பொதுவாக மழைக்காலத்தில் வெள்ளம் தாழ்வான குடிசை பகுதிகளை நோக்கி பாய்வதும், சூழ்ந்து நின்று அழிவை தருவதுமே நாம் இதுவரை பார்த்து வந்த மழை., ஆனால் இந்த முறை அங்கிங்கெணாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது., மழைச்சேத நிவாரணப்பணிகளில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகம் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மினி ஷாதி மஹாலில் சுமார் 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிக்காக ஜமாஅத் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.
ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் , பேரூராட்சி மன்ற துனைத் தலைவர் செழியன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் - கவுன்சிலர்கள் ஆகியோர் தில்லி சாஹிப் தர்கா மற்றும் ஏணைய பகுதிகளுக்கு வட்டாட்சியருடன் சென்று வெள்ளச் சேதப் பகுதிகளை பார்வையிட்டனர். பரங்கிப்பேட்டையின் மழைக்கால படங்கள் வாசக அன்பர்களின் பார்வைக்கு