வியாழன், 12 மே, 2011

100%ம் உண்டு 0%ம் உண்டு


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து மாநிலம் முழுவதுமான தேர்ச்சி சதவிகிதத்தை அனைவரும் அறிந்திருப்போம். பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் பற்றிய ஓர் அலசல்.



பரங்கிப்பேட்டையின் பழமையான பள்ளியான சேவாமந்திர்(பெண்கள்) மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று முதலிடம் பெறுகிறது. இருபாலரும் பயிலும் மற்றொரு சேவாமந்திர் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 88% தேர்ச்சி பெற்று கலிமா மெட்ரிகுலேசன் பள்ளி மூன்றாவது இடத்தையும், 79% தேர்ச்சி பெற்று அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.(கடந்த ஆண்டு 96%)

48 சதவிகிதம் தேர்ச்சி பெற்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. வழமைப் போல கடைசி இடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குதான் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் முதற் தடவையாக +2 தேர்வுக்கு மாணவ/மாணவிகளை பயிற்றுவித்த ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற அனைவருமே "ஃபெயில்" ஆகியதால் 0% ரிசல்ட் வாங்கி ஆஸ்திரேலியா மெட்ரிகுலேசன் பள்ளி கடைசி இடத்தை எடுத்துக் கொண்டது. இந்தப் பள்ளியில் பயின்ற அனைவருமே கணித பாடத்தில் தேர்ச்சி பெறாமல் தவறியுள்ளனர். அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீழ் நிலை வகுப்புகளுக்கு மட்டுமின்றி, மேல்நிலை வகுப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாத அவல நிலை இருக்கிறது. இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் இன்னும் மோசமான தேர்ச்சி சதவிகிதமே ஆண்கள் மேல்நிலைப் பள்ளிலிருந்து வரும் என்பதாகவே கருத முடிகிறது.

சொல்லாமலே...!


கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் மண்டையை பிளக்கும் இந்த நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரித்துள்ளது ஆனால் பரங்கிப்பேட்டையிலோ மே மாதம் முதல் தேதியிலிருந்து மின்வெட்டே இல்லாமல் 24 மணி நேரமும் தொடர் மின்சாரம் பெற்றதால் மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள், ஆனால் திடீரென்று நேற்று பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை என்று மீண்டும் மின்சார நிறுத்தம் தொடங்கி இருக்கிறது. இன்றும் அதே நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இனி வரும் நாட்களில் மின் வெட்டு 3 மணி நேரமாக அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது. வழக்கமாக மின்வெட்டு குறித்து முறையான அறிவிப்பினை நாளிதழ் வாயிலாக அவ்வப்போது வெளியிடும் மின்சார வாரியம், இம்முறை அது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடாததால், யூகங்களின் அடிப்படையில் அவரவர்களும் 2 மணி நேரம் மின்வெட்டு, 3 மணி நேரம் மின்வெட்டு என்று வெளியிடும் பரவலான கருத்துக்களால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...