சனி, 5 மார்ச், 2011

இறப்பு செய்தி

காயிதே மில்லத் தெரு, மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னா லில்லாஹி வயின்னா இலைய்ஹி ராஜிவூன்.

Info: Skynews

விருப்ப மனு தாக்கல் செய்தார் M.S.முஹம்மது யூனுஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் - இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடந்த 03-03-2011 அன்று விருப்ப மனுவினை கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தலைமைக்கழக நிர்வாகிளான துறைமுகம் ஹாஜா, மாசிலாமணி, ஹஸன் முஹம்மது ஜின்னா, ஆகியோர்களிடம் சமர்ப்பித்தார், பின்னர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசிய M.S.முஹம்மது யூனுஸ், கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.கழக அரசில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சாதனைகளின் காரணமாக சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் தி.மு.-விற்கு இருப்பதால் தி.மு. மீண்டும் ஆட்சியில் அமரும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.முக.பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞ்ரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், நகர தி.மு. செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் G.செழியன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி, ஒன்றிய பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி, ஒன்றிய பிரதிநிதி கோமு, தவ்ஹீத், ஹனிபா, அப்துல் அஹத், ஹபீப் ரஹ்மான், மீராஹுசேன், வேலவன், கோவிந்தராஜ்,ஹமீது கவுஸ், பசீர், உதுமான் அலி, மாமுன் அலி மாலிமார், ஆரிப், நிஜாமுதீன், அன்சாரி, லெட்சுமணன், யாசின், சாஹுல், இஸ்மாயில் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

விஷ குளவி கொட்டி நான்கு பேர் காயம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் இன்று வாத்தியப்பள்ளி அருகில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்த விஷ குளவி கொட்டி நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இதில் வாத்தியபள்ளி தெருவை சேர்ந்த அப்துல் ரசாக்( 70), பள்ளிவாசல் அருகில் வாடா கடை வைத்திருக்கும் குலைச்சி (45), குலைச்சியின் கணவர் ராஜேந்திரன் (50 ) மற்றும் சின்னூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஜீவீதாவிற்கு இதில் பலத்தகாயம் காயம் அடைந்த ஜீவிதாவை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்பட்டார். எதற்கு எடுத்தாலும் கடலூருக்கு கொண்டு சொல்லும் அவலம் தொடர்கிறது. மேலும் தண்ணீர் தொட்டி இருந்தும் தண்ணீர் இல்லை போன்ற பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம் தொடர்கதையாகிவிட்டது.


தீயனைப்பு துறையும் தகவல் கொடுக்கப்பட்டு வெகு நேரம் கழித்து வந்தது பொதுக்மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியது.

நன்றி: TNTJ-PNO.