பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012 13 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் S.நூர் முஹம்மது பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் தொடங்கியது மீராப்பள்ளி இமாம் மவ்லவி அஹமது கபீர் காஷிபி அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
மர்ஹபா கல்வி அறக்கட்டளை நிர்வாகி Z.பஜ்லுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மவ்லவி M.H.கபீர் அஹமது மதனி பேசுகையில் ஒற்றுமையை வலிறுத்தினார்.
பின்னர் டாக்டர் S.நூர் முஹம்மது-விற்கு வழக்கறிஞர் M.E.செய்யது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து வழக்கறிஞர் அன்சாரி பேசுகையில், ஜாதி - மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஜமாஅத் பாடுபட்டு வருகின்றது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பில் வேலை வாய்ப்பிலும், ஒப்பந்த பணிகளிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட தலைவர் பாடுபட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் உரிமை பெறாமல் பல இடங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவ்விஷயத்திலும் தலைவர் கவனம் செலுத்த வேண்டும். ஜமாஅத் சொத்து என்பது பொதுச் சொத்து ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
பின்னர் சிதம்பரம் பள்ளிவாசல் நிர்வாகி இப்ராம்சா (எ) மூசா, கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
வாழ்த்துரை வழங்கிய சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன், "பல்வேறு திருமண நிகழ்ச்சிகளின் காரணமாக தாமதமாக வர நேரிட்டமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பதவி என்பது சுமை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகிறது. உணவில் எப்படி பல வகைகள் இருந்தால் தான் சுவையாக இருக்குமோ, அதுப்போலவே வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பு. மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கலவரம் உண்டு பண்ணி ஏராளமான சிறுபான்மையினர் உயிரிழக்க காரணமாக இருக்கின்றனர். எல்லா மதங்களும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அன்பை வளர்க்க வேண்டும்.

பரங்கிப்பேட்டையில் நாலு வீதிகளில் மாடி வீடுகள் இருக்கிறது. இப்பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட போது தான் தெரிந்தது. இருப்பதற்கு கூட இடமில்லாத ஏழை மக்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மேட்டு குடி அல்ல அது தவறான பார்வை, மிகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தினக்கூலிகளாக பீடி சுற்றும் தொழிலாளிகளாக இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் பற்றி தவறான எண்ணம் இருக்கிறது. நீதிபதி சச்சார் கமிட்டி மட்டுமே இஸ்லாமியர்களின் உண்மை நிலையினை சொல்கிறது.

இப்பகுதி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜமாஅத் சார்பில் கம்ப்யூட்டர் மையம் தொடங்க வேண்டும். அரசின் சார்பில் தொடங்கிட முந்தைய ஆட்சியரிடம் கேட்டு கொண்டிருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப டாக்டர் நூர் முஹம்மதிற்கு இந்த பொறுப்பு வந்துள்ளது என்றார்.

ஏற்புரை வழங்கிய டாக்டர் நூர் முஹம்மது, இன்று கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத்திற்கு நிதியுதவி வழங்கினார். நம்மில் நிறைய பேர் வசதியாக இருக்கிறார்கள், அவர்களும் ஜமாஅத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் பொதுக்குழுவில் எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறேன் என்றார். நம் சுயமரியாதைகளை நாம் இழக்காமல் இருக்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுடன் சுமுகமாக பழகி நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜமாஅத்தில் ஒற்றுமைக்கு மட்டுமே முன்னுரிமை. பைத்துல்மால் ஏழை மக்களின் நிதி, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது தான் குறிக்கோள்.

கல்விக்குழு ஒன்று அமைக்கப்படும் ஏழை மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்யப்படும். இளைஞர்கள் இந்த நாட்டின் தூண்கள், அவர் வேறு பாதையில் சென்று விடாமல் இருக்க இளைஞர் குழு அமைக்கப்படும். அரசின் திட்டங்கள் நிறைய இருக்கிறது, அதை மக்களுக்கு பெற்று தர வழிவகை செய்யப்படும். ஷரீஅத் குழு ஒன்று அமைக்கப்படும் அது நூற்றுக்கு நூறு ஷரீஅத் சட்டப்படி செயல்படும். எவ்வித பரிந்துரைக்களுக்கும் அங்கு இடமில்லை என்று கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.

பின்னர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்தார். ஜமாஅத் / பைத்துல்மால் நிர்வாகிகள் எழுந்து நின்று கூடியிருந்தோர்களுக்கு ஸலாம் சொல்லி அமர்ந்தனர்.

இறுதியில் ஜமாஅத் துணைத்தலைவர் O.A.W.பாவாஜான் நன்றியுரையாற்றினார்.

விழாத்துளிகள் விரைவில் பதிவிடப்படும்

களத்தொகுப்பு: MGF / ஹம்துன் அப்பாஸ்


மேலும் வாசிக்க>>>> "பதவியேற்றார் டாக்டர் நூர் முஹம்மது: updated..."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234