பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 31 மார்ச், 2009 4 கருத்துரைகள்!

ஓட்டுப் போட விருப்பமில்லாத வாக்காளர்கள், தங்களது ஓட்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க படிவம் 49(o) பயன்படுத்தலாம்.

லோக்சபா தேர்தலில் தகுதியுடைய அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் முக்கியமானது 49(o) படிவம்.

தங்களது தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியோ அல்லது நம்பிக்கையோ இல்லையெனில், ஓட்டுச் சாவடிக்குச் சென்று தங்களது ஓட்டுகளை மற்றவர்கள் போடாதவண்ணம் மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டுச் சாவடி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

இந்த படிவத்தை எப்படி, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சதவிகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது.

ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49(ஓ). வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

ஆனால் 49ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட, 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும் போது தவறாமல் 49ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

இயக்கம் தொடக்கம்:

'ஓ போடு பிரசார இயக்கம் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்கு சென்னை வடபழநி நூறடி சாலையில் தொடங்கியது.

'ஓ போடு. ஒட்டு போடு. எந்த வாக்காளரயும் பிடிக்காட்டி 49ஓ போடு. ஓட்டு போட தவறாதே' என்ற வாசகங்கள் அச்சிட்ட பனியன்களை அணிந்து கொண்டு, 49ஓவை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் வண்டிகளில் கொடுத்தபோது பல பொதுமக்கள், தங்கள் ஊரில் இன்னும் கொஞ்சம் பேரிடம் தரவேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.

ஓட்டு இயந்திரத்தில் 49ஓவை சேர்க்கச் சொல்லி வழக்குசென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞரும் 'தீம்தரிகிட' இதழின் சந்தாதாரருமான சத்தியசந்திரன், சென்னை உயர் நீதி மன்றத்தில் 49 ஓவை ஓட்டு இயந்திரத்திலேயே சேர்க்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடுத்த வழக்கு ஏப்ரல் 7 அன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 திங்கட்கிழமைக்குள் பதில் தரும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தேர்தலுக்கு மெஷினில் 49ஓவை சேர்க்க முடியுமா? நீதிமன்றம் உத்தரவிட்டால், தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் முடியும்.

இன்னமும் வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடங்கவில்லை. வேட்பு மனு பரிசீலனைகள் முடிந்தபிறகுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகிறது. அதன் பின்னர்தான் வேட்பாளர்கள் பெயர்களையும் சின்னத்தையும், ஒவ்வொரு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் ஏற்றுகிறார்கள். அப்போது கூடவே பட்டியலின் கடைசிப் பெயராக 49ஓவையும் ஏற்ற முடியும். இதற்கு தனி கணிணி செயல் ஆணை எதுவும் தயாரிக்கத் தேவையில்லை.

எங்கள் ஊருக்கு ஓ போடு பிரசாரம் வருமா?

49-ஓ போடு பிரசாரத்தை எங்கள் ஊரில் ஓ போடு இயக்கம் ஏற்பாடு செய்து நடத்துமா என்று பலர் கேட்டுள்ளனர். ஓ போடு இயக்கம் எல்லா ஊர்களிலும் கிளைகளும் அமைப்புகளும் உள்ள அரசியல் கட்சி போன்ற அமைப்பு அல்ல. தவிர இந்த பிரசாரத்தை வேறு யாரோ எங்கிருந்தும் வந்து நடத்தித் தரவேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் தங்களுக்கு இருக்கும் வசதியைக் கொண்டு தாங்களே செய்யலாம்.

ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க அதிகபட்ச செலவு 200 ரூபாய்தான். ஈ மெயில், எஸ்.எம்.எஸ் போன்றவற்றின் மூலமும் பரப்பலாம். பேருந்து, ரயில் பயணம், அலுவலகம், கடைத் தெரு, கல்யாண வீடு என்று எங்கெல்லாம் சக மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் 49ஓ பற்றி கருத்து பரிமாறலாம்.

இதையெல்லாம் செய்த பின்னர் முக்கியமாக, மே 8 அன்று தவறாமல் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டு போட வேண்டும். மேற்கண்ட எதையும் செய்ய அதிக செலவோ, கடும் உழைப்போ, அதிக நேரமோ ஆகப்போவதில்லை. ஓ போடுங்க.

நன்றி: http://keetru.com/ohpodu/index.php

மேலும் வாசிக்க>>>> "ஓட்டு போட விருப்பமில்லையா...?படிவம் 49(o)வை பயன்படுத்தலாம்"

0 கருத்துரைகள்!

கருத்துக்கணிப்பு நடத்த தடையில்லை:
 • தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு, வாக்குச்சாவடி கருத்துக்கணிப்புகளை நடத்த 'டிவி', பத்திரிகைகள் மற்றும் இதர மீடியாவுக்கு தடையில்லை.
 • இது போன்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை முதல் கட்ட தேர்தல் முடிவடையும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து, இறுதி கட்ட தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது.

மக்களவை தேர்தல் கட்சிகளுக்கு நடத்தை விதிமுறைகள்:

 • சாதி, மத வேறுபாடுகளை உருவாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
 • தனிநபர் குறித்து குறை கூறுவதை தவிர்த்தல் வேண்டும்.
 • வழிபாட்டுக்குரிய பிற இடங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரி வளாகங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.
 • வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீ. தொலைவுக்குள் ஆதரவு கோருதல், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருதல், சின்னங்களை குறிக்கும் பொருட்கள், துண்டுசீட்டு வழங்குதல் போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • சுவர்களில் தேர்தல் விளம்பரம் கூடாது.
 • தேர்தல் பிரசாரத்துக்கு ஒலிபெருக்கி மற்றும் பிற வசதிகளை பயன்படுத்த உரிய அதிகாரிக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
 • வேட்பாளர்களின் ஒப்புதல் பெற்ற தொண்டர்களுக்கு தகுந்த வில்லைகளை அல்லது அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.
 • வாக்காளர்களுக்கு அவர்கள் வழங்கிய அடையாள அட்டைகள் வெற்றுத்தாள்களில் இருக்க வேண்டும். பெயரோ, சின்னமோ இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
 • வாக்காளர்கள் நீங்கலாக தேர்தல் ஆணையம் செயல் திறனுள்ள நுழைவுச்சீட்டு இல்லாமல் எவரும் வாக்குச்சாவடிகளில் நுழையக்கூடாது.
 • புகார் அல்லது பிரச்னை எதுவும் இருந்தால் சட்டமன்ற பேரவை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பார்வையாளர்களிடம் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் தெரிவிக்கலாம்.
 • அமைச்சர்கள் அலுவல் முறை பயணம் செய்கையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது.
 • தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள், பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது.
 • மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்துக்குள் நுழையக்கூடாது. தேர்தல் ஏஜெண்டு என்கிற முறையில்தான் நுழையலாம்.
 • மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தனது தேர்தல் பிரசாரத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது.
 • அரசாங்க விமானம், வாகனங்கள் உட்பட அரசு போக்குவரத்தை அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் ஆளும்கட்சியின் நலனுக்காக பயன்படுத்தக்கூடாது.
 • மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக தனி உரிமையுடள் ஆளும்கட்சியே பயன்படுத்தக்கூடாது.
 • அமைச்சர்கள், பிற அதிகாரிகள் அவர்களுடைய விருப்ப நிதியில் இருந்து மானியமோ, தொகைகளோ வழங்கக்கூடாது.
 • அரசு பொதுகட்டிடங்கள், சாலை குறியீட்டு பலகைகள், வழிகாட்டி பலகைகள், நெடுஞ்சாலை மேம்பாலங்கள் உட்பட அரசு சொத்தில் தோற்றத்தை குலைத்தால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளரிடமிருந்து வசூலிப்பதுடன் அதனை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

என்பது உட்பட மேலும் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "அரசியல் பிரமுகர்கள் - வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்"

திங்கள், 30 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

போட்டித் தேர்வுகளும் முஸ்லிம் மாணவர்களும்...


