திங்கள், 6 மே, 2013

ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரிஅத் மாநாடு!

ஜமாஅத்துல் உலமா பேரவையின் சார்பில் ஷரிஅத் விளக்க மாநாடு சிதம்பரத்தில் நடைப்பெற்றது. நேற்று சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ்.. முஹம்மது யூனுஸ், அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ.ஓ. செய்யது ஆரிஃப், பள்ளி நிர்வாகிகள் அஹ்மதுல்லாஹ், காதர் முஹ்யத்தீன் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர்.

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் ஹமீது அப்துல் காதர்!






பரங்கிப்பேட்டை:  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் அணல் பறக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலே வேண்டாம் என்கிற கோஷங்களும் ஒருபுறம் வேகமாக எழுந்தாலும், வேட்பாளர் அலுவலகம், பிரச்சாரம் என்று இன்னொரு புறம் களைகட்டத் துவங்கியுள்ளது பரங்கிப்பேட்டை.

அந்த வகையில்,  வேட்பாளாராக களம் காணும் கேப்டன் ஹமீது அப்துல் காதர் நேற்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தனது முதல் பிரச்சாரத்தை துவக்கி வாக்கு சேகரித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...