பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றக்கூட்டம், மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு துணை தலைவர் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வழங்கிய ரூ.84 இலட்சத்து 60 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள், பக்க கால்வாய்கள், கல்வெர்ட் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 இலட்சம், பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதியில் இருந்து அரசு வழங்கும் ரூ.20 இலட்சம், ஆக கூடுதல் தொகை ரூ 40 இலட்சத்தில் மேலும் சாலைகள், வடிகால் கல்வெர்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தலைமை எழுத்தர் ராணி நன்றி கூறினார். இத்தகவலை தினத்தந்தி நாளேடு வெளியிட்டுள்ளது