புதன், 18 மார்ச், 2009

இறப்புச்செய்தி

மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், முத்தைய முதலியார் தெரு உஸ்மான் (துபை) அவர்களின் தம்பியும், அன்வர், நூர்பாஷா, சாதிக், ஜான் ஆகியோரின் தகப்பனாருமான ஷேக் அப்துல் காதர் அவர்கள், திட்டச்சேரியில் இன்று இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். நாளை காலை திட்டச் சேரியில் அடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க பிரார்த்திப்போம்.

புதிய பொலிவுடன் பரங்கிபேட்டை தபால் நிலையம்

சில காலம் முன்பு வரை மக்களின் மிக அத்தியாவசிய இடமாக இருந்தது பரங்கிபேட்டை தபால் நிலையம். தொலை தொடர்பு ஏறுமாறாக முன்னேறி விட்ட இந்த காலத்தில் மெகா சைஸ் பார்சளுக்கும் மாணவர்களின் சிறு சேமிப்புக்கும் மட்டும் தான் இடமாகிபோனது போனது தபால் நிலையம்.


தற்போது சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ள நமதூர் தபால் நிலைய அலுவலகத்தை பார்த்தால் நாம் பரந்கிபெட்டயில்தான் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்ப்படும் எனும் அளவிற்கு ஆச்சர்யம். புத்தம் புதிய கணினிகள், லேசர் பிரிண்டர்கள், தகவல் அறிய சுமார் ஒன்னேகால் லட்சம் செலவில் தொடுதிரை வசதி கம்ப்யூட்டர், மணி டிரான்ஸ்பார், என்று சகல வசதிகளுடன் மிளிர்கிறது பரங்கிபேட்டை தபால் நிலையம்.
போஸ்ட் மாஸ்டர் அப்துல் ரஹீம் அவர்களுடன் பேசியதில் மிகுந்த பொருட்செலவில் நமது அரசு செய்து கொடுத்திருக்கும் இத்தகைய வசதி மேம்பாடுகளை பற்றி மேற்கண்ட விஷயங்களை விவரித்தார். பள பள டைல்ஸ் மீது நடந்து வருவது ஐ சி ஐ சி ஐ போன்ற துரைமார்கள் நிறுவனங்களில் தான் என்பதான மாயையை மாற்றி சாதரண அரசு அலுவலகங்களில் கூட அரசாங்கம் அளிக்கும் கார்ப்பரேட் வசதிகளை கண்டு சராசரி பொது ஜனம் கண்களில் ஆச்சர்ய மின்னல்கள்.