கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்திய ஓவிய போட்டி பற்றி....
பரங்கிபேட்டையில் தீண்டத்தகாத போட்டி போன்று கருதப்பட்ட ஓவியபோட்டிகளை காபத்துல்லாஹ் எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் கல்வி குழு துவக்கி வைத்தது.
அருமையான ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு சிறந்த முறையில் திட்டமிட்டு professional ஆக நடத்தி காண்பித்த கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நிச்சயம் பாராட்டுக்குரியது.
நாக்கை துருத்திக்கொண்டு, வித்தியாசமான யோகாசன போஸ்களில் எல்லாம் குனிந்து படுத்து கஷ்ட்டப்பட்டு வரைந்த பிள்ளைகள் அடுத்த பாராட்டுக்குரியவர்கள்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கொடுக்கப்பட்ட tea, பிஸ்கட்களை வைத்து கொண்டு தங்கள் பிள்ளைகளின் திறமையை நுணுக்கமான முறையில் அங்கீகரித்த பெற்றோர்கள் அடுத்த பாராட்டுக்குரியவர்கள்.
எது எப்படியாயினும், பிரயோஜன அளவிலும், கான்செப்ட் அளவிலும், மாணவர்களை சரியான முறையில் ஊக்கப்படுத்திய அளவிலும், காலத்திற்கேற்ற விஷயத்தை முன்னெடுத்த அளவிலும் இன்னும் பல மட்டங்களிலும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சி அதன் சமீப கால வரலாற்றில் ஒரு சிறந்த முத்திரையாகவே கணிக்கப்படும் என்பது உண்மை. இது போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் அடிக்கடி வழங்கும், வழங்க வேண்டும் என்று வலைப்பூ சார்பில் வாழ்த்துகிறோம். இந்த நிகழ்ச்சியின் கோர் கான்செப்ட் (Core Concept) வழங்கிய (சிங்கப்பூர் சகோதரர் தாரிக் என்று கேள்விபடுகிறோம்) சகோதரருக்கு வாழ்த்துக்கள்.