பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 7 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!


தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுர் நகரில் நடைப்பெற்றது , அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த சனிக்கிழமையன்று சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ. அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் S.M..ஹிதாயத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.

பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதின் காரணமாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையினால் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தவ்ஹீத் தலைமையில் அபுல்ஹஸன், தெளலத் அலி, ஹாஜா, ஹம்துன் அப்பாஸ், சாஹுல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை செயலாளருமான மூசா ராஜா, ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்க உரை நிகழ்த்திய டாக்டர் மீர் முர் முஸ்தபா உசேன், மூசா ராஜா IAS , ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி ஆகியோர் பல்வேறு அரிய ஆலோசனைகளையும், துறை சார்ந்த அனுபவங்களையும் வழங்கினார்கள்

கவிக்கோ தனது தலைமையுரையில், “எட்டாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமியர்கள் பல துறைகளில் ஆண்டு வந்தார்கள். விஞ்ஞானம் என்பது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு வழங்கிய பிச்சை. மருத்துவத்துறை நம் சமுதாயத்திற்கு புதியதும் அல்ல, மருத்துவ துறையில் தலைச்சிறந்து விளங்கிய இஸ்லாமிய சமுதாயம் தான் இன்று மிகப்பெரிய நோயாளி சமுதாமாக இருக்கிறது”, என்று ஆதங்கப்பட்ட கவிக்கோ, இறைவன் நாடினால் அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார், தொடர்ந்து பேசுகையில், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது என்றும், அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் 65 உறுப்பினர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பங்களிப்பு காசோலைகளை வழங்கினார்கள். பரங்கிப்பேட்டை சார்பில் 6 காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் தனியார்(கள்) பெயரில் தான் அமைந்திருந்தது. அதில் விதிவிலக்காக ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்ட ஒரே காசோலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு நமது சமுதாய மக்கள் பயனடையும் வகையில் நமது ஜமாஅத்-திற்கு கிடைக்கும். தொடர்ந்து இதுப்போன்ற ஆலோசனை கூட்டங்கள் திருநெல்வேலி, கீழக்கரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைப்பெற இருக்கிறது

கூட்டத்தின் இறுதியில் வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்பால், சாதிக் மற்றும் நீடுர் மதரஸா நிர்வாகிகள், வக்ஃப் வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க>>>> "“மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம்” - கவிக்கோ"

0 கருத்துரைகள்!

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பரங்கிப்பேட்டை நகர தமுமுக – ம.ம.க. சார்பில் தலைவர் ஜாக்கீர் ஹுஸைன் தலைமையில் ஒன்பது கார்கள், இரு வேன்களிலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஹஸன் அலி, செய்யது, பிலால்  உள்ளிட்ட நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.


காட்டுமன்னார்குடியிலிருந்து நமது நிருபர் 
மேலும் வாசிக்க>>>> "டிசம்பர் – 6 தொடர் முழக்கப் போராட்டம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை ஹாஜி எஸ்.ஒ.அலாவுதீன்  துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஐக்கிய நல கூட்டமைப்பின் சிறந்த திட்டங்களுல் ஒன்றான அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பரங்கிப்பேட்டையில் இரண்டு சகோதரர்களை  நியமித்து முழுகணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சமுதாய மக்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உதவி தேவைப்படும் சகோதர சகோதரிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதை வரவேற்கிறோம் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 மேலும் வாசிக்க>>>> "மக்கள் தொகை கணக்கெடுப்பு ..."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234