பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 30 நவம்பர், 2008 5 கருத்துரைகள்!

குற்றம் காணின் சுட்டுவதும், நிறை காணின் ஷொட்டுவதும் மீடியாவின் மரபாமே என்று குட்டி (குட்டாத) கவிதை சொல்கிறது.
கடந்த நோன்பு பெருநாள் அன்று வழ்க்கமான ஐந்து மணி நேர மின்வெட்டுக்கு பதில் எட்டு மணி நேரம் மின்சாரத்தை வெட்டிய மின்துறையை பற்றி கண்டன பதிவு வெளியிட்டிருந்தோம். தற்போது அதே மின்சார துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மனதார பாராட்டுகிறோம்.
கடும் மழை, புயல் காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்திருந்த நிலையில் அவைகளை மிக துரிதமாக செயல்பட்டு சரி செய்து மிக விரைவாக மின் இணைப்பு வழங்கிய மின் துறை அதிகாரிகளயும், ஊழியர்களையும், ஊர் மக்கள் சார்பாகவும், வலைப்பூ சார்பாகவும் மனதார பாராட்டுகிறோம்.
இது அவர்களின் பணி தான். ஆனால், கடலூர் சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களிலேயே மூன்று நாட்கள் கழித்தே மெது மெதுவாக மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் நமது ஊரின் சில இடங்களில் முற்றிலும் சீர் குலைந்து போயிருந்த பவர் கேபிள்களை சீர்செய்து இத்தனை விரைவில் இயல்பு நிலையை திருப்புவார்கள் என்று யாருமே நம்பவில்லை. நிச்சயம் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.
மேலும் வாசிக்க>>>> "பாராட்டுக்குரிய ஸ்பைடர் மேன்கள்"

2 கருத்துரைகள்!


பரங்கப்பேட்டையிலிலுருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்காக 25 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க ஏராளமான மக்கள் மீராப்பள்ளியில் திரண்டனர். இதில் பெண்களின் கூட்டமும் நிரம்பியது. வழி அனுப்பி வைக்க அதிகமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாக இருந்தது.
மேலும் வாசிக்க>>>> "புனித ஹஜ் பயணம் 2008"

சனி, 29 நவம்பர், 2008 4 கருத்துரைகள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்குமா..? பேரூராட்சித் தலைவர் யூனுஸ் அவர்கள் வலைப்பூவிற்கு வலைஞர் கு. நிஜாமிடம் அளித்த பேட்டி வீடியோ தொகுப்பாக...


பேட்டி மற்றும் வீடியோ தொகுப்பு: கு. நிஜாம்.
மேலும் வாசிக்க>>>> "மழை பாதிப்பு - நிவாரணம் கிடைக்குமா..?: யூனுஸ் பேட்டி."

2 கருத்துரைகள்!

பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச்செய்தி"

வியாழன், 27 நவம்பர், 2008 10 கருத்துரைகள்!
0 கருத்துரைகள்!


 • மின் வினியோகம் அடியோடு பாதிப்பு.
 • பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன.
 • போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவாக காட்சியளிக்கிறது.
 • பரங்கிப்பேட்டையில் நேற்று பெய்த மழை அளவு: 26 செ.மீ.
 • மழையால் பாதிக்கப்ட்ட ஏராளமான மக்கள் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கனகசபை வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 • மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு ஜமாஅத் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது.
 • தனிப்பட்ட முறையிலும் சிலர் பால் மற்றும் இதர பொருட்கள் தந்து நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
 • புயல் இன்று காரைக்கால் அருகே கரையை கடந்துவிட்ட நிலையிலும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை தனி தீவானது."

4 கருத்துரைகள்!


