வியாழன், 20 ஜூன், 2013

சின்னத் தெரு மழைநீர் கால்வாய் பணி நிறைவு!



பரங்கிப்பேட்டை: சின்னத் தெரு மற்றும் அரைக்காசு பீவி தர்கா சந்திப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகளினால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கோரிக்கைகள்அதிகம் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஹசன் அலி

இடஒதுக்கீட்டை 7% உயர்த்தினால் அ.தி.மு.க.வுக்கே ஆதரவு - TNTJ அறிவிப்பு!




பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  ஏகத்துவ எழுச்சி  பொதுக்கூட்டம் காஜியார் தெருவில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் ரஜ்ஜாக் தலைமையில் நடைப்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்  கோவை ரஹ்மத்துல்லா சிறப்புரையாற்றினார்.   கடலூர் மாவட்ட அமீரக மண்டல பொறுப்பாளர் முஹம்மது இஸ்மாயில் நன்றியுரையாற்றினார்.  வழக்கத்தைவிட பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்  அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தினால் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரளிப்பது, பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் முஸ்லிம் பெண்களின் கடமைகளில் ஒன்றான தலையில் முக்காடு அணியும் உரிமையை  தமிழக அரசு உடனே அனுமதி அளிக்க வேண்டும், பேருந்து நிலையம்  மற்றும் வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள இடத்தில் டாஸ்மாக் கடையை உடனே அகற்றுவது, பல ஆண்டுகளாக நடந்துவரும் பெரிய மதகு பாலம் வசூலை பரங்கிப்பேட்டை பேரூராட்சி ரத்து செய்ய வேண்டும்  உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை பரங்கிப்பேட்டை கிளை பொறுப்பாளர் பாஷா வாசித்தார்.

படங்கள்: ஹசன் அலி