செவ்வாய், 9 ஜூலை, 2013

சிங்கப்பூரில் ரமலான் மாதம் தொடங்கியது..!

சிங்கப்பூர்: முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் சிங்கப்பூரில் இன்று மாலை தொடங்கியது. இதனையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் வழக்கமான தொழுகைக்கு பிறகு சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிங்கப்பூர்  டன்லப் வீதியில் உள்ள அப்துல் கபூர் பள்ளியில் நடைபெற்ற  சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர். இதனையொட்டி பள்ளி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது