வியாழன், 21 மே, 2009

பரங்கிப்பேட்டைக்கு வராத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

பரங்கிப்பேட்டை பர்மிட் இருந்தும் சிதம்பரத்தில் இருந்து நேர்வழியில் கடலூர் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று.

நகர வளர்ச்சிக்கு ஏற்ப அரசு மூலம் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டையில் இருந்து வெளி பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதியில்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல பர்மிட் வாங்கியுள்ளனர்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டைக்கு செல்லாமல் கொத்தட்டை வழியாக நேர் வழியில் சென்று விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தொழில்நுட்ப பயிற்சி பள்ளி மற்றும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், பேரூராட்சி அலுவலகம் என அனைத்து வசதிகளும் உள்ளது.

இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கடலூர், சிதம்பரம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

பரங்கிப்பேட்டைக்கு பர்மிட் பெற்றுள்ள தனியார் பஸ்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

இது குறித்து மோட்டார் வாகன அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்ல பரங்கிப்பேட்டை பர்மிட் பெற்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டையில் புதிய மாஜிஸ்திரேட்டாக சுதா பொறுப்பேற்றார்.

கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சரத்ராஜ், பழனி கோர்ட்டிற்கு பணி இடமாற்றம் மாற்றப்பட்டார்.

தொடர்ந்து புதிய மாஜிஸ்திரேட்டாக திருச்சி 1வது கோர்ட்டில் பணி புரிந்த சுதா பரங்கிப்பேட்டை கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

இரவு நேர அரசு டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம் : பிரபாகரன் மறைவால் பதட்டம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக இரவு நேர பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவல் தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அரசின் முன்னுக்கு பின் முரணான தகவலால் பிரபாகரன் இறந்தாரா, இல்லையா என்ற 'சர்ச்சை' உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட மக்கள் ஆங்காங்கே கூடி பேசி வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் மரண செய்தி கேட்டு இலங்கை ராணுவத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியில் உள்ள வர்த்தகர்கள் உணர்வுப் பூர்வமாக கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், பண்ருட்டி போன்ற பகுதியில் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் உள்ள தி.மு.க., அலுவலகம் தீ பிடித்து எரிந்துள்ளது.

சில சமூக விரோதிகள் பஸ்கள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.

இதனால் மாலை நேரங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டு விடுகின்றன.

எங்கோ ஒரு மூலையில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துவிட்டால் உடனே ஒட்டுமொத்த அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது.

நடந்த சாலையில் பாதுகாப்பு அளிக்காமல் ஒட்டுமொத்தமாக பஸ் போக்குவரத்தை தடை செய்து விடுகின்றனர்.

பின்னர் மெயின் லைனில் மட்டும் கால நேரம் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து வாகனங்கள் சேர்ந்த பின்னர் 'ஹைவே பேட்ரால்' பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.

இதுபோல போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் - புதுச்சேரி, கடலூர் - சென்னை, கடலூர் - சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களுக்கு மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

அண்டை மாநிலத்திற்கு கூட பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விழுப்புரம் (தடம் எண் 155) திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகள் வேறு வழியின்றி பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

கிராமப் பகுதிகளுக்கு செல்லுவோர் நிலை அதோ கதிதான்.

இதனால் அரசு அலுவலர்கள், பெண்கள், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பஸ் நிலையத்திலேயே காத்துகிடக்கும் அவலம் ஏற்பட்டது.

பகல் முழுவதும் உழைத்து விட்டு மாலை வீடு போய் சேர முடியாமல் சில தினங்களாக பயணிகள் தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடரும் கடையடைப்பு... :

பிரபாகரன், அந்தோணி இறந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளியானதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு நடந்து வருகிறது.

கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.

கடையடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.

சமூக விரோத செயலில் ஈடுபட்டால் துப்பாக்கிச்சூடு: எஸ்.பி., எச்சரிக்கை

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வெளியில் வர முடியாத வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர் என எஸ்.பி., பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இலங்கை பிரச்னையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பத்து அரசு பஸ்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக வழக்கு பதிந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு ஏற்படும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 136 போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியிலும், முக்கிய சாலைகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு படையினர் சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

சமூக விரோதிகள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பஸ்கள் 'கட்' ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு

சிதம்பரத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் ஆட்டோ கட்டணம் திடீரென அதிகரித்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்த தகவலால் பஸ் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதால் கடந்த சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கிராம பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரம் பகுதிகளில் உள்ள துணிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கிராம பகுதிகளை சேர்ந்த அதிகமானவர்கள் பணி செய்கின்றனர்.

