பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009 0 கருத்துரைகள்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... என அஸர் தொழுகை முடிந்த சிறிது நேரத்திற்கு பின்னர் ஹலோ மைக் டெஸ்டிங்.. மைக் டெஸ்டிங் என்ற ஒலி நம் காதுகளில் விழ ஒலி வந்த திசையை நோக்கி நாம் சென்றால் அது நகர ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் பிரண்ட்ஸ் PNO இணைந்து சின்னக்கடை தெருவில் நடத்தும் 63-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை தாங்க A.லியாகத் அலி மன்பஈ இறைவசனம் (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். B.நூருல்லாஹ் பாஜில் பாகவி வரவேற்புரை நிகழ்த்த பரங்கிப்பேட்டை நண்பர்கள் அமைப்பின் (Friends PNO) தலைவர் M.K.நிசார் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா அரபிக் கல்லூரி முதல்வர் A.சித்திக் அலி பாகவி, மூனா பள்ளியின் முதல்வர் M.பாண்டியன், K.M.மீரான் முஹ்யித்தீன் ரஷாதி ஆகியோர் தங்களது உரையில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினையும்-தியாகத்தையும் பற்றி விரிவாக பேசினார்கள் (மக்ரிப் தொழுகைக்காக நேரம் விடப்பட்டு-பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது) நிகழ்ச்சியினை M.முஹம்மத் ஷேக் ஆதம் தொகுத்து வழங்கினார். இறுதியாக A.லியாகத் அலி மன்பஈ நன்றியுரை ஆற்றினார். இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லவே நாம் விட்டோம் ஜூட்.....!

கட்டுரை & படம்: நமது நிருபர் - சுஹைல்

மேலும் வாசிக்க>>>> "சுதந்திர தினம்"

0 கருத்துரைகள்!


யாதவாள் தெரு-தீத்தாமுதலியார் தெரு சந்திப்பான இந்த இடத்தில் தான் கடந்த ஆண்டு மழை-வெள்ளத்தின் போது, தண்ணீர் பல நாட்கள் தேங்கி நின்று மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது , இப்போது தீத்தாமுதலியார் முழுவதும் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது.

படம்: நமது நிருபர் - சுஹைல்
மேலும் வாசிக்க>>>> "போட்டாச்சு ரோடு"

1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பூப்பந்தாட்டத்திற்கான பயிற்சி களங்களில் முதன்மை இடம் வகிக்கும் BMD-கிளப்பிற்கு அடுத்தபடியாக சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் RRC (Royal Recreation Club), ராயல் தெரு,வல்லதம்பி மரைக்காயர் தெரு, பெரிய ஆசராகாணத்தெருக்களை சேர்ந்த மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் மர்ஹும் சலாஹுத்தின், பிரோஜ் முஹம்மது, ஹஸன் அலி, ஹாஜா மெய்தின், பஷீர் அஹமது, கஜ்ஜாலி, இஸ்மாயில் இப்படி பல நபர்கள் பூப்பந்தாட்டத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக தாங்களாகவே முன்வந்து நல்கிய ஒத்துழைப்பின் மூலம் கூட்டு முயற்சியில் உருவான இந்த பயிற்சி களம் காலப்போக்கில் இடம் இல்லாத காரணத்தாலும் (அப்பகுதியில் வீடு கட்டப்பட்டதால்) இன்னபிற காரணத்தாலும் அப்படியே செயலிழந்து போனது, இப்போது ஆர்வமுள்ள சிலரின் ஒத்துழைப்பின் மூலம் கலிமா நகர் செல்லும் வழியில் (அம்மாஸ் தைக்கால் இறுதியில்) மீண்டும் மைதானம் அமைக்கப்பட்டு, நாள்தோறும் பலரும் விளையாடி வருகின்றனர்.

படம்: நமது நிருபர் - சுஹைல்
மேலும் வாசிக்க>>>> "மீண்டும் R.R.C"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234