சனி, 11 பிப்ரவரி, 2012

சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் S.நூர் முஹம்மது நாளை பதவி ஏற்க இருக்கும் சூழலில், J.ஹஸன் அலி என்பவர் விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக சமுதாய அமைப்புகள் எழுப்பி இருக்கும் வினாக்கள், பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிக்கை இவற்றிற்கிடையில், டாக்டர் S.நூர் முஹம்மது இன்று MYPNOவிடம் கூறுகையில்:

நடுநிலையாளர்களான H.அப்துல் ஹமீது, S.காஜா சுல்தான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் என்னை வந்து சந்தித்தனர்,

அதனடிப்படையில், சிதம்பரம் - கடலூர் ஆகிய ஊர்களில் இரு அமர்வுகள் நடத்தப்பட்டது, அப்போது பேசப்பட்டபடி B.ஹமீது கவுஸுக்கு ஜமாஅத் துணைத்தலைவர் பதவியும், M.E.அஷ்ரப் அலி, S.S.அலாவுதீன் ஆகியோர்களுக்கும் பொறுப்பு வழங்குவது என்றும் பேசப்பட்டபோது, ஊரின் ஒற்றுமையையும் நன்மையையும் கருதி, நான் சம்மதித்தேன். கூடுதலாக B.ஹமீது கவுஸுக்கு பைத்துல்மால் தலைவர் பதவியும் தர வேண்டும் என்றும் பேசப்பட்டபோது, நான் மவுனமாக கேட்டு கொண்டிருந்தேன்.

மேலும் தலைவராகிய நான் தவிர்க்க இயலாத சில நேரங்களில் ஜமாஅத் கூட்டங்களில் கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், துணைத்தலைவர் B.ஹமீது கவுஸுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க, ஒரு தீர்மானத்தினை கொண்டு வருகிறேன், சக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தால் அவ்வாறே செயல்படலாம் என்றேன்.

நான் முன்பு தலைவராக பதவி வகித்த போது பைத்துல்மால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதால், எனக்கு பைத்துல்மால் அமைப்பு விதிகள் தெரியவில்லை, நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே எனக்கு, பைத்துல்மால் அமைப்பு நிர்ணயச் சட்டவிதிகள் அடங்கிய புத்தகம் கா.மு.கவுஸ் மூலம் கிடைத்தது. அதை படித்து பார்த்த போது, ஜமாஅத் தலைவர் தான் பைத்துல்மால் அமைப்பின் தலைவராக இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், சட்டத்தின்படி B.ஹமீது கவுஸ் தலைவராக முடியாது என்பதால் அதற்கு உடன்பட மறுத்தேன்.

மற்றபடி அவர்கள் சொன்னதையும் கருத்தில் கொண்டு பைத்துல்மால் செயலாளராக M.E.அஷ்ரப் அலி, பொருளாளராக S.S.அலாவுதீன் என்று நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து அனுப்பிய போது, அவர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்ததுடன் பைத்துல்மால் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றனர். இச்சூழலில், காபந்து நிர்வாகமாக செயல்படும் இன்றைய ஜமாஅத் நிர்வாகம், இன்று காலை எனக்கு அனுப்பிய தபாலில், J.ஹஸன் அலி விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக, சமுதாய அமைப்புகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதில் கிடைக்காதவரை ஜமாஅத் நிர்வாகத்தை ஒப்படைக்கமாட்டோம் என்று எழுதி இருப்பதாக தெரிவித்தர்.





மேலும் அவர் கூறுகையில், காபந்து ஜமாஅத் தலைவர் இருதரப்பையும் அழைத்து 5 நிமிடங்களில் சுமூக தீர்வு காணாமல், விடை கிடைக்கும் வரை நிர்வாகத்தை தரமாட்டோம் என்று சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை தருவதோடு, இது குற்றவியல் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்றரர் டாக்டர் S.நூர் முஹம்மது .

ஹஸன் அலி வெளியிட்டிருக்கும் துண்டு பிரசுரம் தொடர்பாக கேட்ட போது, "அவர் மீடியேட்டர்களில் ஒருவராக இல்லை, அவர் இதனால் பாதிக்கப்படவுமில்லை. மேலும், இது சம்பந்தமான வினா எழுப்ப இருமுறை நடைபெற்ற சந்திப்புகளில் கலந்துக் கொண்டோர்களுக்கு மட்டுமே இதில் முழு உரிமை இருக்கிறது என்றார்.

சமுதாய அமைப்புகள் இப்போது எழுப்பி இருக்கும் வினாக்கள் தொடர்பாக கேட்டபோது, " சமுதாய நலனில் அக்கறை உள்ள இவர்கள் என்னை நேரடியாக சந்தித்து கேட்டிருக்கலாமே, என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சந்திப்பு: ஹம்துன் அப்பாஸ், MGF

MYPNO முக்கிய அறிவிப்பு

ஒரு சில நாள்களாக நமது mypno.com தளம் தொழிற்நுட்பக் கோளாறுகளால் முடங்கியுள்ள நிலையில், வாசகர்களுடனான தொடர்பில் முடக்கம் ஏற்படக்கூடாது, என்ற நிலையில் நமது தளம் உடனடியாக நமது வலைப்பூவிற்கு திருப்பிவிடப்படுகிறது. வலைப்பூவிலேயே தற்காலிகமாக செய்திகள், தகவல்கள் உடனுக்குடன் வலையேற்றப்படுகின்றன.