அவர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப பஸ் கிடைக்காமல் கடும் அவதியடைகின்றனர்.

கூடுதல் செலவு செய்து ஆட்டோ எடுத்துக் கொண்டும், இரு சக்கர வாகனங்களில் சென்றும், நீண்ட தூரம் நடந்து சென்றும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆனால் ஆட்டோ கட்டணம் இரவு நேரத்தில் அதிகரிக்கப்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து சென்னை, கடலூர், புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை மார்க்கம் செல்லும் பஸ்களும் வழியில் ஆங்காங்கே 'கான்வாய்' முறையில் இயக்கப்படுவதால் பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் பாதுகாப்பான பயணம் அமைந்தால் போதும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை...! தொடக்க கல்வியில் 'இங்கிலீஷ் மீடியம்' வருமா?

இன்றைக்கு கல்வி ஒரு மிகப் பெரிய வர்த்தக விஷயமாகிவிட்டது.

படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரர்களும் கூட, தங்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர்.

உயர் கல்வி பெற்றால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை வளம் பெறும் என, பெரும்பாலான பெற்றோர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

இதனால், தங்கள் குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே, தரமான கல்வி பெறும் வகையில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சேர்க்கின்றனர்.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக்களில் கூட சேர்க்கைக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களை பொறுத்த வரையில், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அவை சிறப்பாக ஆங்கில அறிவு பெறும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

துவக்கத்தில் இருந்தே ஆங்கில அறிவு பெற்றால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் உயர் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்; நல்ல நிறுவனங்களில் பணி கிடைக்கும்; அதன் மூலம் கூடுதல் சம்பளம் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு வகையில், அவர்களின் எண்ணம் சரியானது தான்.

இன்றைக்கு, ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக உள்ளது.

முன்னைப் போல அல்லாமல், இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று, பணிபுரிய வேண்டியுள்ளது.

எனவே, அலுவலக பணிக்கும், தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனாலும், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சராசரி மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாகவே மாறிவிடுகிறது.

குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், தொடக்க கல்வியில் இங்கிலீஷ் மீடியத்தை கொண்டு வந்தால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ் மீடியம் உள்ளது.

சிறப்பு கட்டணம் செலுத்தினால், இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகள் படிக்கலாம். இந்நிலையில், தொடக்க கல்வியில் இருந்து இங்கிலீஷ் மீடியத்தை அறிமுகப்படுத்தினால், குழந்தைகள் முன்கூட்டியே ஆங்கில அறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக கட்ட வேண்டிய கட்டாயமும் பெற்றோருக்கு ஏற்படாது.

'கமிஷன்' அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் விற்பனை : ஏஜன்ட்டுகளாக மாறிய மெட்ரிக் பள்ளிகள்

கட்டணக் 'கொள்ளை' மட்டும் போதாமல், கமிஷன் அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் போன்றவற்றையும், 'கமிஷன் ஏஜன்ட்'களைப் போல் விற்று 'சம்பாதிக்கும்' முயற்சியில் இறங்கி விட்டன சில தனியார் பள்ளிகள்.

தெருவுக்குத் தெரு தனியார் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருக்கெடுத்து வருகின்றன.

கின்டர் கார்டன் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரை மெட்ரிக் பள்ளிகள் எனப் பெருகிவிட்டன.

ஒவ்வொரு பள்ளிகளும் தனித்தனியாக சீருடைகளை வடிவமைத்துள்ளன.

ஷூ, சாக்ஸ், டை, பெண் குழந்தைகள் என்றால் 'பெனேபாம்' என கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் வகையில் தான் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் என ஆயிரக்கணக்கில் வசூலிப்பதுடன், நோட்புக்களுக்கு என தனிக் கட்டணமும் வசூலித்துக் கொள்கின்றன.

இது மட்டுமின்றி, ஒரு சில பள்ளிகள் தங்களிடம் தான் ஷூ, யூனிபார்ம் துணிகளை வாங்க வேண்டும், டெய்லர்களிடம் கொடுக்க பெற்றோர் விரும்பினால் அதற்கும் 'கட்'. 'நாங்கள் கை காட்டும் டெய்லரிடம் தான் யூனிபார்ம் தைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டளை வேறு.

