பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 31 அக்டோபர், 2008 0 கருத்துரைகள்!

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
அக் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், படித்து வேலையில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாக தொழிற்பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட் ஒர்க்கிங், சி.சி. பிளஸ், பிளஸ், டி.டி.பி. டேலி வித் எம்.எஸ். ஆபீஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் இப்பயிற்சியில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

எனவே, விருப்பம் உள்ள சிறுபான்மையின இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி அதனுடன் சாதிச் சான்றிதழ் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் அல்லது கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் அதற்குரிய சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபாலில்

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
5வது தளம்,
807, அண்ணாசாலை,
சென்னை.

என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் பகுதியில் பயிற்சியின் பெயர், பயிற்சி பெற விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தினை மட்டும் குறிப்பிட வேண்டும். இந்த வாய்ப்பை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!"

திங்கள், 27 அக்டோபர், 2008 4 கருத்துரைகள்!

நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத வாய்ப்பு!


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., படிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதினான்கரை வயது முடியும் போது நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம். பள்ளியில் சேராமல் தனித் தேர்வர்களாக வருவோர் அரசு தேர்வுத்துறை நடத்தும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வேண்டும். இதுவே இதுவரை இருந்துவரும் நடைமுறை.

தற்போது தேசிய திறந்தநிலைப் பள்ளி, அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவற்றில் எட்டாம் வகுப்பு தகுதி பெற்றவர் என்ற அடிப்படையில் மாற்று சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் இ.எஸ்.எல்.சி., தேர்வை எழுதாமலேயே எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றநர். இவர்களுக்கென உள்ள மாற்றுப் பள்ளிகளில் சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின், அவர்களை ரெகுலர் பள்ளிகளில் அவர்களின் வயதிற்கேற்ப வகுப்புகளில் சேருகின்றனர். இந்த இடைப் பயிற்சி அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் செயல்படும் காப்புறுதித் திட்டத்தின் மூலம் நடக்கிறது.

அதேபோல் தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பிலும் வயது, தகுதி அடிப்படையில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கக கல்வி காப்புறுதி திட்டத்தின் மூலம் உண்டு உறைவிடப் பள்ளியினால் மாற்று சான்றிதழ் பெறுபவர்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறுபவர்களையும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை நேரடித் தனித்தேர்வராக எழுத அனுமதி அளிக்கப்படுகிறது என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : http://www.kalvimalar.com/NewsDetails.asp?id=1597

மேலும் வாசிக்க>>>> "அனைவருக்கும் கல்வி"

வியாழன், 23 அக்டோபர், 2008 0 கருத்துரைகள்!

ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு

ப்ளஸ் டூ முடித்த பிறகு இந்திய ஐ.ஐ.டிக்களில் இடம் பிடிப்பது என்பது உலகளவில் மதிப்பான அங்கீகாரம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ஐ.ஐ.டிக்களுக்கான நுழைவுத் தேர்வுகள் என்றாலும், இப்போதிருந்தே தயாரானால்தான் எல்லையைத் தொட்டுப் பிடிக்க முடியும். இந்தியாவில் இருக்கும் 8 ஐ.ஐ.டிக்களுக்கும் பனாரஸ் இந்து பல்கழைக்கழகத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி. தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள டிசம்பர் 24க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுகிறது!


கேட் (GATE) தேர்வு

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (Indian Institute of Science) ஐ.ஐ.டிக்கள் ஆகியவை இணைந்து முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான கேட் தேர்வை நடத்துகின்றன. இந்த ஆண்டுக்கு இத்தேர்வை நடத்தும் பொருப்பு ரூர்க்கேளா ஐ.ஐ.டி., வசம்.

இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள அக்டோபர் 29ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும். கேட் தேர்வுகள் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும்!

மேலும் வாசிக்க>>>> "கல்விக்குழு செய்திகள்"

1 கருத்துரைகள்!

கடந்த பத்து நாட்களாக திடீர் திடீர் என பயங்கர இடி மின்னலுடன் பெய்து வரும் மழை இன்று கொஞ்சம் விடுமுறை எடுத்து கொண்டது. (வானில அறிக்கையில் இன்று மழை பெய்யும் என்று சொல்லி இருந்ததை மழை கேட்டு இருக்கலாம்)

வழக்கமாக அதகளமாகி கலங்கடிக்கும் பெரிய தெரு புதிய சாலை மற்றும் வடிகால் வசதி உபயத்துடன் படு சுத்தமாக நல்ல பிள்ளையாக அளித்த காட்சி கண்கொள்ளாதது (குறைந்த பட்சம் 2 தலைமுறை மக்கள் காணாத காட்சி) ஆனால் பிளை ஓவர் உயரத்துக்கு போடப்பட்டு இருக்கும் சில சிமென்ட் சாலைகளினால் அதனை அடுத்த சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. குறிப்பாக காஜியார் சந்து முனை, யாதவாள் தெரு- பெரிய தெரு இணையும் இடம், தெசன் தைக்கால்-ராயல் தெரு முனை, ஹக்கா சாஹிப் தெரு, மதினா நகர் போன்ற சில இடங்கள் குறிப்பிடத்தக்கவை.


