பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 3 கருத்துரைகள்!

இன்று நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் பதவிக்கான பொதுத்தேர்தலில் அலமாரி சின்னத்தில் போட்டியிட்ட முஹமது யூனுஸ் வெற்றி பெற்றார். அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
வாக்கு விபரம்:
பதிவானவை: 1966
முஹம்மது யூனுஸ்: 1163
நூர் முஹம்மது: 785
செல்லாதவை: 18

சற்றுமுன் முடிந்த வாக்கு எண்ணிக்கையின்படி 378 ஓட்டு வித்தியாசத்தில் முஹம்மது யூனுஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து சான்றிதழையும் வழங்கினர். சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தியவாறு வீதிகளில் உலா வருகிறார் அலமாரி சின்னத்தின் வெற்றி வேட்பாளர் யூனுஸ் .
சான்றிதழை பெறுகிறார்


சின்னகடை முனையில் நன்றி அறிவிக்கிறார்

தகவல்கள்: களத்திலிருந்து இப்னு இல்யாஸ்
மேலும் வாசிக்க>>>> "அலமாரிக்கு வெற்றி!"

0 கருத்துரைகள்!

மிகச் சரியாக 5 மணிக்கு கடைசி வாக்காளராக தனது வாக்குப்பதிவினை செலுத்துகிறார்.
 
புகைப்படம்: இப்னு இல்யாஸ் 
 
மேலும் வாசிக்க>>>> "கடைசி நொடிப்பொழுதின் வாக்காளர்."

0 கருத்துரைகள்!

இன்று மாலை 5 மணியுடன் முடிவுற்ற ஜமாத் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்னும் சற்று நேரத்தில் ஷாதி மஹாலில் துவங்க உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று 9 மணிக்குள் அறிவிக்கப்பட உள்ளது. சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 7 மணிக்கு துவங்க உள்ள வாக்கும் எண்ணும் பணிக்காக தயார் நிலையில் உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "இன்று இரவு 9 மணிக்குள் முடிவுகள்"

0 கருத்துரைகள்!இன்றைய தேர்தலில் இன்ஸ்பெக்டர் இராம பாண்டியன் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி. நரேந்திர நாயர் இரு முறை களத்திற்கு வந்து நிலைமைகளை மேற்பார்வையிட்டுச் சென்றார். இந்த தேர்தலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் பேசியவர்கள், கடைசியில் அவர்களின் பணியை பாரட்டிச் சென்றினர். இடையிடையே ஏற்பட்ட கள்ள ஓட்டுகள் உட்பட்ட பல சலசலப்புகள் காவல் துறையின் தலையீட்டால் மட்டுமே முடிவுக்கு வந்தது. 
மேலும் வாசிக்க>>>> "களத்தில் காவலர்கள்"

0 கருத்துரைகள்!

 • மொத்த வாக்குகள் பதிவானவை: 1966 (59%)
 • இன்று காலை மிகச்சரியாக 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கியது.
 • நீண்ட-நெடிய (3) வரிசைகளில் வாக்காளர்கள் தமது வாக்குபதிவினை செலுத்தினர்.
 • பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பான முறையில் காவல் துறை பணியாற்றியது.
 • அரசு அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் களத் தொண்டர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர்.
 • பூத் ஏஜெண்ட், மீடியா, வேட்பாளர்கள், இதர முக்கிய அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு யாருக்கும் களத்தில் நிற்க அனுமதி தரப்படவில்லை.
 • தங்களால் இயலாவிட்டாலும் ஊரின் நலன் கருதி வயதானவர்கள் முதல் ஊனமுற்றோர்கள் வரை தமது கடமையை நிறைவேற்றினர்.
 • இடையிடையே சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் களையப்பட்டன்.
 • வாக்குப்பதிவு நடைபெற்ற ஷாதிமஹாலைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதியது. இவர்களை அடிக்கடி காவல் துறையினர் கலைப்பதும் பின்பு மக்கள் மீண்டும் கூடுவதும் வா(வே)டிக்கையாக இருந்ததது.
 • வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்களுக்கு வாக்குரிமை இல்லாமலிருந்தும், அவர்கள் அதிகமான ஆர்வம் காட்டினர். அந்ந வகையில் அவர்களில் பலர் நம்மை மட்டுமின்றி களத்திலிருந்த ஏனைய சிலருக்கு போன் செய்து அடிக்கடி தகவல் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக ஹம்துன் அப்பாஸ், ஹாமீம் போன்றோர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.
 • மேலும் வாசிக்க>>>> "தேர்தல் துளிகள்"