நேற்றைய பதிவு நம்மில் சலனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் இல்லாமல் போனாலும் மழை அதன் பணியை செய்ய, மிகப்பெரும் திண்டாட்டமாகி போய்விட்டது அந்த குடியிருப்பு மக்களுக்கு.. பயந்தது போன்றே கிட்டத்தட்ட முழு குடியிருப்பும் மூழ்கிபோய் விட்டது என்றே சொல்லலாம். ஷாதி மஹாலுக்கு பின்புறமுள்ள கோட்டாறு தற்போது மனை பிரிவு போட்டு விற்கப்பட்டு விட்டதால் அங்கு சமபடுத்தப்பட்ட நிலத்தினால் வேறு வடிகால் இன்றி நீர் முழுதும் இந்த குடியிருப்பு நோக்கி பாய,... ஒரு வழியாக முத்துராஜா அவர்களின் முன்முயற்சியால் வாலிபர்கள் இணைந்து மணலை வெட்டி ஒழுங்கு படுத்தினார்கள். அங்கு வந்த மக்தூம் நானா அவர்கள் களத்தில் இறங்கி நீண்ட நேரம் நின்று வேலை வாங்கினார்கள். ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் நிலைமையை நேரில் வந்திருந்து பார்வையிட்டார். தொகுதி எம் எல் ஏ ஊரில் இருந்தும் வரவில்லை. அங்கிருந்த வாலிபர்களின் உடனடி நிதி திரட்டலில் நவாப்ஜான் நானா, (ஐநூறு) சுமையா ஹாஜா பக்ருதீன் நானா (ஐநூறு), மக்தூம் நானா (ஐநூறு), மற்றும் அய்மன் (இரநூற்றி ஐம்பது) கிடைத்தது. அதை கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அரை லிட்டர் பால் வாங்கி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே ஜமாஅத், குடியிருப்புவாசிகளில் சிலரை ஷாதி மஹாலில் குடியேற்றியும், தவ்ஹீத் நானா அவர்களின் முன்முயற்சியால் இரவு உணவு (பரோட்டா) ஏற்பாடு செய்யபட்டும் இருந்தது. ஏழைகளும் இந்த மழைக்காலத்தை நல்லபடியாக கழித்திட துஆ செய்வோம்.


மேலும் வாசிக்க>>>> "தில்லி சாஹிப் தர்கா இரண்டாம் பாகம்"

புதன், 26 நவம்பர், 2008 3 கருத்துரைகள்!

தகவல் & தொகுப்பு: வலைஞர் L. ஹமீது மரைக்காயர்
இன்ஷா அல்லாஹ் 2008 ஆம் வருடம் (29.11.2008) புனித ஹஜ் செல்ல ஹாஜிகளின் விபரம்:

வாத்தியாப்பள்ளித்தெரு
 • மீ.மெ. மெய்தின் அப்துல் காதர் அவர்களின் மகனார் மீ. மெ. மீரா உசேன்

 • மீ.மெ. மீராஉசேனின் துனைவியார் செரீபா

 • மர்ஹூம் அப்துல் ஹலிம் அவர்களின் துனைவியார் மீ.மெ. சல்மா பிவி

 • மீராப்பள்ளி தெரு
 • ஹமீதுகவுஸ் அவர்களின் துனைவியார் மீ.மெ. ரெஜியா பேகம்

 • கொல்லங்கடை தெரு
 • முஹம்மது கல்ஜி அவர்களின் துனைவியார் பாத்திமா

 • காஜியார் தெரு
 • மர்ஹூம் ஹபிபுல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனார் முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர்

 • முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் துனைவியார் கமருன்னிசா பீவி
 • ஹாஜா கமால் அவர்களின் மகனார் முசா கலீம் & மூசா கலீம் அவர்களின் துனைவியார் செரீன் பாத்திமா

 • காயிதே மில்லத் தெரு
 • மர்ஹூம் பஷீர் அவர்களின் துனைவியார் ரஹ்மத்துன்னிசா

 • ஷேக் சித்திக் அவர்களின் துணைவியார் நூர் பாட்ஷா பீவி

 • ஜெயின் பாவா தெரு
 • நூர் முஹம்மது அவர்களின் துனைவியார் மீ.மெ. ஜுபைதா பேகம்

 • அப்பா பள்ளி தெரு
 • மர்ஹூம் இஸ்மாயில் அவர்களின் துனைவியார் ஹலிமா பீவி

 • கலிமா நகர்
 • முஹம்மது பாருக் அவர்களின் மகனார் அபுபக்கர் சித்திக்

 • கிதர்ஷா மரைக்காயர் தெரு
 • செய்யது மரைக்கார் அவர்களின் துனைவியார் ராபியத்துல் பசிரியா

 • ஹக்கா சாஹிப் தர்கா தெரு
 • செய்யது மீரான் மரைக்காயர் அவர்களின் மகனார் ஹாஜா மக்தூம் மரைக்காயர் & செய்யது மீரான் மரைக்காயர் அவர்களின் துனைவியார் பாத்திமுத்து

 • ஜூன்னத் மியான் தெரு
 • முஹம்மது அலி அவர்களின் மகனார் சாஹூல் ஹமீது & சாஹூல் ஹமீது அவர்களின் துனைவியர் பாத்திமா பீவி

 • 1வது இரட்டை கிணற்று சந்து
 • ஹாஜி குலாம் மெய்தீன் மாலிமார் அவர்களின் துனைவியார் லத்திபாமா

 • இரண்டாவது இரட்டை கிணற்று சந்து
 • மர்ஹூம் ஹாஜி ஹாமீது மரைக்காயர் அவர்களின் மகனார் அப்துஸ் ஸமது ரஷாதி

 • மிர்ஜா மியான் தெரு (சின்னதெரு)
 • மர்ஹூம் முஹம்மது உஸ்மான் அவர்களின் மகனார் ஜாவீத் அலி & ஜாவீத் அலி அவர்களின் துனைவியார்

 • தோணித்துறை ரோடு
 • மர்ஹூம் யூசுப் மியான் அவர்களின் மகனார் அஜிஸ் மியான்

 • பண்டக சாலைத்தெரு
 • அபூபக்கர் அவர்களின் துணைவியார் நிலவர் நிஸா
 • மேலும் வாசிக்க>>>> "இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் - துஆ செய்வோமாக."

  1 கருத்துரைகள்!

  தொடர் கனமழையாலும், வீசிக் கொண்டிருக்கும் கடும் காற்றாலும் பரங்கிப்பேட்டை மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.

  ஆங்காங்கே மின் கம்பங்கள் அறுந்து விழுந்து கிடப்பதால் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

  புதுப்பள்ளியின் உள்ளே (தொழும் இடங்களில்) தண்ணீர் புகுந்து விட்டது. குளத்தின் மீன்கள் உட்பட பள்ளியின் உள்ளே உலா வருவதாக தகவல். தண்ணீர் வெளியேறாத வரை தொழ முடியாது என்ற அளவிற்கு பாதிப்பு.

  வேருடன் பிடுங்கி சாய்க்கப்பட்ட மரங்கள் பரங்கிப்பேட்டை எங்கும் காணப்படுகின்றன.

  ஐக்கிய ஜமாஅத் தலைவரும் - பேருராட்சித் தலைவருமான யூனுஸ்நானா மீட்புக் குழுவுடன் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்.

  தொகுதி எம் எல் ஏ சகோதரி செல்வி ராமஜெயம் உள்ளுரில் இருந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் பொதுஜனத்திடம் வந்து விட்டது.

  மேலும் வாசிக்க>>>> "வரலாறு காணாத மழை"

  செவ்வாய், 25 நவம்பர், 2008 2 கருத்துரைகள்!

  நமது வலைப் பூவில் கடந்த மார்ச் மாதம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது பற்றிய செய்தி பதிக்கப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

  இது பற்றி அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டிய கையாலாகாத அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் தற்போது
  பெய்து வரும் கடும் மழைக்கு தாக்கு பிடிக்காமல் அப் பாலம் இடிந்து விழுந்து, போக்குவரத்து முடங்கி விட்டது. பாதிப்பு பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.


  8 மாதங்களுக்கு முன்பே சிவப்பு (அபாய) கொடி நட்டப் பட்டும் ஏறெடுத்து பார்க்காத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இப்போது என்ன பதில் சொல்ல போகிறார்கள்?????

  தொடர்புடைய முந்தைய பதிவு
  மேலும் வாசிக்க>>>> "பாலம் இடிந்தது"

  4 கருத்துரைகள்!
  ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
  டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.  ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

  இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

  ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


  தகவல்: R.தவ்ஹீத்
  மேலும் வாசிக்க>>>> "வரலாறு காணாத மழை"

  4 கருத்துரைகள்!

