகவல் உதவி: சகோ.ஜவ்வாத் ஹுசைன் அவர்கள்
மேலும் வாசிக்க>>>> "ஜுபைல் : பொறியாளர்கள் தேவை!"

புதன், 3 செப்டம்பர், 2008 6 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் ராஜஸ்தான் அரசு ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுத்த மருத்துவமனை கட்டடம் ஒரு ஆண்டாக திறக்கப்படாமல் பாழாகி வருகிறது.பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனை உள்ளது. சுற்று வட் டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டு, வெளி நோயாளிகள் வார்டு, எக்ஸ்ரே, ஸ்கேன் உட்பட அனைத்து வசதிகளும் உள் ளது. ஆனால் போதுமான கட்டட வசதி இல்லாததால் நோயாளிகளும், டாக்டர் கள், ஊழியர்களும் இட நெருக்கடியால் அவதிப் பட்டு வந்தனர். மருத்துவமனை கட்டடம் விரிசல் ஏற்பட்டிருந்ததால் அச்சத்திலும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுவதற்காக வந்த ராஜஸ்தான் அரசின் அதிகாரிகள் குழுவினரிடம் மருத்துவமனை நிலை குறித்து பொதுமக்கள் எடுத்து கூறினர். அதையடுத்து பரங்கிப் பேட்டை மருத்துவமனைக்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்க முடிவு செய்தது. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிதரப்பட்டது.மருத்துவமனை கட்டப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் பயனற்று பூட்டியே கிடக்கிறது. நோயாளிகளும், டாக்டர்களும் இடவசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுத்தால் நோயாளிகள் பிழைப்பார்கள்.

நன்றி: நாளிதழ் செய்தி
தகவல்: குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
மேலும் வாசிக்க>>>> "4.ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அவலம்"

செவ்வாய், 2 செப்டம்பர், 2008 4 கருத்துரைகள்!

தேவையானப் பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
கொத்து கறி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.
நன்றி :arusuvai.com
மேலும் வாசிக்க>>>> "சமையல் குறிப்பு: நோன்புக் கஞ்சி சமைப்பது எப்படி?"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மாதாகோயில் தெருவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துணை இயக்குநர் மீராவிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மினிலாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தகவல்: குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
மேலும் வாசிக்க>>>> "புகைப்படச் செய்திகள்"

திங்கள், 1 செப்டம்பர், 2008 4 கருத்துரைகள்!

முன்சிரிப்பு.. சாரி குறிப்பு : இது ஒரு கற்பனை சிறுகதையே; ( உண்மையாகி விடக்கூடாது...)
பரங்கிப்பேட்டை.
2108 ம் வருடம், ஒரு பிப்ரவரி மாத அதிகாலை பொழுது.
முஹம்மது இபுராஹீம் ஒரு முக்கிய அலுவலாக தலைநகர் சென்னைக்கு அருகிலுள்ள துணைதலைநகரான சென்னை phase III க்கு செல்ல காஜியார் தெருவிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.
புவியீர்ப்பு அணுசரனை வாகனமான "டோட்டோ" அவருக்காக வாசலில் காத்திருக்க அதிலேறி (பழைய) பஞ்சங்குப்பம் அருகில் அமைந்திருந்த "ஏரோஸ்பாட்டுக்கு" வந்து சேர்ந்தார். அங்கே அவருக்காக முன்பதிவு செய்யப்பட்டு காத்திருந்த அரசு ஏரோகிராப்டில் ஏறி அரை மணித்துளியில் துணைதலைநகருக்கு வந்து சேர்ந்தார். நகரில் அவருக்கிருந்த அலுவல்கள முடித்துக்கொண்டு தனது நண்பர் செல்வத்துடன் மீண்டும் மதியம் 2 மணிக்கெல்லாம் பரங்கிப்பேட்டை திரும்பிவிட்டார். வரும் வழியில் ரசாயன கழிவு காடாக மாறி மனிதர்கள் செல்ல அனுமதியற்ற பிரதேசமாக சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் அரசால் அறிவிக்கப்பட்டுவிட்ட "கடலூர் சிப்காட்" பகுதியை தூரத்தில் பார்த்தவாரே வந்தார்.

பரங்கிப்பேட்டைக்கு வந்த பின்னர், பிற்பகல் தனது சென்னை நண்பருக்கு பரங்கிப்பேட்டையை சுற்றி காண்பிக்க கிளம்பினார். கலிமா நகரிலிருந்த பொலிவான ஒரு பள்ளிவாசலை தனது நண்பருக்கு காண்பித்து
"சுமார் 100 வருடம் பழைமையான பள்ளிவாசல் இது." என்றார்.
நெடுந்துயர்ந்த பல கட்டிடங்கள் கொண்ட பரங்கிப்பேட்டையை சுற்றி வந்தவர் உயரமான கட்டிடம் ஒன்றினை சுட்டி
"இதுதான் எங்களின் நகராட்சி " என்றார். பிறகு கொம்மத்பள்ளி தெருவழியாக வந்தவர் ஒரு பாழடைந்த, இடிந்த கட்டிடத்தை சுட்டிகாட்டி "இதுதான் பல நூறு ஆண்டுகள் பழைமையான ஒரு புதிய பள்ளி. மக்கள் யாரும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு பயந்து எதுவும் கேட்காமல் விட்டுவிட்டதால் இன்றுவரை இந்த இறையில்லம் இப்படிதான் இருக்கிறது." என்று வருத்தத்துடன் சொல்லி நகர்ந்தார்.

பிறகு பரங்கிப்பேட்டையின் வியாபார மையமான சஞ்சிவிராயர் கோவில் ஸ்கொயர் பகுதிக்கு வந்தவர், உயர்ந்த வியாபார கட்டிடங்களுக்கு இடையில் நெருக்கியடிக்கும் டிராபிக்கை சீர் செய்ய கட்டப்பட்டிருந்த fly over (மேம்பாலம்) ஏறி கடந்து கெச்சேரி தெருவுக்கு வந்தார். எல்லாபுறமும் உயர்ந்தோங்கி இருந்த கட்டிடங்கள உற்சாகமாய் பார்வையிட்டு வந்தவர், ஒருபுறம் பரிதாபமாக, இடிந்துபோய், பாழடைந்த நிலையில், உபயோகப்படுத்தப்படாமல் கிடந்த கட்டிடத்தை பார்த்தவர், மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் : " இந்த அரசு மருத்துவமனையை என்றுதான் திறப்பார்களோ ...? "
மேலும் வாசிக்க>>>> "என்று தணியும் இந்த ..."

5 கருத்துரைகள்!


பரங்கிமா நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சேவையில் போக்குவரத்து பணியை தொடர்ந்தது அரசுப்போக்குவரத்து கழகம். இதன்படி இரவு 10 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று ஞாயிறு என்பதால் அதிகமான பயணிகள காண முடிந்தது.


இதுபற்றி இப்பேருந்தின் நடத்துனர் கூறியதாவது : "இப்புதிய பேருந்தின் சேவை சிறப்பாக அமைய இவ்வூர் மக்கள் ஆதரவளித்தால்தான் இதனை எக்ஸ்பிரஸ் சேவையாக தொடர முடியும்." இப்பேருந்து சேவையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.


"இது எங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் எங்களின் மிகப்பெரிய சிரமம் குறைந்துள்ளது." என்கின்றனர் சென்னை கல்லூரிகளில் படிக்கும் பரங்கிப்பேட்டை மாணவர்கள்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை to சென்னை எக்ஸ்பிரஸ்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234