  0 கருத்துரைகள்!


  கடைசி நிமிடங்களின் பரபரப்புகளுக்கிடையே வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது தனக்கான வாக்கினை சரியாக 4.40 மணிக்கு பதிவு செய்தார்.

  வாக்குச் சாவடி ஏற்பாடு நன்றாக உள்ளது: டாக்டர் கருத்து

  ஒட்டு மொத்த தேர்தல் ஏற்பாட்டில் சில அதிருப்திகளை கொண்டிருந்தாலும், இன்றைய வாக்குச் சாவடி ஏற்பாடுகள் நன்றாக உள்ளது என்று ஆப்பிள் சின்னத்தின் வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது நம்மிடம் கூறினார்.

  மேலும் வாசிக்க>>>> "கடைசி நிமிடங்களில் டாக்டர் வாக்குப்பதிவு"

  0 கருத்துரைகள்!


  காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பகல் 1.30 மணிவரை விறுவிறுப்புடன் காணப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு மாலை 4 மணி வரை மந்தமாகவே உள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி, 58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 
  மேலும் வாசிக்க>>>> "மந்தமான வாக்குப்பதிவு"

  1 கருத்துரைகள்!

  இன்று நடைபெற்று வரும் ஜமாஅத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்கு வாலிபர் ஒருவர் முயற்சித்த போது, அவரை தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். வாக்குபதிவிற்கான அவர் அளித்த இரண்டு ஆதரங்களும் போலியானவை என்று தெரியவந்தது.
  மேலும் வாசிக்க>>>> "கள்ள ஓட்டு!"

  0 கருத்துரைகள்!

  காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குபதிவு தந்போது (பகல் 12.30) சற்று மந்தமாக காணப்படுகிறது. இதுவரை 52 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.

  வேட்பாளர் முஹமது யூனுஸ் காலை 11.30 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். மற்றொரு வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது தனது வாக்கு பதிவை இறுதி நேரத்தில் செலுத்துவார் என்று தெரிகிறது.
  மேலும் வாசிக்க>>>> "சற்றுமுன்: தேர்தல் நிலவரம்"

  0 கருத்துரைகள்!

  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருக்கான பொதுத் தேர்தல் களத்தில் அரசு அதிகாரிகள் வேகமுடன் தங்கள் பணியை திறம்பட செய்து வருகின்றனர்.


  மேலும் வாசிக்க>>>> "தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள்."

  0 கருத்துரைகள்!

  Laughingகுறிப்பு: புகைப்படத்திலிருக்கும் தேதியை கவனத்தில் கொள்ள வேண்டாம். இப்பிழையை தனி பின்னூட்டமிட்டு கொல்லவும் வேண்டாம். 

  Article by: பந்தர் அலி ஆபிதீன்

  மேலும் வாசிக்க>>>> "ஆர்வமிகுதியில் முதியவர்கள் மற்றும் முடியாதவர்கள்"

  0 கருத்துரைகள்!

  இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும் முதியவர்கள்-ஊனமுற்றவர்கள் என்று மிகுந்த பரபரப்புகளுடன் ஓட்டு பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற-பாராளுமன்ற தேர்தலை மிஞ்சிவிடும் அளவிற்கு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. தேர்தல் நடைபெற்று வரும் ஷாதி மஹால் வளாகத்தின் வெளியே எங்கு நோக்கினும் இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது.  மேலும் வாசிக்க>>>> "சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலைக் காட்டிலும்...."