  மழை பெய்வது எல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ்ஆ? என்று நமது வலைப்பூ வாசகர் ஒருவர் முன்பு கேட்டிருந்தார். மழைக்கு நான்கு பேர் பலி, சுவர் இடிந்து இரண்டு பேர் சாவு இதுவெல்லாம் தான் மழை பற்றிய நியூஸ் ஆக நாம் கற்பித்து வளர்க்கபட்டுள்ளோம். உணர்வுகளின் வருடல்கள் தாண்டி மனதை சம்மட்டியால் அடிக்கும் நிகழ்வுகளையும் மழை வெளிக்கொண்டு வரும். உங்களுக்கும் எங்களை போல உணர்வுகள் எனில் உங்களையும் புரட்டிபோடட்டும் இந்த புகைப்படங்கள்.
  தில்லி சாஹிப் தர்கா - மேல்தட்டு பரங்கிபேட்டைவாசிகளால், ஜகாத் கடமையாக்கப்பட்ட முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு வாழும் ஒரு பரிதாப குடியிருப்பு. சரியாக பெய்யாமல் போன இந்த இரண்டு நாள் மழைக்கே இந்த நிலை. இதோ இன்று பின்னி பெடலெடுக்கும் இந்த பெருமழைக்கு இந்த மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியின் அழுத்தம் இரவுகளிலும் தீரவில்லை.
  நம்மால் நடக்க முடியாது - இந்த குடியிருப்பின் நுழைவாயில்


  சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...

  சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.

  இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......

  என்ன செய்ய போகிறோம்..?

  மேலும் வாசிக்க>>>> "மழைக்கால தில்லி சாஹிப் தர்கா"

  வெள்ளி, 21 நவம்பர், 2008 0 கருத்துரைகள்!

  ஜூன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், எஹையா மரைக்காயர், ஹாஜா அமீனுதீன் ஆகியோர்களின் தாயாரும், முஹம்மது அலி (பாபு) அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். மர்ஹூம் அவர்களின் ஹக்கில் துஆ செய்வோமாக.
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  தகவல் : ஹம்துன் அப்பாஸ்
  மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

  வியாழன், 20 நவம்பர், 2008 10 கருத்துரைகள்!

  கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் ஆலோசனைக் கூட்டம் 16.11.2008 ஞாயிறு அன்று சங்க தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பளராக முன்னாள் நிர்வாகிகள் அலிஅப்பாஸ் , கவுஸ் ஹமீது ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
  இக்கூட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்காக நூலகம் அமைக்கலாம் என ஆலோசித்து CRESCENT LIBRARY என்ற பெயரில் துவங்க தீர்மானிக்கப்பட்டது. நமதூரில் இருக்கின்ற அனைத்து துறைகளை சார்ந்த பட்டதாரிகளும், தாங்கள் படித்து முடித்த புத்தகங்களை புதியதாக துவங்க இருக்கும் CRESCENT LIBRARY க்கு கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
  இதனால் மற்ற மாணவர்களும் பயன் அடைவார்கள். தாங்கள் கொடுக்க இருக்கும் புத்தகங்களை கிரசென்ட் நல்வாழ்வு சங்கம் அலுவலகத்தில் கொடுத்து விடவும் அல்லது போனில் தொடர்பு கொண்டால் நிர்வாகிகள் பெற்று கொள்வார்கள்.
  தொடர்புக்கு தலைவர் : 9894447720 செயலாளர் : 9894043863
  கூடுதல் விபரங்களுக்கு : www.crescentpno.blogspot.com
  மேலும் வாசிக்க>>>> "புதிய கிரசன்ட் லைப்ரரி"

  0 கருத்துரைகள்!

  மேட்டு தெருவில், மர்ஹூம் ஒலி முஹம்மது அவர்களின் மகனாரும், ஜெயினுல் கவுஸ், ஜூனைதுல் பக்தாத் ஆகியோர்களின் சிறிய தகப்பனாரும், அக்பர் அலி அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஹனிபா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். மர்ஹூம் அவர்களின் ஹக்கில் துஆ செய்வோமாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
  தகவல் : ஹம்துன் அஷ்ரப்

  மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

  1 கருத்துரைகள்!

