வெள்ளி, 26 நவம்பர், 2010

தொடர்கிறது பலத்த மழை

"பொய்த்து மெய்க்கும்
மெய்த்து பொய்க்கும்
பொய்யா மெய்யா மழை"

என்று தமிழ் கூறும் நல்லுலகின் கிராமங்களில் வழக்கில் இருக்கும் மழை குறித்தான சொலவடைகளில் இதுவும் ஒன்று. நேற்று நண்பகல் சுமார் 12 மணிக்கு தொடங்கிய மழை, தூறலாக தொடங்கி பலத்த மழையாக இப்போது வரை நீடித்து வருகிறது. மழையினையொட்டி மாவட்ட நிர்வாகம் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நகரினை வலம் வந்த நமது நிருபர், தனது கேமரா கண்ணால் "க்ளிக்" செய்த மழைக்கால படங்கள் நமது வாசக அன்பர்களின் பார்வைக்கு.











மின்சாரம் நிறுத்தம்

பி.முட்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை சனிக்கிழமை பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் தாலுக்காவில் உள்ள புவனகிரி, கிள்ளை, பிச்சாவரம், சாத்தபாடி, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கீரப்பாளையம் பு.முட்லூர், தீர்த்தாம் பாளையம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...