  2 கருத்துரைகள்!


  பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்க, இன்று மிகச்சரியாக காலை 8 மணிக்கு தேர்தல் துவங்கியது. மூத்த குடிமகன்கள் அப்துல் அஜீஸ் மற்றும் பேராசிரியர் அமீர் அலி இவர்களின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் நின்று 3 வாக்குச் சாவடிகளில் ஓட்டு போட்டு வருகின்றனர்.

  மேலும் அதிகச் செய்திகள், புகைப்படங்களுக்கு MPNO இணையத்தை தொடர்ந்து வலம் வருங்கள். உங்களுக்காக தொடர்ந்து அப்டேட் செய்கிறோம்.

  முழுமையான செய்திகள் அறிய முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு செய்திகளுக்கு கீழேயுள்ள "Read More" பட்டனை அழுத்தி பார்க்கவும்.
  மேலும் வாசிக்க>>>> "தேர்தல் தொடங்கியது."

  0 கருத்துரைகள்!

  மதுரையில், தினமலர் நாளிதழ், வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவை இணைந்து, பிப். 14 ல் பிளஸ் 2 மாணவர்களுக்கான குவிஸ் போட்டியை நடத்த உள்ளன.

  அறிவியல், விளையாட்டு, வரலாறு, கலை, கலாசாரம், பொழுதுபோக்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 2 பேர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்று கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் அவரவர் பள்ளியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

  பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி கிடையாது. தொலைதூர மாணவர்கள் தங்க வசதி செய்து தரப்படும். போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு முதல்பரிசு 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 7 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். பள்ளிகளுக்கு கேடயம், பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

  குவிஸ் போட்டிகளை திருச்சி ‘தி குவிஸ் சோசியேட்’ நிறுவனம் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு, ‘ஒருங்கிணைப்பாளர் பி.நெல்சன்ராஜா (98432 79083), எம்.ஜெயராஜ் (99432 06996) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

  இத்தகவலை கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், முதல்வர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.

  செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1207

  மேலும் வாசிக்க>>>> "பிளஸ் 2 மாணவர்களுக்கு குவிஸ் போட்டி"

  0 கருத்துரைகள்!

  பிளஸ் 2 தேர்வு எழுத ‘தத்கல்’ திட்டத்தில் தனித் தேர்வர்கள், பிப். 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

  இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  அடுத்த மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து ‘சிறப்பு அனுமதி’ (தத்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  தனித்தேர்வர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக, இத்துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்ப மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், பிப். 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் லுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

  செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1210

  மேலும் வாசிக்க>>>> "பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தத்கல் திட்டம்"

  0 கருத்துரைகள்!


  பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய சுற்றுச் சுவரை அகற்றாமல் அதன் மேல் கான்கிரீட் அமைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத் தினர்.

  சுற்றுச்சுவர்

  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ராஜஸ்தான் அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனையின் சுற்றுச் சுவர் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக இருந்து வந்தது.

  அதைதொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசு ரூ.29 லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய சுற்றுச்சுவர், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், பழைய கட்டிடத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

  பணி தடுத்து நிறுத்தம்

  நேற்று (09.02.2009) காலை மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேலை ஆட்கள் வந்தனர். அவர்கள் ஏற்கனவே இருந்த பழைய சுவரை அகற் றாமலேயே, அதன்மேல் கான்கிரீட் பெல்ட் அமைத்து சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, பழைய சுவரை இடிக்காமல் அதன் மேலேயே சுவர் எழுப்புகிறீர்களே என்று தட்டிக் கேட் டனர். இருப்பினும் அங்கு வேலை செய்த ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பணி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுற்றுசுவர் அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=468083&disdate=2/10/2009&advt=2
  மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் பழைய சுவருக்கு மேல் கான்கிரீட் அமைத்ததால் ஆத்திரம்!"

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234