ஊரின் ஒரே ஒழுங்காக பராமரிக்கப்படும் குளமான மீராபள்ளி குளம் சில மாதங்கள் முன்பு கரை சரிந்து கிடந்ததை சரி செய்ய நிர்வாகம் நேரம் பார்த்து கொண்டுஇருந்த நேரத்தில் (இன்னும் சில அடிகள் குறைந்தால் போதும் என்று) நமது மழையார் வந்து முழு குளத்தையும் நிரப்பி சம தளமாக்கி விட்டார்.

மேலும் வாசிக்க>>>> "இது ஒரு மழை காலம் ...."

2 கருத்துரைகள்!


சில நாட்களாக ஊரின் எந்த தெருவை பார்த்தாலும் சிவப்பு வயர்கள் ஆங்காங்கே சில குமிழி நிலத்தில் குத்தி வைக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது என்னவென்று விசாரித்ததில் நமதூரில் எண்ணெய் வளம் உள்ளதா என்று ஒ என் ஜி சி (ONGC) காரர்கள் நூல் விட்டு பார்ப்பது தெரிந்தது.

ஏதோ நல்லது நடந்தால் சரி என்று இடத்தை விட்டு நகர போகும் போது அருகிலிருந்த சகோதரர் எண்ணெய் இருந்து கண்டுபிடித்தால் நம்மளையெல்லாம் ஊரை விட்டு காலி பண்ண சொல்லிடுவாங்களோ என்று குண்டு ஒன்று போட்டு நிம்மதியை காலி செய்தார். கடைசியில் - என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாடி கொண்டே நகர்ந்தோம்
மேலும் வாசிக்க>>>> "ஊரெல்லாம் வலை பின்னல்"

ஞாயிறு, 12 அக்டோபர், 2008 4 கருத்துரைகள்!



இந்த படங்களை பாருங்கள்
நேற்று வரை நாம் பார்த்து பழகிய சகோதரர்கள் கண நேர தவறில் சிதைந்து உருக்குலைந்துபோய்... இறந்து போன சகோதரர்களின் பெற்றோர்களின் அழுகையும் நண்பர்களின் கேவலும் நீங்கள் கேட்டுஇருந்தால் தெரியும்...
விபத்திர்க்கான காரணம் எதுவாக இருந்தாலும் ....
# வேகம் என்பது விவேகமல்ல
# நடக்காத வரை தான் எதுவும் நலம் நடந்துவிட்ட பிறகு இழப்பு இழப்புதான்
# மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலைக்கு சமம்.
# (தூரப்பயணத்தின் போது) தலைகவசம் என்பது உயிர்கவசம்.
# அரசின் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்போம்.
இது எதுவும் நமது மனதில் ஏறவில்லையா?
உங்கள் அழகிய குழ்ந்தைகளின் முகத்தை, மனைவி, பெற்றோர்களின் முகத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பிறகு போடுங்கள் உங்களின் முதல் கியரை...
ஏனெனில் உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன
மேலும் வாசிக்க>>>> "உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன"

1 கருத்துரைகள்!

நேற்றுவரை கோடைக்காலத்தைவிட கொடுமையாய் வெயில் வாட்டி வருத்து எடுத்து கொண்டிருந்தது. சென்ற மாதம் கடைசியிலே எதிர்பார்க்கப்பட்டு, பொய்த்துவிடுமோ என்று கவலை பூக்கும் நேரத்தில் இடி மின்னல் மேல தாளத்துடன் இன்று துவங்கியது பருவ மழை.

பூமியையும் அதில் வாழும் உயிர்களையும் உயிர்ப்பிக்கும் அழகிய மழையின் மூலம் தன் அளவற்ற கருணையை சுவைக்கும் படி செய்த அல்லாஹுவிர்க்கே புகழனைத்தும்.