  ராயல் தெருவில் (பங்களா வீடு), மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், தம்பிமா, அபுல் கலாம் ஆகியோர்களின் தாயாரும், சிராஜூதின், இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோர்களின் மாமியாருமாகிய சேத்தபீ என்கின்ற ஜலால் பீ மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று பகல் 3 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். மர்ஹூம் அவர்களின் ஹக்கில் துஆ செய்வோமாக..
  தகவல் ஹம்துன் அப்பாஸ்
  மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

  புதன், 19 நவம்பர், 2008 3 கருத்துரைகள்!

  குமுதம் (05-11-08) அரசு பதில்களிலிருந்து.....

  நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது? - முகம்மது அன்சாரி, தஞ்சை.

  இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். "ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.

  மேலும் வாசிக்க>>>> "நாட்டு நடப்பு: ஒரு இந்திய முஸ்லிமின் ஆதங்கம்"

  சனி, 15 நவம்பர், 2008 1 கருத்துரைகள்!

  பரங்கிப்பேட்டை அகரம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் தங்கராசு (வயது நாற்பது) இவர் மரம்வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று ஊரில் உள்ள பனைமரம் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தார். மரத்தை வெட்டியதும் அதை 2ஆக உடைத்தார். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதையடுத்து இரும்பு ஆப்பைவைத்து பெரிய சுத்தியலால் தங்கரசு அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஆப்பு விலகி தங்கராசு தொடையில் விழுந்து. உடன் தங்கராசுவின் தொடையில் உள்ள நரம்பு துண்டானது. இதில் ரத்தம் முழுவதும் வெளியேறியது. அதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே தங்கராசு பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவத்தால் அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது.

  எதிர்பாராமல் உயிரிழந்த சகோதரின் இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு வலைப்பூ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

  மேலும் வாசிக்க>>>> "மரம்வெட்டும் தொழிலாளி பலி"

  வியாழன், 13 நவம்பர், 2008 3 கருத்துரைகள்!

  காலியாக உள்ள 1291 அரசுப் பணியாளர்களை நியமிக்க எழுத்து தேர்வு -
  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
  தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் (124), கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் (100), உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் உள்தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர் (151), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (128), மாவட்ட வருவாய்த் துறை உதவியாளர் (637) என்று 16 பிரிவுகளில் 1,291 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

  இதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1,213 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு உண்டு. மற்ற பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வில் பங்கேற்க ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்குள், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

  அடுத்த ஆண்டு மார்ச் 22ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் 236 அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதற்கான கட்டணம் ரூ.30. தேர்வு கட்டணம் ரூ.100. விண்ணப்பம் கிடைக்கும் அஞ்சலகங்கள் மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.

  தகவலுக்கு நன்றி : இறைநேசன்
  பரங்கிப்பேட்டை.
  மேலும் வாசிக்க>>>> "டிஎன்பிஎஸ்சி -தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு"

  1 கருத்துரைகள்!

  கல்விக்குழு சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் (டியுஷன்) நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அவ்வப்போது மாற்று திறன் போட்டிகள் நடைபெறும். ஒரு மாதம் முன்பு நடைபெற்ற வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேற்று மாலை டியுஷன் வளாகத்தில் (மஹ்மூதியாஓரியண்டல் பள்ளி) பரிசு வழங்கப்பட்டது.
  மேலும் வாசிக்க>>>> "கல்விக்குழு செய்தி"

  புதன், 12 நவம்பர், 2008 1 கருத்துரைகள்!

  பரங்கிபேட்டை கும்மத் பள்ளி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். இஸ்மாயில் மரைக்காயர் அவர்களுடைய மகனாரும், கடலூர் ஒ.டி. இஷாக் மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் கும்மத் பள்ளி தெருவை மர்ஹூம் புஸ்தாமி அவர்களுடைய மைத்துனரும் ஆகிய எம். ஐ. இலியாஸ் அவர்கள் நேற்று இரவு மர்ஹூம் ஆகி விட்டார்கள்.

  இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில். அன்னாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களின் மறுமை நலன்களுக்காகவும் ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

  3 கருத்துரைகள்!

  பரங்கிப்பேட்டை, கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்தில் கடந்த சிலவருடங்களாக தலைவர் எம். கவுஸ் ஹமீது அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதால், முன்னாள் நிர்வாகி எம்.கே. அபுல்ஹசன் அவர்கள் முன்னிலையில் 03.10.08 அன்று புதிய தலைவராக ஏ.எல். ஜாபர் சாதிக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ஹெச்.எம். முஹம்மது காமில், பி. முபாரக் அஹமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக ஏ.ஹெச். இர்ஃபான் அஹமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  பாரம்பரியம் வாய்ந்த கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்திற்கு mypno வலைப்பூ சார்பிலும் கல்விக்குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

  மேலும் வாசிக்க>>>> "புதிய நிர்வாகத்தின் கீழ் கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கம்"

  24 கருத்துரைகள்!

  இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பவாணி, ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை அமைப்பாளர் அழகப்பா, ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனூஸ் கலந்துக் கொண்டார். ஊர்வலம் பரங்கிப்பேட்டை, அகரம் வீரப்ப பூங்காவிலிருந்து பஸ்நிலையம் வழியாக கச்சேரித் தெருவில் உள்ள மனித உரிமைகள் கழக அலுவலகத்தை அடைந்தது. இதில் மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயராமன், லோகநடேசன், மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேந்தின், மாவட்ட வழக்கறிஞர் சுதாகர், மாவட்ட நிருபர் ரவி, நகர அமைப்பாளர் மாரியப்பன், துணை அமைப்பாளர் முத்துகுமார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட புரலவர் முத்து குமரன், செய்திபிரிவு கார்த்திகைபாலன், மகளிர் அணி தாட்சாயிணி, இளஞர் அணி அலி அக்பர் மற்றும் உத்ராபதி, வடிவேல், இளங்கோ முடிவில் குமார் அவர்கள் நன்றி கூறினார்.
  மேலும் வாசிக்க>>>> "இலங்கை தமிழர்கள் படுகொலை கண்டித்து மெளன ஊர்வலம்"

  திங்கள், 10 நவம்பர், 2008 6 கருத்துரைகள்!

  பரங்கிபேட்டை வெள்ளாற்று பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதை விரைந்து கட்டி முடிக்க கோரியும் பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை பரங்கிபேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெரு சந்திப்பில் கண்டன கூட்டம் நடந்தது.
  அதில் தோழர் ராஜேந்திரன், முராத் மற்றும் தோழர் மூசா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

  மூசா அவர்கள் பேசுகையில் தற்போது நிகழும் அரசியல் சார்பான பிரச்சனய்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்தார். இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமேயில்லை என்று ஹைதராபாதில் கூடிய தேவ்பந்து உலமாக்கள் ஆறாயிரம் பேர் கொடுத்திருக்கும் பத்வாவை குறிப்பிட்டு பேசினார். மத்திய அரசின் அமெரிக்க அடிமை போக்கையும், மாநில அரசின் மின் வெட்டு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் குறித்து தனது வழக்கமான ஸ்டைலில் உரையாற்றினார்.
  மேலும் வாசிக்க>>>> "கண்டன பொதுக்கூட்டம்"

  0 கருத்துரைகள்!

  இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் நேற்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
  1. கடந்த ரமலான் மாதத்தில் ஜகாத், பித்ரா வசூல் மற்றும் விநியோகம் குறித்த வரவு செலவு அறிக்கையை ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்து குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

  2. கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதை ஜமாஅத் தலைவர் விபரமாக தெரிவித்தார்.

  3. இந்த ஜமாத்தின் செயல் காலம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டி (ஒரு அட்வகேட் மூலம்) பொதுக்குழுவில் வைத்து தேர்தல் நடைமுறைகளை தெளிவு படுத்த இருப்பதாக தலைவர் கூறினார்.