நன்றி: சமரசம் மாதமிருமுறை இதழ் http://www.samarasam.net/01-15_Mar_09/index.htm

மேலும் வாசிக்க>>>> "போட்டித் தேர்வுகளும் முஸ்லிம் மாணவர்களும்"

0 கருத்துரைகள்!
தில்லையம்பதி என்று புகழப்படும் சிதம்பரம் தொகுதி, கல்விக்கும் பேர் பெற்றதாக விளங்குகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் இங்குள்ளது.

இத்தொகுதியின் வாக்காளர்கள் விவரம் :

மொத்த வாக்காளர்கள் - 11,19,182
ஆண் வாக்காளர்கள் - 5,62,018
பெண் வாக்காளர்கள் - 5,57,164

சிதம்பரம் தொகுதியில் தற்போது அடங்கியிருக்கும் சட்டப்பேரவை தொகுதிகள்

1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயம்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோயில்

இத்தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், மங்களூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட குன்னம் தொகுதியும், அரியலூர், ஜெயம்கொண்டம் ஆகிய தொகுதிகளும் சிதம்பரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2004ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்காளர்கள் - 11,25,487

 • பதிவானவை - 7,43,410
 • பாமக - 3,43,424
 • விசி - 2,55,773

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

 • அரியலூர் - காங்கிரஸ் - 60,089 - அதிமுக - 55,895
 • ஜெயம்கொண்டம் - அதிமுக - 62,001 - பாமக - 59,944
 • புவனகிரி - அதிமுக - 65,505 - பாமக - 50,682
 • சிதம்பரம் - அதிமுக - 56,327 - சிபிஎம் - 39,517
 • காட்டுமன்னார்கோயில் - விசி - 57,244 - காங்கிரஸ் - 43,830

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் இருந்துவந்தது. ஆனால், தற்போது தொடர்ச்சியாக கடந்த மூன்று தேர்தல்களில் பாமக வெற்றி பெற்று வருகிறது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இத்தொகுதியில், வன்னியர்களும் கணிசமாக இருக்கின்றனர். தற்போது விடுதலை சிறுத்தைகள் இத்தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க>>>> "சிதம்பரம் தொகுதி"

0 கருத்துரைகள்!

மறுவரையறைப்படி தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளும் அவற்றுள் அடங்கியுள்ள பேரவைத் தொகுதிகளும்:-

1. திருவள்ளூர் (தனி) - 1. கும்மிடிப்பூண்டி, 2. பொன்னேரி (தனி), 3. திருவள்ளூர், 4. பூந்தமல்லி (தனி), 5. ஆவடி, 6. மாதவரம்.

2. வடசென்னை - 1. திருவொற்றியூர், 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 3. பெரம்பூர், 4. கொளத்தூர், 5. திரு.வி.க. நகர் (தனி), 6. ராயபுரம்.

3. தென் சென்னை - 1. விருகம்பாக்கம், 2. சைதாப்பேட்டை, 3. தியாகராய நகர், 4. மயிலாப்பூர், 5. வேளச்சேரி, 6. சோளிங்கநல்லூர்.

4. மத்திய சென்னை - 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.

5. ஸ்ரீபெரும்புதூர் - 1. மதுரவாயல், 2. அம்பத்தூர், 3. ஆலந்தூர், 4. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 5. பல்லாவரம், 6. தாம்பரம்.

6. காஞ்சிபுரம் (தனி) - 1. செங்கல்பட்டு, 2. திருப்போரூர், 3. செய்யூர் (தனி), 4. மதுராந்தகம் (தனி), 5. உத்திரமேரூர், 6. காஞ்சிபுரம்.

7. அரக்கோணம் - 1. திருத்தணி, 2. அரக்கோணம் (தனி), 3. சோளிங்கர், 4. காட்பாடி, 5. ராணிப்பேட்டை, 6. ஆர்க்காடு

8. வேலூர் - 1. வேலூர், 2. அணைக்கட்டு, 3. கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 4. குடியாத்தம் (தனி), 5. வாணியம்பாடி, 6. ஆம்பூர்.

9. கிருஷ்ணகிரி - 1. ஊத்தங்கரை (தனி), 2. பர்கூர், 3. கிருஷ்ணகிரி, 4. வெப்பனஹள்ளி, 5. ஓசூர், 6. தளி.

10. தர்மபுரி - 1. பாலக்கோடு, 2. பெண்ணாகரம், 3. தர்மபுரி, 4. பாப்பிரெட்டிபட்டி, 5. அரூர் (தனி), 6. மேட்டூர்.

11. திருவண்ணாமலை - 1. ஜோலார்பேட்டை, 2. திருப்பத்தூர், 3. செங்கம் (தனி), 4. திருவண்ணாமலை, 5. கீழ் பெண்ணாத்தூர், 6. கலசப்பாக்கம்.

12. ஆரணி - 1. போளூர், 2. ஆரணி, 3. செய்யாறு, 4. வந்தவாசி (தனி), 5. செஞ்சி, 6. மயிலம்.

13. விழுப்புரம் (தனி) - 1. திண்டிவனம் (தனி), 2. வானூர் (தனி), 3. விழுப்புரம், 4. விக்கிரவாண்டி, 5. திருக்கோயிலூர், 6. உளுந்தூர்பேட்டை.

14. கள்ளக்குறிச்சி - 1. ரிஷிவந்தியம், 2. சங்கராபுரம், 3. கள்ளக்குறிச்சி (தனி), 4. கங்கவல்லி (தனி), 5. ஆத்தூர் (தனி), 6. ஏற்காடு (தனி-ப.கு).

15. சேலம் - 1. ஓமலூர், 2. எடப்பாடி, 3. சேலம் மேற்கு, 4. சேலம் வடக்கு, 5. சேலம் தெற்கு, 6. வீரபாண்டி.

16. நாமக்கல் - 1. சங்ககிரி, 2. ராசிபுரம் (தனி), 3. சேந்தமங்கலம் (தனி-ப.கு), 4. நாமக்கல், 5. பரமத்தி வேலூர், 6. திருச்செங்கோடு.

17. ஈரோடு - 1. குமாரபாளையம், 2. ஈரோடு கிழக்கு, 3. ஈரோடு மேற்கு, 4. மொடக்குறிச்சி, 5. தாராபுரம் (தனி), 6. காங்கேயம்.

18. திருப்பூர் - 1. பெருந்துறை, 2. பவானி, 3. அந்தியூர், 4. கோபிச்செட்டிபாளையம், 5. திருப்பூர் வடக்கு, 6. திருப்பூர் தெற்கு.

