புதன், 24 செப்டம்பர், 2008

மஹ்மூத்பந்தரில் ஒரு முஹம்மது அலி...!!!



பரங்கிப்பேட்டையில் ஒரு மாநில சாம்ப்பியன்.....
மாநில அளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டி (Professional Boxing) 21, மற்றும் 22 செப்டம்பர் அன்று கடலூர் அண்ணா விளயாட்டு அரங்கில் நடைபெற்றது. 63 - 65 kg வெல்டர் வெயிட் ( Welder Weight ) பிரிவில் மாநில சாம்ப்பியன் பட்டத்தை நமதூரை சேர்ந்த சகோதரர். ஹ.ஹமீது கவுஸ் அவர்கள் வென்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

 நமதூரில் இருந்து குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் சாம்ப்பியன் பட்டத்தை பெற்ற முதல் மற்றும் ஒரே சகோதரர் இவர்தான். 

        கிரிக்கெட், பால் பேட்மின்டன் தவிர வேறு மாற்று விளயாட்டுக்கள இல்லை என்பதான பிம்பம் நம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட இந்த காலத்தில் குத்துச்சண்டை போன்ற தீரமிக்க, ரிஸ்க் (இதற்கு சரியான தமிழ் வார்த்தை இப்னு ஹம்துன் முதலியோர் பிரதியிடலாம்.)  நிறைந்த விளயாட்டினை ஊரில் அறிமுகப்படுத்தி, அதில் கடுமையான பயிற்சியும் மேற்கொண்டு சாதித்து காட்டியுள்ளார் நமது இந்த சகோதரர். 

தனது சாதனையை ஏக இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிப்பதாக கூறி நம்மிடம் பேசிய சகோதரர். ஹமீது கவுஸ் அவர்கள் இதுபோன்ற வலிமையை நிருபிக்கும் உண்மையான விளயாட்டுக்களுக்கு உரிய இடம், உபகரணப்பொருட்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் இல்லாமல் இருப்பது சாதிக்க துடிப்பவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும்  பெரும் பின்னடைவாக இருக்கும் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

பரங்கிப்பேட்டையை சார்ந்த சமுதாய ஆர்வலர்களும், தனவந்தர்களும், இந்நிலையை நீக்கி இது போன்ற விளயாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க முன்வர வேண்டும் என்ற தனது உள்ளக்கிடக்கை தெரிவித்தார்.

               இதுவிஷயத்தில் பயிற்சிப்பொருட்கள், ஊக்கத்தொகைகள் கொடுத்து தனது சக்திக்கு மீறி ஆரம்பம் முதலே பெறும் ஊக்கமளித்து வந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தினையும், அதன் தலைவர் ஜனாப். முஹம்மது யூனுஸ் அவர்களின் தனிப்பட்ட உதவிகளயும் நன்றியுடன் நினைவுகூர்நதார்.

மேலும், சிறப்பான பயிற்சியும், பயிற்சியளவில் மிக ஊக்கமும் கொடுத்த மாநில தொழிற்முறை குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர். ஜி.பி.மகேஷ் பாபு அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார் கல்விக்குழுவின் இந்த மூத்த உறுப்பினர். 

இவரின் அடுத்த இலக்கு... வருகின்ற டிசம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள தேசியஅளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் சாம்ப்பியன் பட்டத்தை வெல்வதுதான். 

மிகசமீபத்தில் தன் வாழ்வில் மிகப்பெரும் இழப்பு ஒன்றினை சந்தித்தாலும் அல்லாஹ்வின் அருள கொண்டு இத்தனை தூரம் சாதித்துகாட்டிய சகோதரர் ஹமீது கவுஸ்அவர்களுக்கு mypno வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள்