பரங்கிப்பேட்டை: வத்தக்கரையில் இன்று நன்பகல் 12 மணிக்கு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுபள்ளது. விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் வைத்திருந்த வகை வகையான மீன்களும், 800 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்டோரேஜ்களும் தீக்கிரையாயின. சுமார் 15 மீன் விற்பனை நிறுவனங்கள் முற்றிலும் எரிந்து சுவர்கள் மட்டும் மிச்சமுள்ளன. இந்த மாபெரும் சோக நிகழ்வு விட்டுச் சென்ற தடங்கள் உங்களின் பார்வைக்கு...
திங்கள், 9 மே, 2011
பற்றியெறிந்த வத்தக்கரை, கண்ணீரில் வியாபாரிகள்..!

நேற்றைய பாத்திமா நகர் தீ விபத்தின் சோக நினைவுகள் நீங்குவதற்குள், இன்று பகல் சுமார் 12 மணியளவில் வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, காட்டுத்தீ போல மள மள என்று பரவியதால், வத்தக்கரை பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்தது. கருகி கிடக்கும் மீன்கள், கவலை தோய்ந்த முகங்களுடன் செய்வதறியாது திகைத்து நிற்கும் வியாபாரிகள், கட்டுக்கடங்காத தீ வெப்பத்தினால் காலணியினையும் தாண்டி தகிக்கும் பூமி, அரசுத்துறை அதிகாரிகள் தொடர் வருகை, குவிக்கப்பட்டுள்ள காவல்துறை, இப்படி பரப்பரப்பு கலந்த சோகமாக காட்சியளிக்கிறது அன்னங்கோயில் பகுதி.
பற்றியெறியும் வத்தக்கரை: கட்டுக்கடங்காத பயங்கர தீ விபத்து!
பரங்கிப்பேட்டை: இன்று பகல் சுமார் 12 மணிக்கு வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோயிலில் உள்ள மீன் விற்பனை மற்றும் கிடங்கு வளாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. அது மளமளவென்று கட்டுக்கடங்காமல் காட்டுத்தீப் போல் வளாகத்தில் உள்ள அனைத்து கிடங்கு மற்றும் விறபனை நிலையத்திற்கும் பரவியது. நகரத்திலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை வான் நோக்கிப் பார்த்தால் வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது போன்று ஒரு பயங்கர-பிரமாண்ட தீ விபத்தை இதற்கு முன் பரங்கிப்பேட்டையில் நிகழ்ந்திருக்கிறதா என தெரியிவில்லை. கடல்வாழ் உயிரியல் கல்லூரியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மக்கள் வழியெங்கும் நின்று கொண்டு வேடிக்கை பாத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டும் நிலைமையை கட்டுப்படத்த நேரம் பிடித்தது. பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் கடுமையாக போரடினர். பேரூராட்சித் தலைவர், வட்டாட்சியர், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர்.

குளிரூட்டிகளில் அடைத்து வைக்கபட்ட பல லட்ச மதிப்பள்ள மீன்கள், ஸ்டோரேஜ்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் மட்டுமின்றி கணக்கிலடங்காத பொருட்கள் தீக்கு இரையாயின. சில கேஸ் சிலிண்டர்களும் வெடித்தன. இன்னும் இதுவரை சேத மதிப்பீடு தெரியவில்லை.

பரங்கிப்பேட்டையில் மாணவி ஷர்மிளா முதலிடம்! நவீனா இரண்டாவது இடம்!! ஸ்டெல்லா 3-வது இடம்!!!
பரங்கிப்பேட்டை: தமிழகமெங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பரங்கிப்பேட்டையில் வழக்கம் போல மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றனர். மட்டுமின்றி, முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். அதன்படி,
சேவாமந்திர் பள்ளி மாணவி செல்வி. ஷர்மிளா 1125 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.
கலிமா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. நவீனா 1105 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அரசு மகளிப் பள்ளி மாணவி செல்வி. ஸ்டெல்லா 1075 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு MYPNO இணையதளத்தின் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்!

பிளஸ்-2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண் பெற்று முதலிடம்
ஓசூர்: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி ரேகா 1200-க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம்:- தமிழ்-195 ஆங்கிலம்-195 இயற்பியல்-200 வேதியியல்-200 உயிரியல்-200 கணிதம்-200 மொத்தம்-1190
மாணவி ரேகாவின் தந்தை கேசவன். தனியார் கம்பெனி அதிகாரி, தாய் மலர்விழி. இவர் ஆவலப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் ஓசூர்-பாகலூர் ரோட்டில் வசித்து வருகின்றனர். கிருத்திகா என்ற தங்கை உள்ளார். இவர் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
மாணவி ரேகா 10-ம் வகுப்பு படித்தபோது 479 மதிப்பெண்கள் எடுத்து ஓசூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். சக மாணவிகள் அவரை தூக்கி கொண்டு பள்ளியை சுற்றி ஊர்வலமாக வந்து உற்சாகமாக கொண்டாடினர்.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் இடைவிடாமல் தொடர்ந்து படித்தேன், எனக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் உதவி செய்தனர். நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றது சந்தோசமாக இருக்கிறது.
நான் டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன். மற்ற மாணவிகளை போலவே நானும் படித்தேன். பாடத்தை புரிந்து கொண்டு படித்ததால் நான் இந்த சாதனையை படைத்தேன்.
இதற்காக நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை, எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
200க்கு 200 எடுத்த மாணவர்கள் விபரம்
உயிரியல் 615 பேர்
தாவரவியல் 4 பேர்
கணிதம் 2720 பேர்
வேதியியல் 1243 பேர்
இயற்பியல் 646 பேர்
கணித அறிவியல் 223 பேர்
விலங்கியலில் யாரும் 200 ரன் மார்க் எடுக்கவில்லை.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...