19. நீலகிரி (தனி) - 1. பவானி சாகர், 2. உதகமண்டலம், 3. கூடலூர் (தனி), 4. குன்னூர், 5. மேட்டுப்பாளையம், 6. அவினாசி (தனி).

20. கோயம்புத்தூர் - 1. பல்லடம், 2. சூலூர், 3. கவுண்டம்பாளையம், 4. கோயம்புத்தூர் வடக்கு, 5. கோயம்புத்தூர் தெற்கு, 6. சிங்காநல்லூர்.

21. பொள்ளாச்சி - 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.

22. திண்டுக்கல் - 1. பழனி, 2. ஒட்டன்சத்திரம், 3. ஆத்தூர், 4. நிலக்கோட்டை (தனி), 5. நத்தம், 6. திண்டுக்கல்.

23. கரூர் - 1. வேடசந்தூர், 2. அரவக்குறிச்சி, 3. கரூர், 4. கிருஷ்ணராயபுரம் (தனி), 5. மணப்பாறை, 6. விராலிமலை.

24. திருச்சிராப்பள்ளி - 1. ஸ்ரீரங்கம், 2. திருச்சிராப்பள்ளி மேற்கு, 3. திருச்சிராப்பள்ளி கிழக்கு, 4. திருவெறும்பூர், 5. கந்தர்வக்கோட்டை (தனி), 6. புதுக்கோட்டை.

25. பெரம்பலூர் - 1. குளித்தலை, 2. லால்குடி, 3. மண்ணச்சநல்லூர், 4. முசிறி, 5. துறையூர் (தனி), 6. பெரம்பலூர் (தனி).

26. கடலூர் - 1. திட்டக்குடி (தனி), 2. விருத்தாச்சலம், 3. நெய்வேலி, 4. பண்ருட்டி, 5. கடலூர், 6. குறிஞ்சிப்பாடி.

27. சிதம்பரம் (தனி) - 1. குன்னம், 2. அரியலூர், 3. ஜெயங்கொண்டம், 4. புவனகிரி, 5. சிதம்பரம், 6. காட்டுமன்னார்கோயில் (தனி).

28. மயிலாடுதுறை - 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.

29. நாகப்பட்டினம் (தனி) - 1. நாகப்பட்டினம், 2. கீழ்வேளூர் (தனி), 3. வேதாரண்யம், 4. திருத்துறைப்பூண்டி (தனி), 5. திருவாரூர், 6. நன்னிலம்.

30. தஞ்சாவூர் - 1. மன்னார்குடி, 2. திருவையாறு, 3. தஞ்சாவூர், 4. ஒரத்தநாடு, 5. பட்டுக்கோட்டை, 6. பேராவூரணி.

31. சிவகங்கை - 1. திருமயம், 2. ஆலங்குடி, 3. காரைக்குடி, 4. திருப்பத்தூர், 5. சிவகங்கை, 6. மானாமதுரை (தனி).

32. மதுரை - 1. மேலூர், 2. மதுரை கிழக்கு, 3. மதுரை வடக்கு, 4. மதுரை தெற்கு, 5. மதுரை மத்தி, 6. மதுரை மேற்கு.

33. தேனி - 1. சோழவந்தான் (தனி), 2. உசிலம்பட்டி, 3. ஆண்டிப்பட்டி, 4. பெரியகுளம் (தனி), 5. போடி நாயக்கனூர், 6. கம்பம்.

34. விருதுநகர் - 1. திருப்பரங்குன்றம், 2. திருமங்கலம், 3. சாத்தூர், 4. சிவகாசி, 5. விருதுநகர், 6. அருப்புக்கோட்டை.

35. ராமநாதபுரம் - 1. அறந்தாங்கி, 2. திருச்சுழி, 3. பரமக்குடி (தனி), 4. திருவாடானை, 5. ராமாநாதபுரம், 6. முதுகுளத்தூர்.

36. தூத்துக்குடி - 1. விளாத்திகுளம், 2. தூத்துக்குடி, 3. திருச்செந்தூர், 4. ஸ்ரீவைகுண்டம், 5. ஒட்டப்பிடாரம் (தனி), 6. கோவில்பட்டி.

37. தென்காசி (தனி) - 1. ராஜபாளையம், 2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 3. சங்கரன்கோவில் (தனி), 4. வாசுதேவநல்லூர் (தனி), 5. கடையநல்லூர், 6. தென்காசி.

38. திருநெல்வேலி - 1. ஆலங்குளம், 2. திருநெல்வேலி 3. அம்பாசமுத்திரம், 4. பாளையங்கோட்டை, 5. நாங்குனேரி, 6. ராதாபுரம்.

39. கன்னியாகுமரி - 1. கன்னியாகுமரி, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. பத்மநாபபுரம், 5. விளவங்கோடு, 6. கிள்ளியூர்.

மேலும் வாசிக்க>>>> "தமிழக நாடாளுமன்றத் தொகுதிகள்"

ஞாயிறு, 29 மார்ச், 2009 1 கருத்துரைகள்!

 • சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி சி.பி.டி. தேர்வு - மார்ச் 28, 29 மற்றும் ஜூன் 28

 • ஆல் இந்தியா பிரீ மெடிக்கல் தேர்வு - ஏப்ரல் 5

 • வி.ஐ.டி.,யின் வி.ஐ.டி.இ.இ.இ., 2009 தேர்வு - ஏப்ரல் 18

 • அம்ருதா கல்வி நிறுவனங்களில் பி.டெக்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 19

 • காருண்யா பல்கலைக்கழக இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 25

 • ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு - ஏப்ரல் 26

 • சிம்பயாசிஸ் சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு - மே 2

 • ஏ.ஐ.எம்.ஏ., நடத்தும் அடுத்த மேட் தேர்வு - மே 3

 • ஏ.எப்.எம்.சி., என்னும் ராணுவ மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு - மே 3

 • எஸ்.ஆர்.எம்., நிறுவனங்களின் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு - மே 3

 • ஐ.சி.எப்.ஏ.ஐ., எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 3

 • பிட்ஸ் பிலானியின் பிட்சாட் 2009 தேர்வு - மே 9

 • என்.சி.எச்.எம்.சி.டி., நடத்தவுள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு - மே 9

 • கிளாட் என்னும் அகில இந்திய சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு - மே 17

 • அமிர்தா நிறுவனங்களின் எம்.பி.பி.எஸ்., படிப்பு நுழைவுத் தேர்வு - மே 17

 • தேசிய தொழில்நுட்ப நிறுவன (என்.ஐ.டி.,) எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 17

 • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 16

 • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - மே 18

 • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஒருங்கிணைந்த பயோடெக் நுழைவுத் தேர்வு - மே 18

 • புவனேஸ்வரிலுள்ள கிட் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு - மே 18

 • ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு - ஜூன் 7

 • மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் ‘சிப்பெட்‘ தேர்வு - ஜூன் 14

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1318

மேலும் வாசிக்க>>>> "வரவிருக்கும் முக்கிய தேர்வுகள்"

2 கருத்துரைகள்!

