செவ்வாய், 22 மார்ச், 2011

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்!

சிதம்பரம்: தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பாக ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்ட்டிருந்தது.
இன்று மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இதன் வேட்பாளாரக பாலகிருட்டிணன் வாண்டையாரை எதிர்த்து போட்டியிடகிறார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துடன் மா.கம்யூனிஸ்ட் மோதும் இச்சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடித்துள்ளது.

ஏப்ரல் 1-ந் தேதி முதல், மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறை அமுல்

அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறையை அமுல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சிதம்பரம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமுல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தேசித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பிரதிமாதம் 16-ந் தேதி முதல் கணக்கீடு செய்தல் பிரதி மாதம் 1-ந் தேதி முதல் வசூல் செய்யும் முறையை இனி வரும் காலங்களில் 1-ந் தேதி முதல் கடைசி வரை மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய முறை அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக கணக்கெடுப்பு பதிவு செய்த நாள் 7-ந் தேதி எனில் மின் கட்டணத்தை 26-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 27-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராத தொகை வசூலிக்கப்படும். முன்பு இருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யும்முறை தான் இந்த புதிய முறையில் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16-ந்தேதிக்கு பதிலாக 1-ந் தேதியே தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும், பணம் செலுத்த வரும் போது மின் கட்டண அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் கட்டணம் www.tneb.in என்ற முகவரியில் செலுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்துறை செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.

Source: Daily Thanthi


பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: Dinamalar


வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...