செவ்வாய், 15 மார்ச், 2011

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்


தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு. 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எவை என்பதற்கான உடன்பாடு இன்று காலையில் கையெழுத்தானது, இதில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் கையெழுத்திட்டனர்.
தொகுதிகள் பற்றிய விபரங்கள் கீழே

1.ராயப்புரம்
2. பூவிருத்தவல்லி (தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர் (தனி)
5 . திருத்தணி
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
11. மதுராந்தகம்
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம்
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு 
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு (மேற்கு)
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகை
28. அவினாசி (தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை (தனி)
33. நிலக்கோட்டை (தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. மயிலாடுதுறை
40. விருத்தாசலம்
41. திருத்துறைப்பூண்டி (தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி (தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திக்குளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57 கடையநல்லூர்
58. வாசுதேவநல்லூர்
59. நாங்குனேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் கடும் அதிருப்தியில் விவசாயிகள்

சிதம்பரம், மார்ச் 13: முழுமையான வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கப்படாதததால் ஆளும் திமுக அரசின் மீது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 2010 கடைசியில் பெய்த கன மழையினால், வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டதாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 தினங்களுக்கு மேலாக நீர் சூழ்ந்து இயல்பு நிலை பாதித்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நிவாரணமான உணவு மற்றும் அரிசி சரியாக வழங்கப்படவில்லை.

ஆள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம், உரத் தட்டுபாடு, நெல்லுக்கு போதிய விலை இல்லாததது இவைகளை மீறி விவசாயிகள் சம்பா சாகுபடி பயிரிட்டனர். இந்நிலையில் கன மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து பயிர்கள் மூழ்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது.

வெள்ள நீர் வடிந்த பிறகு எப்போதும் போல் மத்தியக் குழுவினர் வந்து வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என கோரினர். ஆனால் அரசு ஹெக்டேருக்கு ரூ.8ஆயிரம் என அறிவித்தது. அந்த தொகையும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 50 சதவீதம்தான், உதாரணமாக ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் என நிவாரணம் வழங்கப்பட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு குடிசைகளுக்கு தலா ரூ.1500 வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் வெள்ள நீர் புகுந்த குறிப்பிட்ட குடிசைகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தினந்தோறும் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதும், போலீஸார் அவர்களை சமரசப்படுத்துவதுமாக அப்பிரச்னை முடிவுற்றது.

ஆனால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1500 நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் போதிய நிவாரணம் வழங்கப்படாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆளும் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை சரியாக வழங்கப்படவில்லை. இந்த அதிருப்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக திரும்பும் என தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் மா.கோ.தேவராசன் தெரிவித்தார்.
Source: Dinamani

சென்னையில் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள் அடம்

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதியில் உள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சீட்டு பெற்றுக் கொண்டுதான் வருவோம் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., 31 பேர் நேர்காணலுக்கு சென்றனர். யாருக்கு சீட்டு என்பது முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதால் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சென்னையிலேயே முகாமிட்டு தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சீட்டு கேட்டு மனு கொடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் ஜெயலலிதா தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் இவர்களும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளதால் சிதம்பரம் அரசியல் பரபரப்பு இல்லாமல் உள்ளது.
Source: Dinamalar

நேர்க்காணலுக்காக சென்னையில் காத்துக் கிடக்கும் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள்

சிதம்பரம் : தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், கூட்டணி அமைத்தல், சீட் பங்கீடு, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் சென்னையில் முகாமிட்டு தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

எப்படியும் சீட் பெற்றுவிட வேண்டும் என்ற முடிவோடு தி.மு.க., அ.தி.மு.க., காங்., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு காலை, மாலை என இரு வேளையும் தங்கள் ஆதரவு தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் ஆஜராகி கும்பிடு போட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி இதுவரை மவுனம் காத்துவரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் நாம் அழைக்கப்படலாம் என்ற நப்பாசையில் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் சென்னையிலேயே முகாமிட்டு நகரை சுற்றி பார்த்து ரசித்து வருகின்றனர்.

தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையில் குழுமியிருந்ததால் சென்னையே பரபரப்பாக இருந்து வந்தது. தொகுதி பக்கம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பார்ப்பதே அரிதாக உள்ளது.

தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., நேர்க்காணல் முடிந்து அக்கட்சிகளின் கட்டளையால் சென்னை முகாமை முடித்துக்கொண்டு அவரவர் தொகுதிக்கு திரும்பியுள்ளனர்.
Source: Dinamalar

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...