லட்சியத்தை முடிவு செய்து விட்டு, கல்வியை தேர்வு செய்து தொடருங்கள், என சென்னை பல்கலை பேராசிரியர் டாக்டர் காஜா ஷெரீப் பேசினார்.

கோவையில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம் பல்கலையும் இணைந்து நடத்திய ‘வழிகாட்டி’ கல்வி, வேலைவாய்ப்பு கண்காட்சி மார்ச் 27ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இறுதிநாள் நிகழ்ச்சியில் சென்னை பல்கலை மேலாண்மை துறை பேராசிரியர் டாக்டர் காஜா ஷெரீப் பேசியதாவது:

பலர் பட்டப்படிப்பிற்கு பின், லட்சியத்தை முடிவு செய்கின்றனர். ஆனால், பட்டப்படிப்புக்கு முன் லட்சியத்தை தேர்வு செய்து, படிப்பை அதற்கு ஏற்றவாறு படிக்க வேண்டும்.

படிக்கும்போதே பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமைப்பண்பு, நுண்ணறிவுத்திறன், அலசி ஆராயும் திறனை பெறுவது மிக அவசியம்.

தொடர்பு இல்லாத பாடங்களை ஒருங்கிணைத்து நிர்வாகிக்கும் பண்பை வளர்க்கும் திறனை மேலாண்மை படிப்புகள் ஏற்படுத்துகின்றன.

பி.பி.ஏ., படித்து விட்டுத் தான் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பி.பி.ஏ., முடித்த பிறகு, எம்.பி.ஏ., படிக்காமல் இருப்பது வீண். எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற இளநிலை பட்டப்படிப்பு படித்தாலும், எம்.பி.ஏ., படிக்க முடியும். பார்மசி முடித்தவர்களும் கூட, எம்.பி.ஏ., படிக்கலாம்.

எம்.பி.ஏ., பட்டத்தை தேர்வு செய்யும் முன், அதில் உள்ள பல்வேறு பிரிவுகளை அறிந்து, அவசியமானதை தேர்வு செய்ய வேண்டும். எம்.பி.ஏ., சிஸ்டம்ஸ், டூரிஸம், ரீடைல், பைனான்ஸ், சப்ளை செயின், மார்க்கெட்டிங், ஹாஸ்பிடல் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதை சரியான முறையில் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

மேலாண்மை துறை, தனியார் நிறுவனங்களில் படிப்பதற்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்களில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு. நுழைவுத் தேர்விலும் தரம் உண்டு. எனவே, தரமான கல்லூரியையோ, நிறுவனத்தையோ கவனித்து தேர்வு செய்ய வேண்டும்.

தொலைநிலைக் கல்வியில் படிக்கும் எம்.பி.ஏ.,பட்டங்கள், அங்கீகாரம் பெற்ற பட்டங்களாக இருக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் பல நுழைவுத் தேர்வு எழுதி, பட்டங்களை வழங்குகின்றன. இதில், கவனமுடன் படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு சென்னை பல்கலை பேராசிரியர் காஜா ஷெரீப் பேசினார்.

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=3011
மேலும் வாசிக்க>>>> "லட்சியத்தை முடிவு செய்து கல்வியை தொடருங்கள்"

வெள்ளி, 27 மார்ச், 2009 1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை அருகே கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய மூன்று டன் எடையுள்ள "கோமரா சுறா' மீனை கயிறு கட்டி 4 மணிநேரம் போராடி கரைக்கு இழுத்து வந்தனர். கடலூர் துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை சூறை மீனுக்காக பரங்கிப்பேட்டை அருகே கடலில் சுறுக்கு வலை விரித்தனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் எதிர்பாராத வகையில் பெரிய சுறா மீன் சிக்கியது. "லாஞ்ச்' மூலம் 4 மணி நேரம் போராடி கரைக்கு இழுத்து வந்தனர். கரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிரோடு இருந்தது. மூன்று டன் எடை கொண்ட சுறா மீன் சிக்கியதை அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.

இதுகுறித்து, மீனவர் ஏழுமலை கூறுகையில், "இன்று காலை 60 பேர் சூறை மீன் பிடிக்க சென்றோம். பரங்கிப்பேட்டை லைட் அவுஸ் வடக்கு புறம் சுறுக்கு வலை விரித்தோம். அப்போது, 17 அடி நீளமும் 6 அடி அகலமும் மூன்று டன் எடையும் கொண்ட "கோமரா சுறா' வகை மீன் சிக்கியது. மிகவும் போராடி கயிறு கட்டி 4 மணி நேரமாக கடலில் இழுத்து வந்தோம். இதனால், வலை சிறிது சேதமானது. சாதா வலையை அறுத்து தப்பிச் சென்று விடும். சுறுக்கு வலை என்பதால் தப்பிக்க முடியாமல் சிக்கியது. இந்த வகை மீன் கருவாடு அல்லது கோழித் தீவனத்திற்கு தான் பயன்படும். இதை 6,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்' என்றார்.
Source: Dinamalar
மேலும் வாசிக்க>>>> "மீனவர் வலையில் சிக்கிய 3 டன் எடை 'கோமரா சுறா'"

வியாழன், 26 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

ஆசைப்பட்டால்... விண்மீனும் விரல்நுனிக்கு வரும்!
- டாக்டர் அப்துல் கலாம்
உங்களுடைய நடத்தை நீங்கள் நடந்து கொள்கிற பாங்கு மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் டாக்டர் அப்துல் கலாம், இளைஞர்களுக்காக கவிதைகளுடன் எழுதிய கட்டுரை...

நெஞ்சில் உறுதியும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற லட்சியமும் இருந்தால், நீங்கள் எல்லோரும் கட்டாயம் வெற்றி அடைவீர்கள். நான் இயற்றிய கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 • நாங்கள் எல்லோரும் இறைவனின் படைப்பாவோம்!

 • எங்கள் உள்ளம் வைரத்தைக் காட்டிலும் உறுதி வாய்ந்தது!

 • நாங்கள் வெற்றியடைவோம்! வெற்றியடைவோம்!!வெற்றியடைவோம்!!!

 • எங்கள் மனதிடத்தால் இறைவன் அருள் இருக்கும் போது எங்களுக்கு என்ன பயம்?

வருங்காலத்தைப் பற்றிய பயமே இல்லாமல் இன்றைய இளைஞர்கள் வாழ வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

நான் உங்களைப் போல் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றியுள்ளன. நான் என் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் இருக்கும்போது, மேல்நிலைப் பள்ளியில் படிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளி சென்ற போது, அங்கு நான் கண்டதென்ன? அங்கு மாணவர்கள் அருமையான உடைகள் அணிந்து, திறமையான ஆங்கிலத்தில் பேசினார்கள். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

நான் 9ம் வகுப்பு சேர்ந்தவுடன் நல்ல மதிப்பெண் கிடைக்குமா இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன.

நான் 10ம் வகுப்புக்கு சென்றவுடன் இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்துவிட்டன. அதற்கு காரணம் ஆசிரியர்தான். எனக்கு லட்சியத்தை கற்பிக்கும் ஆசிரியர் கிடைத்தார்.

இளைஞர்களாகிய நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கல்வியினால் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாவும் திகழ வேண்டும்.

இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும். வளர்ந்த நாடாக வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால் பொருளாதாரம் வளமிக்க நாடாகவும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நம் நாட்டின் தற்போதுள்ள லட்சியம்.
வேலை இல்லை என்ற நிலைமை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை.

இளைய சமுதாயம்தான் ஓர் அரும் பெரும் செல்வமாகும். நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை செய்யும் போது, நாம் லட்சிய நோக்கத்தில்தான் செய்ய வேண்டும்.

இதைப்பற்றி பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்...
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - மற்றினும்
தள்ளுவை தள்ளாமை நன்று


பெரிய லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

இந்தியாவை வளர்ந்த நாடாக நாம் எப்படி உருவாக்க முடியும்?

இந்த எண்ணங்களை கவிதையில் இயற்றி இருக்கிறேன். இந்தியாவை வளமான நாடாக ஆக்க வேண்டுமென்றால், நாம் எல்லோரும் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை ஒரு முக்கியமான நாளாகும். அன்று செய்த ஒவ்வொரு காரியமும் வெற்றி அறுவடை செய்ய வேண்டும். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணிநேரம் தேவை. இதனால் இரவும் பகலும் உருவாகின்றன. ஒரு நாளில் 24 மணிநேரத்தில் அதாவது 1440 நிமிடங்கள், அதாவது 86400 வினாடிகள் உள்ளன.
பூமி சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு ஒரு வருடமாகும். பூமி சூரியனை வலம் வரும்போது, நம் வயதில் ஒரு வயது கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும்.
வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது.
ஆனால், நம் வாழ்வில் உள்ள நேரத்தை நம்மால் பயன்படும்படியான பணிக்கு நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். பறந்து கொண்டிருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகிப்போம்.
 • விண்ணில் இருக்கும் விண்மீனைப்பார்
 • நீ அதை அடைய வேண்டுமா?
 • நீ யாராக இருந்தாலும்
 • உன் எண்ணங்களிலும் உறுதியும் கடும் உழைப்பும் இருந்தால்
 • உன் இதயம் நாடியது உன்னிடம்
 • நிச்சயம் வந்தடையும்
 • விண்மீனாக இருந்தாலும்...

மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/kalamNewsDetails.asp?id=15
மேலும் வாசிக்க>>>> "ஆசைப்பட்டால்... விண்மீனும் விரல் நுனிக்கு வரும்!"

0 கருத்துரைகள்!

கால் விரல்களால் தேர்வெழுதிய மாணவி:

விழுப்புரம் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் வித்யாஸ்ரீ(18). இரு கைகள் இல்லாத இவர், ஆற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தனது இடது கால் விரல்களைப் பயன்படுத்தி தேர்வெழுதினார். மற்ற மாணவர்களைப் போல வித்யாஸ்ரீக்கும் தேர்வு எழுதும் நேரம் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி அசத்தினார்.

நன்றி: தினமலர்

மேலும் வாசிக்க>>>> "கால்விரலில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதிய மாணவி"

புதன், 25 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எல்., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர, தேவையான கல்வித் தகுதி விபரம்:

1. பி.ஏ., பி.எல்., (5 ஆண்டுகள்)

 • பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும்.

 • சேர்க்கைக்கான தேர்வின் போது மொழிப்பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

 • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

 • பணியில் உள்ளவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாது.

2. பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் (5 ஆண்டுகள்)

 • பிளஸ் 2வில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும்.

 • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/QualificationDetails.asp?id=13

மேலும் வாசிக்க>>>> "சட்டப்படிப்புகளுக்கு கல்வித் தகுதி"

0 கருத்துரைகள்!

சென்னை அண்ணா பல்கலை நடத்தவுள்ள ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம், தமிழகம் முழுவதும் வரும் ஏப்.,1ம் தேதி முதல் வினியோகிக்கப்படவுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளில் ‘கவுன்சிலிங்’ முறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற, தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) எழுதி, தேர்ச்சி பெறுவது அவசியம்.

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தரமான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ‘சீட்’ கிடைக்கும்.

இத்தேர்வை ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் ‘டான்செட்’ தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல், ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளதால், இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தேதி, மே 30, 31ம் தேதிகளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பம், தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் ஏப்., 1ம் தேதி முதல் வினியோகிக்கப்படவுள்ளது.

கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும் (ஜி.சி.டி.,) விண்ணப்பம் கிடைக்கும்.

ஜி.சி.டி., கல்லூரியில் ‘ஆன்லைன்’ முறையில் விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்படவுள்ளது. இந்த மையத்தில் 300 ரூபாய் செலுத்தி ஏதேனும் ஒரு பாடத்தில் நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு உடனுக்குடன் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்படவுள்ளது.

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1303
மேலும் வாசிக்க>>>> "‘டான்செட்’ விண்ணப்பம் ஏப்.,1 முதல் வினியோகம்"

திங்கள், 23 மார்ச், 2009 1 கருத்துரைகள்!

நமதூர் ஜமாஅத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு. யூனூஸ் அவர்கள் தமக்கு உதவியாக அமைய உள்ள நிர்வாகக்குழுவினர் பெயர்களை அறிவித்திருந்தது அறிந்ததே.

நேற்று காலை 11 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி மஹ்மூதியா ஷாதிமஹலில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிர்வாகக் குழுவின் பல்வேறு அணிகளுக்கு தலைவர் விளக்கமளித்தார்.
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் நிர்வாகிகள் பதவியேற்பு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை பர்மிட் இருந்தும் சிதம்பரத்தில் இருந்து நேர்வழியில் கடலூர் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரான பரங்கிப்பேட்டையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டையில் இருந்து வெளி பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் பல தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல பர்மீட் வாங்கியுள்ளனர். ஆனால் பரங்கிப்பேட்டைக்கு செல்லாமல் கொத்தட்டை வழியாக நேர் வழியில் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.

பரங்கிப்பேட்டையில் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தொழிற்நுட்ப பயிற்சி பள்ளி, போலீஸ் நிலையம், கோர்ட், பேரூராட்சி அலுவலகம் என அனைத்து வசதிகளும் உள்ளது.

இங்கு படிக்கும் பல மாணவர்கள் கடலூர், சிதம்பரம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து படிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.

மோட்டார் வாகன அலுவலகத்திற்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமலர் இணைய நாளிதழ்

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை வராத பஸ்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?"

ஞாயிறு, 22 மார்ச், 2009 0 கருத்துரைகள்!
ஒன்றரை டன் எடையும் 15 அடி அகலமும் 10 அடி நீளமும் உடைய கொம்பு திருக்கை மீன் ஒன்று கடலூர் துறைமுகத்தில் நேற்று பிடிக்கப்பட்டது. இந்த மீன் 17ஆயிரம் ரூபாய்க்கு அங்கேயே விலைபோனது.

இதுபற்றி கடலூர் துறைமுகநகரைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் கூறுகையில்
பொதுவாக திருக்கை மீன்கள் 15 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும். இராட்சத கொம்பு திருக்கைமீன்கள் ஆழ்கடலில் 50 கிலோமீட்டர் தூரங்களில் இருப்பதுண்டு.
வலைசேதப்படும் என்பதாலும், ஆட்களையே விழுங்கக்கூடும் என்பதாலும் இம்மாதிரி இராட்சத மீன்களைப் பிடிக்க மீனவர்கள்ஆர்வங்காட்ட மாட்டார்கள்.