  பிறகு பொது விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜாமத்தில் இளைஜர்களை அதிக அளவில் சேர்பது குறித்து ஜனாப் ஹாஜி மௌலவி சாஹிப் வலியுறுத்த அதற்கு பதிலளித்த ஜமாஅத் தலைவர் நூற்றி என்பது செயற்குழு உறிப்பினர்களில் என்பது பேர் இளைஞர்கள் என்றும் அவர்களில் பலர் அழைக்கப்பட்டும் வருவது கிடையாது என்று தெரிவித்தார்.

  கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் என்ன என்று உறுப்பினர் ஜனாப் கலிக்குஜ் ஜமான் அவர்கள் கேள்வி எழுப்ப முஸ்லிம்களின் பொருளாதாரம், மாற்று சசமுதாயதினருடனான பிரச்சனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பொது நோக்கங்கள் என்று ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் பற்றி ஜமாஅத் தலைவர் விவரித்தார்.
  கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுதுமே, ஒரு ஜமாஅத் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தை சிறந்த உதாரணமாக அனைவரும் காட்டுவதை பெருமிதத்துடன் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார். பிறகு செயற்குழு உறுப்பினர்கள் ஏற்புடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
  மேலும் வாசிக்க>>>> "இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம்"

  ஞாயிறு, 9 நவம்பர், 2008 9 கருத்துரைகள்!

  கலைகழகம் நடத்திய கிராம அளவிலான போட்டிகளில், பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த நமது பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்கள், சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார். பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வு மற்றும் போட்டியிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி\ கட்டுரை போட்டி) பெரும்பாலும் முதலிடம் பிடிக்கும் இந்த மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் பள்ளி முதல் மாணவியாக வந்து நமது ஜமாஅத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கைகளால் சிறப்பு பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற முயற்சித்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் இந்த சகோதரி ஒரு டாக்டர் ஆகி தன் சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ளார். (இன்ஷா அல்லாஹ்).
  கல்வி குழு சார்பாக நாம் பேட்டி எடுத்த எத்தனையோ சகோதரிகளிடம் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தையே அரிதாக நாம் காணும் நிலையில் இத்தனை உயர்ந்த லட்சியம் கொண்டு இயங்கும் இந்த சகோதரியின் பின்புலம் தான் என்ன என்று பார்க்க போனால் ..... அந்த சகோதரியை முழு அளவில் ஊக்கப்படுத்தி அவருக்காக தியாகங்கள் பல புரிந்து கனவு காணும் அவரின் அன்பு பெற்றோர்கள் தான்.

  இவருக்காக நாம் செய்ய வேண்டியது அவரின் கனவு லட்சியத்திற்கு (சமுதாயத்தின் லட்சியமும் அதுதான்) நமது மதிப்பு மிக்க பிரார்த்தனைகளும் நல் வாழ்த்துக்களும் தான் இன்ஷா அல்லாஹ் .
  செய்வோமா?
  மேலும் வாசிக்க>>>> "வருங்கால மருத்துவரை வாழ்த்துவோம்"

  7 கருத்துரைகள்!

  காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனாரும், மர்ஹூம் M.G.கவுஸ்மியான் அவர்களின் மருமகனாரும், முஹம்மது நெய்னா (சேட்டு), நிசார் அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹம்மது ஹுசைன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
  மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி."

  சனி, 8 நவம்பர், 2008 20 கருத்துரைகள்!

  பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று மாலை 4 மணியளவில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்கள் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் பங்கு பெற்றனர்.
  அடிக்கடி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மீண்டும் அதே நயவஞ்சக முறையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க சதிச்செயல் புரியும் சங்பரிவார தீவிரவாத அமைப்புகளை தடை செய்யக் கோரியும் சங்பரிவார பயங்கரவாதிகளை கைது செய்ய கோரியும் அப்பாவி முஸ்லிம்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு குண்டு வைத்த சங்பரிவார தீவிரவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட தவறிய மீடியாக்களை கண்டித்தும் அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் சிபிஐ விசாரனைக்கு மாற்றம் செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.
  மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்"

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234