மின்சாரம் எனும் அருட்கொடையை சீரியல்களில் மூழ்கியும் டிவிடிக்களில் படம் பார்த்தும் அதிரவிட்டும் வீணடித்து இன்று அதனால் அவதியுறும் நாம் - விரைவில் வரவிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இந்த மழையை எப்படி திட்டமிட்டு சேமித்து வைக்க போகிறோம் என்பதை யோசிப்போமா?

புகைப்பட நன்றி கு.நிஜாமுதின் (ஜி.என்) அவர்கள்
மேலும் வாசிக்க>>>> "இறைவனின் அருட்கொடை"

வெள்ளி, 10 அக்டோபர், 2008 4 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை - புதுச்சத்திரம் ரோட்டில் அரசு ஆண்கள் பள்ளிக்கு அருகே இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். பரங்கிபேட்டை சலங்குகார தெருவை சேர்ந்த ஸுஜய் மற்றும் புதுக்குப்பத்தை சேர்ந்த அவரது நண்பரும் தங்களது பஜாஜ் பல்சரில் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு நாவல் மரத்தில் மோதி இந்த விபத்து நேரிட்டது. இறந்துபோன இரு சகோதரர்களும் சலங்குகார தெருவை சேர்ந்தவர்கள ஆவார்கள். இதில் ஸுஜய் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஆவார்.

தங்களது பிள்ளைகளை திடீர் என இழந்து அதிர்ச்சி அடைந்து வாடும் அவர்தம் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது
மேலும் வாசிக்க>>>> "மோசமான இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி"

0 கருத்துரைகள்!

நேற்று வரை 5 மணி நேரமாக இருந்து வந்த மின்சார நிறுத்தம் இன்று முதல் 6 மணி 30 நிமிடங்கள் (ஆறரை மணிநேரம் - ஏழரைக்கு நெருக்கமாக) என்று கடலூர் மாவட்ட மின்(வெட்டு) வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கடலூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் இருந்து தினமும் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் 1 மணி நேரமும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணிக்குள் 1 1/2 மணி நேரமும் என தினமும் 6 1/2 மணி நேரம் சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "இன்று முதல் ஏழரைக்கு நெருங்குகிறது மின்வெட்டு."

வியாழன், 9 அக்டோபர், 2008 6 கருத்துரைகள்!

ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு. சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.
மேலும் வாசிக்க>>>> "ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்"

3 கருத்துரைகள்!

இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை
மேலும் வாசிக்க>>>> "ஆயுத பூஜை"

1 கருத்துரைகள்!

பேரூராட்சி தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்கள் மற்றும் அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கூறினார் தினத்தந்தி 08.10.2008 தேதியிட்ட தொழில் மலரில் (பக்கம் 100) அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி உள்ளார்.
(மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தினை கிளிக் செய்து படிக்கவும்)
மேலும் வாசிக்க>>>> "2 ஆண்டு சாதனை குறித்து மக்கள் மகிழ்ச்சி - பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் பெருமிதம்"

திங்கள், 6 அக்டோபர், 2008 8 கருத்துரைகள்!

இதில் நகைச்சுவை இழையோடும்...
ஆனால், முழுவதும் நகைச்சுவை அல்ல...