நேற்று மீனவர்களின் வலையில் இம்மீன் சிக்கி அந்தச் சிறிய வலையும் சேதமடைந்தது. இருந்த போதிலும், வலையை படகோடு சேர்த்துக் கட்டிய கடலூர் மீனவர்கள் மெல்ல அதனை கரைக்குக் கொண்டுவந்தனர். தலையில் சிறிய கொம்புடன் காணப்படும் இம்மீனுக்கு கோட்டான் திருக்கை, கொம்பு திருக்கை என்றும் சொல்வார்கள். இது எதிர்பாராமல் சிக்கியது தான். வியாபாரி ஒருவர் ரூ.17 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து கூறு போட்டு வெளியூருக்கு ஏற்றுமதி செய்துவிட்டார்.
என்றார்
மேலும் வாசிக்க>>>> "கடலூர் கடலில் அகப்பட்ட இராட்சத திருக்கை மீன்"

0 கருத்துரைகள்!

இது மார்க் வாங்கும் நேரம்!
- அபூ இர்ஷாத்

ஏம்பா! அப்துல் ரஹீம் நீ நல்லாதானே படிக்கிறே! அப்புறம் மார்க் ஏன் கம்மியா வாங்குறே?' என்று தன் மகனிடம் சாதிக் பாய் கேட்டார்.

அதற்கு மகன், தெரியலெத்தா! நான் எல்லா கேள்விக்கும் சரியாதான் பதில் எழுதினேன். கணக்கு பாடத்தையும் சரியாதான் எழுதினேன். இருந்தும் எனக்கு மார்க்கு அதிகமாக கிடைக்கவில்லை. ஏன்னு புரியமாட்டேங்குது என்று தன் வருத்தத்தை தெரிவித்தான்.

சரி இதுக்கு ஏன் கவலை படுறே! வா உன் வகுப்பு ஆசிரியர் கிட்டே போய் ஆலோசனைக் கேட்போம' என்று கூறி தந்தையும் மகனும் வகுப்பாசிரியரிடம் சென்றார்கள்.

அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைந்ததும், ஆசிரியர் அப்துல் ரஹ்மான்... அஸ்ஸலாமு அலைக்கும், வாங்க சாதிக்பாய், எப்ப ராஸல் கைமாவிலிருந்து வந்தீங்க? என்று வரவேற்றார்.

வ அலைக்கும் சலாம், சார். போன வாரம்தான் ராஸல் கைமாவிலிருந்து வந்தேன். பையனோட விஷயமாக கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன். பையன் நன்றாகத்தான் படிக்கிறான். ஆனா மார்க் தான் கம்மியாக வாங்குகிறான். என்ன காரணம்னு தெரியலே? அதான் அவனுடைய ஆசிரியர் ஆச்சேன்னு உங்ககிட்ட கேட்க வந்தேன்' என்று தான் வந்ததுக்கான காரணத்தைக் கூறினார்.

சாதிக் பாய்! நானே உங்க பையன்கிட்ட இதப்பற்றி பேசலாம்னு இருந்தேன். நீங்களே அழைச்சிக்கிட்டு வந்திட்டீங்க ரொம்ப நல்லதாப் போச்சு. எதனாலே மார்க் குறைவா வருதுன்னு இப்பவே உங்களுக்கு தெரிஞ்சிடும் பாருங்க! என்று கூறி... மாணவன் அப்துர்ரஹீமின் பக்கம் திரும்பி, அப்துர்ரஹீம்! நீ கடந்த திருப்புத் தேர்வில் அறிவியல் கேள்வித்தாளை நல்லா படிச்சுப் பார்த்துதான் எழுதினாயா?

ஆமாம், சார்! படிச்சுப்பார்த்துதான் பதில் எழுதினேன், ஆனால் தெரியும்னு நெனச்சி எழுதினேன். அப்புறமா தெரியலேன்னு பாதியிலே முதல் கேள்வியை அடித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதில் எழுதினேன்.

கேள்வியை எப்படி வரிசைப்படுத்தி எழுதினே?

சார் முதல்ல 5 மார்க், பிறகு 10 மார்க் அப்புறமா 2 மார்க் கேள்விக்கும் இப்படி மாற்றி, மாற்றி எழுதினேன்.

பார்த்தாயா! இப்படி மாத்தி மாத்தி பதில் எழுத கூடாது, அடிச்சு அடிச்சும் எழுத கூடாது. உன் பேப்பரை திருத்தும் ஆசிரியருக்கு எரிச்சலா இருக்கும். அதனால் உனக்கு போடக்கூடிய மார்க்கும் குறையும். நீ என்ன பன்ன வேண்டும் என்று நான் சொல்கிறேன் அதன் படி நீ பரீட்சை எழுதினால் நீதான் நமது பள்ள்ளியில் முதல் மாணவனாக வருவாய்'; என்று கூறி விளக்க ஆரம்பித்தார்.

 • முதல்லே பரீட்சைக்கு தயாராகும் போது பேனா, பென்சில் ஸ்கேல், கலர் பென்சில் போன்றவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சின்னப் புள்ளைங்களுக்கு சொல்லுற மாதிரி சொல்லுறேன்னு நினைக்காதே, இது பரிட்சைக்கு அத்தியாவசியத் தேவை. இரண்டு பேனா எடுத்துக்கொள்வது நல்லது.

 • பொதுத்தேர்வுக்கு செல்லும் போது ஹால் டிக்கட் மறக்காம எடுத்து செல்லவேண்டும்.

 • பரிட்சை ஹாலுக்கு போனவுடன், படித்த பாடத்தை நினைத்து பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் புத்தகத்தைத் திறந்து படிக்கக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் பரிட்சை நேரத்திற்கு 2-மணி நேரம் முன்பே படிப்பதை நிறுத்தி விடவேண்டும். கடைசி நேரத்தில் படிக்கிற படிப்பு, ஏற்கனவே படித்த பாடத்தையும் போட்டுக் குழப்பி விடும்.

 • பரிட்சைக்கான கேள்வி தாள் வந்தவுடன் அமைதியாக அல்லாஹ்வை பிரார்த்தனை செய்து விட்டு கேள்விதாளை முழுவதுமாக ஒரு தடவை நல்லா படிக்கனும்.

 • முழுசா கேள்வியை படிச்சிட்டு, பிறகு எந்தெந்த கேள்விக்கு நல்லா தெளிவா பதில் தெரியுமோ அந்தக் கேள்வியை எழுத ஆரம்பிக்கனும்.

 • இதுல இன்னும் ஒரு விசயம் கூடுதலா சொல்லனும்னா நீ முதல்ல 2 மார்க் கேள்வியை தேர்ந்தெடுக்கிறது நல்லது. மூன்று கேள்விகளுக்கு உனக்கு தெளிவா பதில் தெரிஞ்சு எழுதினா அதை படிக்கிற ஆசிரியருக்கு உன்மேல் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும். உன் பேப்பரை திருத்த அவருக்கு ஆசையாகவும் இருக்கும்.

