பரங்கிப்பேட்டை: கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் மண்டையை பிளக்கும் இந்த நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் ஒரு பக்கம் கடையடைப்பு, போராட்டம் என்று நடந்து கொண்டிருக்க பரங்கிப்பேட்டையிலோ மே மாதம் முதல் தேதியிலிருந்து மின்வெட்டே இல்லாத நிலை; 24 மணி நேரமும் தொடர் மின் வினியோகம் இருப்பதை எந்த அதிசயத்தில் சேர்ப்பது என்ற தெரியவில்லை.
ஒருவேளை பரங்கிப்பேட்டை மின்சார வாரியத்தின் கடுமையான அலட்சியப்போக்கினால் அறிவிக்கப்பட்ட தினசரி மின்வெட்டை மறந்து போய்விட்டார்கள் போலும் என்று விசாரித்தால் விசயமே வேறு.
ஏற்கனவே அறிவிக்கப்ட்டது போன்று, மே மாதம் தினசரி மின் நிறுத்த நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மின்சாரம் இதே நேரத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்ற இதே நேரத்தில் தான் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்வதில் பிரச்சினைகள் இருப்பதினாலும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரத்தை மாற்ற முடியாத காரணத்தினாலும் இந்த மாதம் முழுவதும் பரங்கிப்பேட்டையில் தடையற்ற மின்சார வினியோகம் இருக்கும்.
ஆனாலும், திருவாளர் பொதுஜனமோ ஏதோ நேத்து வரைக்கும் மறந்துட்டாங்க, இன்னைக்கு எப்படியும் எடுத்துடுவாங்க என்கிற நம்பிக்கையில் தினம் தினம் ஏமாற்றம் கலந்த ஆனந்தத்தில் மின்சார வாரியத்தின் கோடைகால பரிசை பெற்றுக் கொள்ள தவறவில்லை.