
Source: சமரசம்
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எப்.டி.ஆர்.ஐ.), இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., உணவு தொழில்நுட்பப் படிப்பில் (2009-2011) சேர, பட்டப்படிப்பு தகுதி உடையவர்களுக்கு ஜூலை 19-ல் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பங்கள் ஏப்ரல் 18 முதல் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 3.
மேலும் விவரங்களுக்கு: wwwcfgri.com.
------------------------------------------------------
மும்பையில் உள்ள இந்திய தொழிற்சாலைப் பொறியியில் நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.இ.) சேருவதற்கு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
முழுவதும் 28 மையங்களில் இத் தேர்வு நடைபெறுகிறது.
ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர ஜூன் 7-ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பங்கள் ஏப்ரல் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
குறித்த மேலும் விவரங்களுக்கு: http://www.srmc.edu/
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
கடைசி தேதி ஜூன் 5.
விவரங்களுக்கு: http://www.annamalaiuniversity.ac.in/
பரங்கிப்பேட்டை அருகே பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து முன்னாள் எம்.எல்.ஏ., அருள் ஓட்டு சேகரித்தார்.சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பூதகேணி, வண்டிகேட் பகுதிகளில் முன்னாள் அ.தி.மு.க., எம். எல்.ஏ., அருள் ஓட்டு சேகரித்தார்.
அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, ராசாங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வீரபாண்டியன், ராஜேந்திரன், கோவிந்தராஜன், மாரியப்பன், ராமானுஜம், ராமச்சந்திரன் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க., கலைக்குழுவினர் பிரசாரம்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., கலை குழுவினர் ஓட்டு சேகரித்தனர்.
சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் நடந்தது.
அ.தி. மு.க., ஒன்றிய மகளிரணி செயலாளர் வளர்மதி சண்முகசுந்தரம் தலைமையில் ஓட்டு சேகரித்தனர்.
பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் முடிவண்ணன், ஒன்றிய செயலாளர் வாசுசரவணன், ஒன்றிய அமைப்பு செயலாளர் பரமகுரு, அ.தி. மு.க., நிர்வாகிகள் திருமுருகன், ஆனந்தன், பா. ம.க., ராமரத்தினம், நகர செயலாளர் நிர்மல்குமார், ம.தி.மு.க., நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் கொத்தங்குடி, தொத்தங்குடி தோப்பு, அனுவம்பட்டு, காரைப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் கலைக் குழு மூலம் பிரசாரம் செய்தனர்.
சிதம்பரம் நகரில் நேற்று பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி வீதிவீதியாக இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, தபால் துறையின், 'இ-போஸ்ட்' முறையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லோக்சபா தேர்தலில் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதன் முறையாக, 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.