பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் அருகே அமைந்துள்ள ஜெய்லானி காம்பிளக்ஸ் வளாகதில் அமைந்துள்ள சவுதியா டைம் சென்டர் மற்றும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் ஆகிய இரு கடைகளிலும் இன்று அதிகாலை சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவாடபட்டுள்ளது.
இக்கொள்ளை சம்பவத்தில் சவுதியா டைம் சென்டர் கடையில் சுமார் 40,000 மதிப்புள்ள மொபைல் போன்கள், கைகடிகாராங்கள் மற்றும் ரொக்கமாக 2500 ரூபாயும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் கடையில் சுமார் 20,000 மதிப்புள்ள துணிமணிகள், ஆபரன மற்றும் வாசனை திரவிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறும் போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு அறியாத நபர் தன்னுடன் புவனகிரி வரை பயணித்ததாகவும், அந்நபரிடம் இருந்த இருபைகளில் நிறைய பொருட்கள் வைத்திருந்தகவும் போலிஸ் விசாரனையில் தெரிவித்தார்.
புகாரை அடுத்து, இத்திருட்டு சம்பவதில் தொடர்புடைய நபர், அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரனை நடத்தி வருக்கிறார்கள்.
இத்தகைய திருட்டு பரங்கிப்பேட்டையில் அரிதான ஒன்று என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.