
News: Dinamani
தமிழக சட்டமன்றதுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல சமுதாய அமைப்புகளும்,இயக்கங்களும் அவரவர் சமுதாய சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில் முஸ்லீம் சமுதாய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து, இதை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்கண்ட கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் “சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளதால் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் நடந்த பொதுக் குழுவில் தி.மு.க குறித்து, ''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது'' எனக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றி இருந்தும், தி.மு.க அவ்வாறு ஏதும் சொல்லாத நிலையிலும் தற்போது தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
தொகுதி எண் : 158
இதுபற்றி சிதம்பரம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமுல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தேசித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரதிமாதம் 16-ந் தேதி முதல் கணக்கீடு செய்தல் பிரதி மாதம் 1-ந் தேதி முதல் வசூல் செய்யும் முறையை இனி வரும் காலங்களில் 1-ந் தேதி முதல் கடைசி வரை மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய முறை அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக கணக்கெடுப்பு பதிவு செய்த நாள் 7-ந் தேதி எனில் மின் கட்டணத்தை 26-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 27-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராத தொகை வசூலிக்கப்படும். முன்பு இருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யும்முறை தான் இந்த புதிய முறையில் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16-ந்தேதிக்கு பதிலாக 1-ந் தேதியே தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும், பணம் செலுத்த வரும் போது மின் கட்டண அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் கட்டணம் www.tneb.in என்ற முகவரியில் செலுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்துறை செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார். Source: Daily Thanthi
பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர். Source: Dinamalar
ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியல்:
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் தேர்தல் சிறப்பு கண்காணிப்பளார்களாக நியமிக்கப்பட்டனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருள்கள் எடுத்து செல்கிறார்களா என தீவிர வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதில் இருந்து ரூ.17 கோடி சிக்கியுள்ளது. இந்த சோதனை ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது.
தற்போது கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான மரக்காணத்தில் இருந்து கிள்ளை வரையிலான 68 கிராமங்களை கொண்ட 130 கி.மீ. தூரத்தை கடலோர காவல் படையினர் இரண்டு அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணி கடலோர காவல் படையின் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு படகிலும் 5 போலீசார் இருப்பார்கள் என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறினார். Source: Daily Thanthi