செவ்வாய், 6 அக்டோபர், 2009
பள்ளி மாணவ மாணவியருக்கான வர்ணந்தீட்டுதல் போட்டி!
பரங்கிப்பேட்டை ஒன்றிய விவசாயிகள் கவலை
கயிறு தொழிலில் ஒரு புதிய உதயம்
போட்டாச்சு ரோடு!

பரங்கிப்பேட்டை:
காஜியார் தெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
ஆனாலும் இச்சாலை காஜியார் சந்து சந்திப்பு வரை மட்டுமே போடப்பட்டுள்ளது.
இச்சாலை கும்மத்து பள்ளி தெரு சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டால்தான் காஜியார் தெரு முழுமையான சிமெண்ட் சாலையாக காட்சியளிக்கும்.
Labels:
காஜியார் சந்து,
காஜியார் தெரு,
கும்மத்து பள்ளி தெரு,
சிமெண்ட் சாலை,
ரோடு
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் - பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தன சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
நெல் சாகுபடியில் இடும் ரசாயன உரங்களால் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு படுகிறது. எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், கூடுதல் மகசூல் பெறவும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உபயோகிக்க வேண்டும்.
அசோஸ் பைரில்லம் காற்றில் உள்ள தழை சத்துக்களையும், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தையும் கிடைக்க உதவுகிறது. இதனால் ரசாயன உரத் தேவை குறைகிறது. நுண்ணுயிர் உரங்களை நெல்லுக்கு விதை நேர்த்தி, நாற்று நேர்த்தி செய்து நடவு வயல் மூலம் இட வேண்டும்.
விதை நேர்த்தி செய்ய 20 கிலோ விதைக்கு அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 1 பாக்கெட் வீதம் ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து பின்னர் விதையுடன் நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் விதைகளை நிழலில் உலர வைத்து விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். நாற்று நேர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 2 பொட்டலம் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதில் நாற்றின் வேர் பகுதியை நனைத்து எடுத்த பின்னர் நடவு செய்ய வேண்டும்.
நடவு வயலில் நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 4 பொட்டலம் வீதம் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை நன்கு மக்கிய 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும்.
அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவை பொட் டலங்கள் தேவையான அளவு வேளாண்மை விரிவாக்க மையம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, பின்னத்தூர் இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு வேளாண்மை அதிகாரி தனசேகர் குறிப் பிட்டுள்ளார்.

Source: Dinathanthi
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...