புதன், 16 மார்ச், 2011
மூ.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது சிதம்பரம் தொகுதி: ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கடைசியில், மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் பலர் விருப்பமனு கொடுத்து அவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் இறுதியாக தற்போது மூ.மு.க.விற்கு ஒதுக்கப்ட்டுவிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்திட்டனர்.
லக்கி “சீட்” யாருக்கு?
தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்து விட்டது. இதில் சிதம்பரம் தொகுதி மேற்குறிப்பிடப்பட்டுள்ள எந்த கட்சிக்கும் ஒதுக்கபடாத நிலையில், சிதம்பரத்தில் தி.மு.க வே போட்டியிடுமா? அல்லது மூ.மூ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் அதிகரித்து உள்ளது. தி.மு.க சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட 31 பேர் விருப்ப மனு கொடுத்து, (வெயிட்டானவர்கள்) வைட்டிங்கில்" இருக்கும் நிலையில், இன்று அறிவிக்கப்பட இருக்கும் தி.மு.க வேட்பாளர் பட்டியலில் லக்கி “சீட்” யாருக்கு என்பது தெரிந்து விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...