பெயர் : பரங்கிப்பேட்டை
வயது : தெரிந்தால் சொல்லலாம்.
கல்வித்தகுதி : பத்தாவது 2 சப்ஜெக்ட் ஃபெயில்
தொழில் : வீடுகளில் முதலீடு செய்வது
உப தொழில் : ஐ.எஸ்.டி. கான்ஃபெரன்ஸ்
மறந்து போனது : பாஸ்போர்ட்டுக்கு மீசை வரைவது, குதிரைவண்டி சவாரி...
மறக்காதது : பரோட்டாவும் (முட்டலாப்பா ? ) கோழிக்கறியும்
மாறிவரும் அடையாளம் : வெள்ள துப்பட்டி டு புர்கா.
மாறாத அடையாளம் : பாயடி கைலி
ஹீரோக்கள் : பயணத்திலிருந்து வருபவர்கள்
வில்லன் : குடிகெடுக்கும் டாஸ்மாக்
சமீபத்திய சாதனை : சுனாமியின்போது தன்னலமற்ற உடனடி சேவை
நீண்டநாள் சாதனை : மதநல்லிணக்கம்
முக்கிய வருமானம் : உள்நாட்டிலிருந்து இல்லை.
பிடித்த வேலை : முச்சந்தி தோறும் வெட்டி
பிடிக்காத வேலை : வேறென்ன, ஊரில் வேலை செய்றதுதான்...
பிடித்த பொருள் : செல்போன்.
பிடித்த பிக்னிக் ஸ்பாட் : ஏர்போர்ட்.
பொழுது போக்கு : பிஸினஸ் துவங்கி பார்ப்பது
சொல்லிப்பெருமைப்படுவது : இல்லாமல் போன இரும்பு ஆலை
சொல்லாமல் இருப்பது : வேலைவாய்ப்புக்கு ஒரு முகாந்திர மையமும் இல்லாதது.
ஆறுதலுக்குரிய சாதனை : பெண்களின் கல்வி
தேறுதல் கூட இல்லாத சோதனை : மாணவர்களின் கல்வித்தரம்
சமீபத்திய அதிர்ச்சிதரும் போக்கு : சிறுவர்களும் டாஸ்மாக்கில்...
சமீபத்திய ஆறுதல் தரும் போக்கு : இந்த வருடம் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு 3 பேர் முயற்சி
நல்ல பழக்கம் : சலாம் சொல்வது
கெட்ட பழக்கம் : குறை சொல்வது
தேசிய வாகனம் : ஆட்டோ
தேசிய தொழில் : டிரைவிங், ஆபிஸ் பாய் (உள்ளூர் & வெளிநாடு)
தேசிய உணவு : தால்ச்சா சோறு
தேசிய விழா : அக்கியாஸ் தக்கா சந்தல்
காமெடி டைம் : அரசியல் பொதுக்கூட்டங்கள்
சமீபத்திய சந்தோஷம் : பள்ளிகூடம், ரோடு, மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள்
நீணடநாள் சந்தோஷம் : வாரம் 2 நாள் விருந்து (தாவத்)
இப்போ அப்போ கனவு : வெள்ளாற்றுப்பாலம்
எப்போதைக்குமான கனவு : ஒரு கல்லூரி, ஒரு ஐ.ஏ.எஸ்.
என்னக் கொடும சார் இது : வெளிநாட்டு வாழ் சகோதரர்கள்...
மேலும் வாசிக்க>>>> "பயோடேட்டா : பரங்கிப்பேட்டை"

2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து விதிகளை மீறி சிதம்பரத்திலிருந்தே பயணிகளை ஏற்றிக்கொண்டு நிறைந்த பேருந்தாக பரங்கிப்பேட்டைக்கு தினமும் வருவது வாடிக்கையாக இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை செல்ல சுமார் 60 பயணிகள் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். பெருநாள் விடுமுறைக்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. 9:50 மணிக்கு வழக்கம் போலவே ஃபுல்லாக வந்த பேருந்தினை கண்டு பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது. வார்த்தையாடல்களுக்கு பிறகு தனது தவறை ஒத்துக்கொண்ட நடத்துனர் நாள முதல் இதுபோல் நடக்காது என்று உறுதியளித்தார்.

ஆனாலும் சமாதானம் அடையாத இளஞர்கள், வந்திருக்கும் பேருந்தில் இடம் வழங்கவேண்டும் அல்லது உடனே ஒரு புதிய பேருந்தினை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரி கடுமையாக வாதிட்டனர். அதிலுள்ள சங்கடங்கள விளக்கி ஓட்டுநர் பேச இவர்கள் வாதம் புரிய, வார்த்தைகள் வலுக்க நிலைமை ரசாபாசமாவதற்குள் அங்கிருந்த ஜமாஅத் செயலாளர் பாவாஜான் மற்றும் அந்த நேரத்தில் அங்கு வந்த காவல்முறை ஆய்வாளர் இருவரும் மாணவர்களை சமாதானம் செய்து ஓட்டுநரிடம் இதுபோல் மீண்டும் நடக்ககூடாது என்று எச்சரித்தும் அனுப்பினர்.

ஆனாலும் தங்களது தற்போதைய பிரயாண பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் மக்கள் அதே பேருந்தில் தொங்கிக்கொண்டு சென்றனர். (துர்கா அன்று வரவில்லை)

என்னதான் நல்லது நடந்தாலும் குறுக்கே ஏர் ஓட்டும் இதுபோன்ற அரசு ஊழியர்கள் இருக்கும் வரை மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது போல் உள்ளது. இந்த நிலை மாறுமா அல்லது தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் வாசிக்க>>>> "என்னதான் நல்லது நடந்தாலும்..."

வெள்ளி, 3 அக்டோபர், 2008 1 கருத்துரைகள்!


பெருநாள் கொண்டாட்டங்கள் சில துளிகளில்..

ஃபித்ரா....

வழக்கம்போலவே களகட்டி இருந்தது ஷாதி மஹால்...

650 குடும்பத்தினருக்கு தலா சுமார் 720 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பெருநாள் தினத்திற்குரிய மளிகை பொருட்கள் மற்றும் துணிமனிகள் வழங்கப்பட்டன.