இந்நிலையில், வலைத்தளத்தில் வைத்திருந்த மறுமொழி மட்டுறுத்தல் வலைப்பூவில் இல்லாமல் போனதால், எங்களை அறியாமல் சில தரக்குறைவான கருத்துகள் மறுமொழியில் வெளிவந்துள்ளன.

இச்சறுக்கல் உடனடியாக எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் அதனைச் சரி செய்துவிட்டோம்.

இதனால் ஏற்பட்ட தேவையற்ற மன உளைச்சல்களுக்கு ஆசிரியர் குழுவின் உளப்பூர்வமான மனவருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிதலுக்கு நன்றி.

Editors
Mypno.com

இறப்புச் செய்தி: முஹம்மது முஸ்தபா மரைக்காயர்


ஜெயின்பாவா தைக்கால் தெருவில் மர்ஹும் ஷேக்கா மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் தம்பியும், மர்ஹும் யூனுஸ் மரைக்காயர் (கடலூர் OT) அவர்களின் மருமகனும், மர்ஹும் Y முஹம்மது சுல்தான் , மர்ஹும் Y. முஹம்மது ஹஸன், மர்ஹும் Y.M கமால், Y.ஷேக் அப்துல் காதர் (பேங்காக்) ஆகியோரின் மைத்துனரும், யஹ்யா மரைக்காயர் அவர்களின் மாமாவும், M. முஹம்மது இக்பால் (கடலூர் OT) அவர்களின் மாமனாரும், M.ஷாஹுல் ஹமீது, M.செய்யத் மரைக்காயர் ஆகியோரின் தகப்பனாருமான முஹம்மது முஸ்தபா மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: M.S.முஹம்மது யூனுஸ் அறிக்கை.!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாளை காலை மீராப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி, தனது முன்னிலையில் நடக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மய்யத் செய்தி - கடலூர் O.T.

அஸ்ஸலாமு அலைக்கும் ,


கடலூர் O.T. யில் மர்ஹூம் அஹ்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், A.H. பக்கீர் மொஹியதீன் சாபு, A.H. அபூபக்கர் மௌலானா, A.H.குலாம் காதர் (ஹாஜி), A.H.உமர் சாபு இவர்களின் தாயாருமாகிய S.M. செய்துன்னிஷா (மோச்சம்மா) இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் O.T யில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.


நாளைகாலை நல்லடக்கம் கடலூர் O.T. யில். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் .

ஜமாஅத் தேர்தல்: சமுதாய அமைப்புகள் போர்க்கொடி..!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் டாக்டர் S. நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்க இருக்கும் நிலையில், ஜமாஅத் நிர்வாகிகள் யார் என்பதில் தொடங்கிய பரபரப்பு இன்று அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
பரங்கிப்பேட்டை சின்னக்கடை தெருவை சேர்ந்த J.ஹஸன் அலி என்பவர், டாக்டர் S.நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன என்பதை தெரிவிக்கிறேன் என்று நேற்று மாலை வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்பிரசுரம் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னரும் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும், இஸ்லாமிய அமைப்புகளான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நிர்வாகிகள் முத்துராஜா, ஃபாஜல் ஹுசேன், இக்பால், சாஹுல், ஹஸன் அலி, அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக(TMMK) நிர்வாகிகள் ஜாக்கீர், பிலால், நஜிரான், செய்யது, ஹஸன் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்(INTJ) நிர்வாகிகள் நஸ்ருத்தீன், கவுஸ் ஹமீது, எஹ்யா மரைக்காயர், ஹாஜா ஆகியோர் இன்றிரவு சுமார் 8.00 மணியளவில் பரங்கிப்பேட்டையில் ஒன்று கூடி, J.ஹஸன் அலி என்பவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் உண்மை நிலை பற்றி பொதுமக்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலை இருப்பதால் ஊரின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்பட வேண்டும். எனவே இதன் உண்மை நிலையை அறிந்து தெளிவு ஏற்படும் வரை பதவி பிரமாண நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் ஆடிட்டர் I.முஹம்மது இல்யாஸை சந்தித்து முறையிட்டனர்.

இதற்கு பதிலளித்த முஹம்மது இல்யாஸ், “தேர்தல் முடிவடைந்து சான்றிதழ் வழங்கியதோடு தங்களது கடமை முடிவடைந்து விட்டது. தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் தான் பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஜமாஅத் அமைப்பு நிர்ணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.

பின்னர் மீராப்பள்ளியில் நடைபெற்ற சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் தற்போதைய ஜமாஅத் தலைவர் (பொறுப்பு) I.இஸ்ஹாக் மரைக்காயரை இம்மூன்று அமைப்பினரும் சந்தித்து கேட்டனர். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்மை தான், ஆனால் எங்களின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே நாள் தான் இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

பின்னர் மீண்டும் மீராப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்த இம்மூன்று அமைப்பினரும், சனிக்கிழமை (11-02-2012) அன்று பரங்கிப்பேட்டையில் தங்கள் அமைப்புகளால் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற போதிலும், பொது அமைதியினை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிடுவதாகவும், ஆனால் பொதுமக்களிடம் அதிக அளவில் கையெழுத்துகள் பெற்று ஜமாஅத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கும் மீராப்பள்ளி நிர்வாகி M.O.ஜமால் முஹம்மது வசம் பொதுமக்களின் கையெழுத்து அடங்கிய மனு வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

ஜமாஅத் தலைவர் பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமுதாய அமைப்புகள், J.ஹஸன் அலி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உண்மை நிலை தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது பரங்கிப்பேட்டையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...