பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 5 மே, 2013 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வந்துள்ள நிலையில், தேர்தல் வேண்டாம் என்கிற குரல் வேகவாக ஒலித்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்கள் ஒருமித்த கருத்தாக தேர்தலை நிறுத்துவது குறித்து நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தமது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலை புறக்கணித்து சுமூக முறையில் கலந்த பேசி ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து சில நடுசிலையானர்கள் எடுத்த முயற்சியின் பலனாக இன்று காலை அப்பாப் பள்ளி தெருவில் உள்ள ஒரு வீட்டில் முக்கிய ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

50-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ள இக்கூட்டத்தில் தேர்தலை நிறுத்தி ஓற்றுமையுடன் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், வேட்பாளராக களம் இறங்க உள்ள ஹமீது அப்துல் காதர், ஜமாஅத்தின் தற்போதைய நிர்வாகிகள், முஹமது யூனுஸ் ஆதரவாளர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். தேர்தலை நிறுத்தி மாற்று வழியில் சுமூகமாக தலைவரை தேர்வு செய்வதே பலரது கருத்தாக உள்ளது.
இதில் பேசிய ஹமீது அப்துல் காதர், " தேர்தலை தவிர்க்க நானும் தயாராக உள்ளளேன். தற்போது ஊரில் பலரது கருத்து என்பது யூனுஸ் நானா ஏற்கனவே 12 வரடங்கள் தலைவரா பணியாற்றி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் பல முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அவர் இனி ஊர் நலனுக்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நமது பிரதிநிதுத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது தான். எனவே, மக்களின் கருத்தை ஏற்று யூனுஸ் நானா புதியவருக்கு வழிவகை செயய வேண்:டும். ஒருவேளை நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் யூனுஸ் நானாவை கௌரவ ஆலோசனை தலைவராக நியமித்து செயல்படுவேள்" என்று கூறினார்.

தொடர்ந்து பலரது கருத்துக்கள் ஆலோசனைகளுக்கிடையே நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இக்கூட்டம் இன்று மாலை வரை தொடரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஜமாஅத்தின் து.தலைவர் லியாகத் அலி தலைமையில் ஒரு குழுவினர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க>>>> "புதியவர்களுக்கு விட்டுத் தரனும்..! தேர்தலை நிறுத்த அவசரமாக கூடியது நடுநிலையாளர்கள் கூட்டம்..!!"

0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தல் களத்தில் போட்டியிடப்போவதாக அதன் முன்னால் தலைவரும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனஸ் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தர். இந்நிலையில் தேர்தல் அலுவல் பணிகளுக்காக தனது தேர்தல் அலுவலகத்தை இன்று காலை 10 மணிக்கு திறந்துள்ளார்.

சின்னக்கடை தெருவில் உள்ள பாசில் மளிகை கடையை எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தனது தேர்தல் அலுவலமாக திறந்து உள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "தேர்தல் அலுவலகம் திறந்தார் எ;.எஸ். முஹமது யூனுஸ்!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234