பரங்pப்பேட்டை: ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டி மிகுந்த உற்சாகத்துடன் பரங்கிப்பேட்டை இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று இரவு முழுதும் விடாது மழை பெய்தாலும் மீராப்பள்ளியில் தொழுகை நடந்தபோது, மழைவிட்டிருந்தது. வழக்கம்போல பெண்களுக்கு 'ஷாதி மஹாலில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியாக 8 மணிக்கு மீராப்பள்ளி இமாமின் பயான் நடைப்பெற்றது. அதனையடுத்து 8.30 மணிக்கு அப்துஸ்ஸமது ரஷாதி பெருநாள் தொழுகை நடத்தினார். அதனையடுத்து கபீர்அஹமது மதனி அரபியில் குத்பா உரை நிகழ்த்தினார்.
பவர்பிளான்டில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களும் மீராப்பள்ளி தொழுகையில் கலந்துக்கொண்டதால் தொழுகை பற்றிய அறிவிப்கள் தமிழ் மொழியில்மட்டுமின்றி உருது மொழியிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.