இந்த வருடம் அதிகமான வெளிநாட்டு சகோதரர்கள் வந்திருந்ததால்(லோ என்னமோ) அதிகமான மொபைல் கேமராக்கள் பளிச்சிட்டபடியே இருந்தன.

அரிசி முதல் அனைத்து மளிகை பொருட்களின் விநியோகத்தையும் நின்ற கவனித்த 12 வயது கூட நிரம்பாத சிறுவர்களின் துறுதுறுப்பும், சுமார் 1 மணி வரை அசராமல் பணியாற்றிய அவர்களின் உழைப்பும் மிகவும் அழகியல் சார்ந்ததாக இருந்தது.

ஜமாஅத்தின் மேற்பார்வையின் கீழ் கிரஸண்ட், கல்விக்குழு மற்றும் இதர சகோதரர்களின் முழுஅளவிலான உழைப்பை காணமுடிந்தது.

அரசு இதில் தனது பங்காக சரியாக 12.10 மணிக்கு "கன் "ஆக மின்சார இணைப்பை துண்டித்து தனது நேரந்தவறாமையை கட்டிகாத்துக்கொண்டது.

பெருநாள் தொழுகை....

நபிவழி கூட்டமைப்பை சார்ந்த சிலர் கொடுத்த அழுத்தங்கள மீறி, அப்துல் காதிர் மதனி அவர்கள பெருநாள் உரை நிகழ்த்த அனுமதித்து அற்புதமான, பிரயோஜனமிக்க உரையை கேட்க வைத்த மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறப்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

பெண்கள் பகுதியான ஷாதி மஹாலில் முழு மண்டபமும் நிறைந்து இருந்தது.

பள்ளியை மேலும்விசாலமாக்கி இடநெருக்கடி இல்லாமல் செய்திருந்தது ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம். வருபவர்கள ஒழுங்குபடுத்தி அமரவைக்க இப்போது செயல்பட்டுக்கொண்டிருந்த ஜமீல் போன்ற தன்னார்வமிக்க இளஞர்கள வரும்காலத்தில் முறையாக பயன்படுத்தினால் நலமாக இருக்கும்.

தொழுகைக்கு பிறகு ஜனாப் அப்துல் சமது ரஷாதி அவர்களின் உருகவைக்கும் துஆ அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விட்டது. அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக.

பெருநாள் வேலைகளில் மும்முரமாக இருந்த முஸ்லிம்களுக்கு உதவியாக காலை 7.30 முதலே மின்சாரத்தை துண்டித்து கொண்டாட்டங்கள் முடியும் 1 மணிபோல் மீண்டும் மின்சாரம் தந்தது மின் (வெட்டு) வாரியம்.
மேலும் வாசிக்க>>>> "பெருநாள் கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு மற்றும் செய்தித்துளிகள்"

புதன், 1 அக்டோபர், 2008 2 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெற்றது. சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இட வசதியால் இந்த ஆண்டு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. வழக்கத்தைவிட இவ்வாண்டில் பெண்கள் மிக அதிகமானோர் பங்குப்பெற்றனர். பெண்கள் தொழுகைக்காக ஷாதி மஹாலில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. தொழுகைக்குப் பிறகு அனைவரும் ஆரத்தழுவி தங்களுக்கிடையே மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை"

2 கருத்துரைகள்!

வழக்கமாக மின்(வெட்டு) வாரியத்தின் மின்வெட்டு தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இருக்கின்ற நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மின் வெட்டாக காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "மின்(வெட்டு) வாரியத்தின் பெருநாள் பரிசு"

1 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டியின் ஒருங்கிணைந்த ஃபித்ரா வினியோகம் (9-ஆம் ஆண்டு) மீராப்பள்ளி எதிரில் உள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. நேற்று இரவு பிறை புலப்படாததினால் பெருநாள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு இரவு 9 மணிக்கே அறிவிக்கப்பட்டது. இதனால் ஃபித்ரா வினியோகத்திற்காக இறைச்சி 11 மணிக்கு பிறகே தயாரானதால் அதன் பிறகே வினியோகம் செய்யப்பட்டது.

அதேபோன்று பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற ஃபித்ரா வினியோகம் பெரியத்தெருவில் நடைபெற்றது. இங்கும் மேற்கண்ட தாமதம் ஏற்பட்டது. இதற்காக பெரியத் தெரு எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும் வாசிக்க>>>> "பெருநாள் சிறப்பு பக்கம் - பித்ரா வினியோகம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234