 • அப்புறமா ஒரு மார்க்கு கேள்வி, 5 மதிப்பெண் கேள்வி, 10 மதிப்பெண் கேள்வின்னு வரிசையா எழுது. ஒரு மார்க்கு கேள்வியிலே உனக்கு தெரிஞ்சதை சரியா எழுது.

 • அடுத்தவனை பார்க்காதே, அது உன் நேரத்தை வீணடிக்கும். சில நேரத்தில் அது தப்பாகவே போகும். அதை விட முக்கியம் 'காப்ப்பியடித்த்தான்' என்று உன்னை பரிட்சை ஹாலில் இருந்தே வெளியேற்றிவிட நேரிடலாம். அதனாலே உனக்கு தெரிஞ்சதை மட்டும் எழுது.

 • சொல்ல மறந்திட்டேன்! எழுத்தை மிகத் தெளிவாக எழுதணும், ரொம்ப சிறியதாகவும் எழுதக்கூடாது, ரொம்ப பெரிதாகவும் எழுதக்கூடாது. பெரிசு பெரிசா எழுதி பக்கத்தை நிரப்பாதே. எல்லோரும் படிக்கிற மாதிரி அழகாக நிதானமாக எழுதணும். எழுத்துக்களை சேர்த்து எழுதி படிக்க முடியாத அளவு பண்ணக் கூடாது. இதனாலேயும் உன் மார்க் குறைந்து போகும்.

 • தமிழ் பரிட்சை எழுதும் போது எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கணும். செய்யுள், திருக்குறள் போன்றவற்றை புத்தகத்தில் எப்படி இருக்கின்றதோ அதைப்போலவே எழுத வேண்டும்.

 • கட்டுரைகளை உனது சொந்தக் கருத்தை சொந்த நடையில் எழுதணும். இதுல சுலபமா மார்க் பெறக்கூடிய எதுகை, மோனை, வாக்கியத்தில் சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல் போன்ற கேள்விகள் அதிக மதிப்பெண்னை பெற்று தரும்.

 • ஆங்கிலத்திலும் எஸ்ஸே (Essay) போன்றவற்றை தெளிவாக எழுத வேண்டும். போயம் (Poem), போன்றவற்றை எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும். எளிதாக மார்க் எடுக்கக்கூடிய டெவலப் த ஹின்ட்ட்ஸ்ஸ் (Develop the Hints), ஆப்போசிட் வேர்ட்ஸ் (Oppsite Words), சினானிம்ஸ் (Synanims), ஆன்டானிம்ஸ், சபிக்ஸ், பிரிபிக்ஸ் போன்றவற்றில் கவனமாக எழுதினால் மிகஎளிதாக மதிப்பெண்கள் பெறமுடியும். என்றார்.

சார் கணக்குப் பரிட்சையில எப்படி சார் பதிலளிக்கணும்?

சொல்றேன்...

 • கணக்கு பரிட்சையில் தெளிவா ஆசிரியருக்கு புரியுர மாதிரி ஸ்டெப் பைஸ்டெப்பா (step-by-step) போடணும்.

 • கிராப் (Graph) மற்றும் வரைபடத்தை போடும் போது மிக நுணுக்கமாக போடவேண்டும்.

 • கோடு மேலே கோடு போடக்கூடாது. ஏன்னா இந்த மாதிரியான வரைபடங்களை அழகாக வரைவதாலே அதிகமான மார்க் எளிதாக கிடைக்கும்.

 • கணக்குகளும் வரைபடமும் சரியாக அமைந்தால் 100 மதிப்பெண் வாங்கி விடலாம்.

 • அது போல மற்ற பாடங்களிலும் படம் வரைந்து பாகங்கள் குறிப்பது போன்ற கேள்விகளை விட்டு விடக்கூடாது. அவை எளிதாக மதிப்பெண் பெற்று தரக்கூடியவை.

 • அறிவியல் பெயர்கள், விதிகள் போன்றவற்றை எழுதி அண்டர்லைன் பணணுவது அழகாகவும் இருக்கும். படிக்கும் ஆசிரியருக்கு பிடிக்கவும் செய்யும்.

 • சமூகவியல் பாடங்களில் வரும் பெயர்கள், ஆண்டுகள், இடத்தின் பெயர்கள் இது போன்றே இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் போன்ற எந்த பாடங்கள் ஆனாலும் இந்த முறையில் எழுதுவது நல்லது.

 • பின்னால் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத்துறையாக இருந்தாலும் அதிலும் இம்முறையை பயன்படுத்துவது நல்லது.

 • அடுத்து குறிப்பாக நீ வாங்கும் ஒவ்வொரு துணைத்தாளுக்கும் உடனடியாக பக்க எண்ணை குறிக்க மறக்க கூடாது. இது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும்.

 • அனைத்தும் எழுதி முடித்ததும் மீண்டும் ஒரு முறை படித்து பார்க்க வேண்டும்.

 • கேள்வி தாளில் உள்ளது போல் கேள்வி எண்ணை சரியாக போட்டிருக்கின்றாயா? என்று பார்க்கவேண்டும்.

 • பக்க எண்களை வரிசையாக வைத்து கட்டி கொடுக்க வேண்டும்

என்று தன் நீண்ட ஆலோசனையை கூறினார்.

சார் நான் வரும் பொதுத்தேர்வில் நீங்கள் சொன்ன மாதிரியே பரிட்சை எழுதிநமது பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் சார் இன்ஷா அல்லாஹ்... என்று அப்துல் ரஹீம் கூறினான்.

ரஹீம், 'ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்துக்கொள்' காலையில் படித்தால் மணதில் நிற்கும். ஆனா காலையில் எழுந்து முகம் கழுவி தெளிவா ஆன பிறகு படிக்க உட்காரனும். தூங்கிகிட்டே படிக்க கூடாது.

'சார் பொழுது போன பிறகு படிக்கலாம்ல சார்?' என்று ராஜா கேட்டான்.

ஏன்? நல்லது தான், படிக்கலாம், படித்ததை எழுதிப் பார்க்கலாம். பத்து தடைவ படிப்பதற்கு பதிலாக ஒரு தடவை எழுதி பார்ப்பது சிறந்தது தெரியுமா அதனால எழுதிப்பார்க்கும் வேளையை இரவில் செய்வது நல்லது.

எங்க சார் அந்த நேரத்தில் தான் எங்க வீட்டிலே சீரியல் பார்க்கறாங்க ஒன்னும் படிக்க முடியமாட்டுங்குது சார்' என்று ராஜா சொன்னான்.

'நான் படிக்க போறேன்னு சொல்லு அவங்க சீரியல் பார்க்க மாட்டாங்க. நீ நல்லா படித்து பெரிய ஆளா வரணும்னு தானே உங்க அத்தா அம்மா நினைப்பாங்க. உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வாங்க, சரியா? என்றார்.

பாடத்தில் எந்தெந்த பகுதியை படிக்கலாம் சார் என்று அஹமது கேட்டான்.