'சரி, சென்ற ஆண்டு வாங்கிய யூனிபார்ம் நன்றாக உள்ளது. இம்முறை வேண்டாம்' என்று கூறினால், அதை பள்ளி நிர்வாகம் செவி சாய்க்காமல், 'நோ, நோ... நீங்கள் கண்டிப்பாக யூனிபார்ம் வாங்கியாக வேண்டும். கடந்தாண்டு வாங்கிய யூனிபார்ம் அளவு சிறிதாகி விட்டால் என்ன செய்வது' என 'கண்டிஷன்' போடுகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு யூனிபார்ம், ஒரு செட் ஷூ வாங்கியாக வேண்டும் என நிர்பந்திக்கின்றது பள்ளி நிர்வாகம்.

ஆனால், அவர்கள் வழங்கிய ஷூ, சீருடைகள் கொடுக்கும் பணத்திற்குத் தரமானதாக இல்லை என்பதே பெற்றோரின் ஆதங்கம்.

பள்ளியில் சேர்த்தாகி விட்டது, இனி வேறு பள்ளியில் சேர்த்தால் அங்கும் டொனேஷன், பீஸ் எனச் செலுத்தியாக வேண்டுமே என்பதால், பெற்றோர் பலரும் வேறு வழியின்றி தரமில்லாத ஷூ, யூனிபார்ம்களை வாங்கிச் செல்கின்றனர்.

'எதில் தான் இப்படிப் பணம் பார்ப்பது என்ற வரைமுறை கூட இல்லாமல் போய்விட்டது என்று ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர்.

தற்போது அதிக வேலை வாய்ப்பு மற்றும் சில சிக்கல்களில் உள்ள பெற்றோர், ஆண்டுதோறும் மே மாதம் வந்தாலே பயப்படும் அளவுக்கு இப்பள்ளிகள் வசூலை அதிகப்படுத்தி பயமுறுத்துகின்றன.

இந்த நிலை மாறுவது எப்போது என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகும்.

அரசு ஆசிரியர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் புதன்கிழமை கூறியது:

வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயில 50 இடங்கள் உள்ளன.

இதில் பயில விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

விண்ணப்படிவத்தின் விலை ரூ. 500.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.

இயக்குநர், DTERT, சென்னை- 6 என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து, வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூன் 3-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.

பி.இ.: அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?

பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்ணை வைத்து தற்போது அத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைப் பெற மே 30 கடைசி நாள்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 25ம் தேதி வழங்கப்படுகின்றன.

இதற்கு பின்னர் தான் பி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் இடையே, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சிவகங்கை (காரைக்குடி), சேலம், கோவை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி (பர்கூர்), வேலூர் (பாகாயம்) ஆகிய 6 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

மதுரையில் ஒரு அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியும், கோவையில் 2 உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்ணை வைத்து, இந்த ஆண்டு அந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? என்பதை ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.

கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது:

கடந்த ஆண்டு காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 192.25 முதல் 195.75 வரை பெற்றவர்கள் சேர்ந்துள்ளனர்.

பி.சி. பிரிவில் 192 முதல் 195.5 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 188 முதல் 193.25 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 176.25 முதல் 184 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 168 முதல் 179.75 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

சேலம் கல்லூரியில் ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 189.25 முதல் 196.25 வரை பெற்றவர்களும், பி.சி. பிரிவில் 187.5 முதல் 195.75 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 182.75 முதல் 194 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 168.75 முதல் 183.75 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 158 முதல் 180.75 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

கோவை அரசு கல்லூரியில், ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 192.75 முதல் 198.25 வரை பெற்றவர்களும், பி.சி. பிரிவில் 190.75 முதல் 198 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 184.75 முதல் 196.75 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 173.25 முதல் 192.25 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 156.25 முதல் 171.75 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

திருநெல்வேலி கல்லூரியில் ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 190.75 முதல் 195.25 வரை பெற்றவர்களும், பி.சி. பிரிவில் 189.75 முதல் 194.75 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 186.25 முதல் 191.75 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 175.25 முதல் 185 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 154 முதல் 179.5 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 187.5 முதல் 191.5 வரை பெற்றவர்களும், பி.சி. பிரிவில் 185.75 முதல் 190.5 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 184 முதல் 189.5 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 174.75 முதல் 179.75 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 161.75 முதல் 165.25 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

வேலூர் கல்லூரியில் ஓ.சி. பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 186.75 முதல் 193.25 வரை பெற்றவர்களும், பி.சி. பிரிவில் 185.75 முதல் 192.25 வரை பெற்றவர்களும், எம்.பி.சி. பிரிவில் 182.5 முதல் 191.25 வரை பெற்றவர்களும், எஸ்.சி. பிரிவில் 171.25 முதல் 182.5 வரை பெற்றவர்களும், எஸ்.டி. பிரிவில் 163.25 முதல் 166.25 வரை பெற்றவர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஒரு மாணவர் 190 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், 189 முதல் 192 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு எந்த கல்லூரிகளில் இடம் கிடைத்தது என்பதைப் பார்க்க வேண்டும். பின்னர் அந்த கல்லூரிகள், அங்குள்ள பாடப் பிரிவுகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இப்படி செய்தால் இந்த ஆண்டு ஓரளவு திருப்தியுடன் கல்லூரிகளில் சேர முடியும்' என்றார்.

