வியாழன், 9 ஜூன், 2011

சிறந்த பள்ளிகளில் பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகைக்கு அணுகலாம்

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்,தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வி. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும்.

தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வத்தக்கரை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் உறுதி

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட மீன் வளத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதியில் கடந்த மே 9-ம் தேதி ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தனியாருக்கு சொந்தமான 33 மீன் விற்பனை மையங்கள் சேதமடைந்து 1 கோடியே 79 லட்சத்து 5 ஆயிரத்து 690 ரூபாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.

இது குறித்த விரிவான செய்திகள் புகைப்படங்களுடன் நமது MYPNOவில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீன் வியாபாரிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அன்னங்கோயில் மீன் வியாபாரிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கி வேண்டியும்இ மீண்டும் அவர்களது வாழ்வாதார உரிமையை பெற்றுத்தருமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சரை கடந்த ஜூன் 6-ம் தேதி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கையை ஏற்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்குவதாக மீன்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் என சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழநி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வழக்கு: பரங்கிப்பேட்டையில் 37வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது

தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது 2001-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கின் விசாரணை 37-வது முறையாக திங்கள்கிழமை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி அவர் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடர அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் விசாரணைக்கு தடை கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. தடை உத்தரவினால் இதுவரை இவ்வழக்கு 36 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 6-ம் தேதி திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோமதி இவ்வழக்கை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...