மே 23,24 தேதிகளில் ரஷிய கல்விக் கண்காட்சி

ரஷிய கல்விக் கண்காட்சி மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ரஷிய கலாச்சார மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரஷிய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், வெளிநாட்டு கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ரஷ்யாவில் உள்ள கல்வி பற்றிய கண்காட்சி மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் ரஷியாவைச் சேர்ந்த சுமார் 10 மருத்துவ, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன.

ரஷியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழிக் கல்வியும் அளிக்கப்படுவதால் மாணவர்களுக்குச் சிரமம் இருக்காது.

மேலும், கண்காட்சிக்கு வரும் மாணவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு கல்லூரிகளில் சேர உடனடி சேர்க்கையும் வழங்கப்படும்.

கல்விக் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

அனுமதி இலவசம்.

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் அரசு பஸ் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் காயம்

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் அரசு பஸ் கண்ணாடிகளை மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கினர்.

இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த தகவலை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராசு (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார்.

பஸ் புவனகிரி பெருமாத்தூர் வழியாக சென்ற போது மர்ம மனிதர்கள் சிலர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அரசு பஸ்சின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

இதன் சேத மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

இது பற்றி பஸ் டிரைவர் ராசு புவனகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், ஏட்டு ராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

கைது

அதேபோல் பரங்கிப்பேட்டையில் இருந்து பி.முட்லூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் வந்தது.

பஸ்சை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த பஸ் சேவாமந்திர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அகரத்தை சேர்ந்த வீரமணி என்பவர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது.

இது பற்றி பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

சென்னை பல்கலைக் கழகத்தில் அறிமுகம்! பிளஸ்-2 படித்தவர்களுக்கு 5 வருட முதுகலை பட்டப் படிப்புகள்!!

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக சென்னை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலை பட்டப் படிப்பு தொடங்கப்பட உள்ளது.

இடையில் நின்றால் அதற்கேற்ப சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ராமச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய படிப்புகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் நலன் கருதி சென்னை பல்கலைக் கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்பு இந்த வருடம் தொடங்கப்பட உள்ளது.

எம்.ஏ. மானுடவியல், எம்.ஏ. நவீன மேம்பாட்டு (போஸ்ட் மாடர்ன் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்) நிர்வாகம், எம்.ஏ. பிரெஞ்சு ஆகியவையும், எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியல் படிப்பும் தொடங்கப்பட உள்ளன.

இவற்றில் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

அதிகம்பேர் விண்ணப்பித்தால் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இடையில் நின்றாலும் சான்றிதழ்

இந்த படிப்புகளில் மாணவர்கள் ஒரு வருடத்தில் நின்றால் சான்றிதழ், 2 வருடத்தில் நின்றால் டிப்ளமோ, 3 வருடத்தில் நின்றால் பட்டம், 4 வருடத்தில் நின்றால் முதுகலை டிப்ளமோ, 5 வருடம் படித்து தேர்ச்சி பெற்றால் முதுகலை பட்டம் வழங்கப்படும்.

இவற்றில் எம்.எஸ்சி. படிப்புக்கு மட்டும் அவ்வாறு சான்றிதழ் கிடையாது.

3 வருடம் படித்தால்தான் பட்டமும் 5 வருடம் முடித்தால் முதுகலைபட்டமும் கிடைக்கும்.

இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரத்து 500 மட்டுமே.

இந்த படிப்புகள் தவிர எம்.எஸ்சி. கடல் சார் அறிவியல் தொழில்நுட்பம் படிப்பும், எம்.எஸ்சி. சுற்றுச் சூழல் அறிவியல் படிப்பும் தொடங்கப்பட உள்ளது.

கல்வி கண்காட்சி

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகார கல்லூரிகளில் 250 படிப்புகள் உள்ளன.

மாணவர்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடங்களை தேர்ந்து எடுத்து நன்றாக படித்தால் வேலை வாய்ப்பு உறுதி.

மாணவர்கள் நலன் கருதி கல்வி கண்காட்சி சென்னை பல்கலைக் கழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...