'நல்ல கேள்வி! நீ பழைய பொதுத்தேர்வு கேள்விதாள்களை எடுத்து பார்க்கனும் அதுல எந்த பகுதியில் எத்தனை மார்க்குக்கு கேள்வி கேட்டுள்ளனர் என்று ஆராய்ச்சி செய்யணும். ஆனா அதற்கு இப்ப நேரமில்லை. நீ என்ன பண்ணவேண்டும் தெரியுமா? கடந்த 3 பொதுத்தேர்வு கேள்வி தாள்களில் இருக்கிற கேள்விகளை படிப்பது நல்லது. அதன் மூலம் அதிக மதிப்பெண் கிடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். படித்ததை ஒருமுறை எழுதி பார்க்கவும்'.

இந்த வருடம் நீங்க அனைவரும் நல்ல மார்க் எடுத்து நல்ல முறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக! ஆமீன்!!

உரையாடல் முடிந்து சாதிக் பாய் ஆசிரியரிடம் விடைபெற்று சென்றார்.

உங்களுக்காக..

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான கடந்த மூன்று பொதுத்தேர்வு கேள்வி தாள்களை imct.50g.com என்ற இணையதளத்தில் காணலாம். தங்களுக்கு தேவையான கேள்வி தாள்களை Download செய்து பரிட்சைக்காக தயார் செய்யலாமே.

மறதியைப் போக்க்க வழி

வயதுக்கு ஏற்ப மறதியின் அளவும் வேறுபடும். மூளையின் நினைவுத்திறன் சார்ட்டெர்ம் மெமரி, லாங் டெர்ம் மெமரி என இரு வகைப்படும்.

படிப்பதை மறக்காமல் இருக்க முழுமையாகப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது எழுதிப் படிப்பது மூளையின் இடது புறத்திலும் படம் போட்டுப் படிப்பது வலது புறத்திலும் பதிவாகும். தேர்வு நேரத்தில் ஒன்று உதவவில்லை என்றாலும் மற்றொன்று உதவும்.

படிக்கும் போது உங்களுக்கு எது எளிதாக தோன்றுகிறதோ, அதனை முதலில் முடித்துவிடுங்கள். அதோடு தொடர்புடைய பகுதிகளில் லிங்க் பிடித்துக் கடினமான பகுதிகளை மனதில் பதிய வையுங்கள்.

தேர்வுகளின் போது ஏதேனும் பதில் மறந்து போனால் பதறாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த விடைகளை முதலில் எழுதி முடித்துவிடுங்கள்.

கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு யோசித்தால் மறந்து போன விடைகளும் பளிச்சென நினைவுக்கு வரும்.

டாக்டர் எஸ்.எம். பதூர் முகைதீன், குழந்தை நலன் மற்றும் மனநல மருத்துவர், சென்னை.(நன்றி: ஆனந்த விகடன் 15-10-2008)

நன்றி: http://www.muduvaivision.com/advertisment/Arivoli.pdf

- அறிவொளி இலவச மாத இதழ் - பிப்ரவரி 2009 (வெளியீடு: வி.களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்)
இணையதளம்: http://www.imct.50g.com/

மேலும் வாசிக்க>>>> "இது மார்க் வாங்கும் நேரம்!"

0 கருத்துரைகள்!

+2 மாணவர்களுக்கு...

வெற்றியை நோக்கி...

நன்றி: சமரசம் மாதமிருமுறை இதழ் - 2009 பிப்ரவரி 15 - 28
இணையதளம் : http://samarasam.net
மேலும் வாசிக்க>>>> "+2 மாணவர்களுக்கு... வெற்றியை நோக்கி..."

வியாழன், 19 மார்ச், 2009 4 கருத்துரைகள்!

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று விளம்பரம் செய்யும் அரசே ஒழுங்காய் செழிப்பாய் வளரும் மரத்தை அடியோடு வெட்டுவது நமதூரில் நேற்று காண கிடைத்தது.

நமதூர் அரசு மருத்துவமனை புதிய பொலிவான கட்டிடமாக கட்டப்பட்டது மக்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. தற்போது மருத்துவமனை வளாகத்தின் உள்ளே ஒரு தனி கட்டிடமும், ஆம்புலன்ஸ் நிறுத்த ஒரு புதிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. சந்தோஷம்.

இது அது அல்ல

ஆனால் இந்த நல்ல விஷயங்களில் ஒரு பெரும் உறுத்தலாக நமது அரசு மருத்துவமனையின் தென் புறம் ஓங்கி வளர்ந்து நிழல் தந்து கொண்டு இருந்த பெரிய வேப்ப மரம் ஒன்று இன்று காலை முழுவதுமாக வெட்டி வீழ்த்தப்பட்டது.


மரம் வெட்டப்படும் வேலை துவங்கிய உடன் நாம் சென்று பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களை சந்தித்து இது பற்றி கேட்டோம். அதற்க்கு அவர் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கட்டிடங்களையும் பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறைதான் மருத்துவமனை கட்டிடங்களுக்கும் நுழைவாயிலுக்கும் மரம் இடைஞ்சலாக இருப்பதால் அதனை வெட்டிவிட தீர்மானித்தது. அதற்க்கு முறைப்படி ஏலம் விடப்பட்டு, சில நாட்க்களுக்கு முன்பு ஏலம் வழங்கப்பட்டது. இது முழுமுதலாக தமிழக பொதுப்பணித்துறையின் விஷயம். இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை என்றார்.


தமிழ் கூறும் பரங்கிபேட்டை நல்லுலகில் நாய், பேய் அடிப்பட்டால் எல்லாம் கவனிக்க, பிரச்சனை பண்ண ஆள்களும் அமைப்புக்களும், கட்ச்சிகளும் கரைகளும் நிறைய உள்ளன. மரங்கள், அவை தரும் நலன்கள் பற்றி சொல்ல தேவையில்லை, அதுவும் இந்த குளோபல் வார்மிங் யுகத்தில்.... கிரசன்ட் போன்ற அமைப்புக்கள் ஊரெங்கும் மரங்கள் வளர்ப்பதில் காட்டி வரும் அக்கறைக்கும் முயற்சிக்கும் மத்தியில் இது போன்ற மரம் வெட்டல்களை தடுக்க அட்லீஸ்ட் பார்த்து வருத்தம் தெரிவிக்க ஒரு கிரீன் பீஸ் போன்ற அமைப்பு கூட இல்லாதது வருத்தமாக தான் உள்ளது. ( இது போல சமீப காலத்தில் கூட ஒரு முக்கிய பள்ளியில் மரம் வெட்டப்பட்ட போது பெரும் பிரச்சனை எழுவது போல் விஷயம் முற்றியது நினைவில் கொள்ளதக்கது. ).
நமது அடுத்த தலைமுறைக்கு நாம் எதை பரிசளித்து செல்லப்போகிறோம்.... வெறுமையான வெயில் பாரித்த தெருக்களை, வறண்டு போன நிலங்களை, தூர்ந்து போன குளங்களை, குப்பைகளும் கெமிக்கல்கலும் சூழ்ந்த நரகத்தை.... நினைத்துப்பார்த்தால் கலக்கமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் நமது அலட்சியம் நிச்சயம் பெரும் பாதிப்பாய் வந்து விடியும். மரம் வெட்டுவது என்பது குறிப்பாக இது போன்ற இடங்களில் தவிர்க்க முடியாதது தான். ஆனால் மரம் வெட்டுபவர்கள் (வீட்டிலும் சரி பொதுவிலும் சரி) சமுதாய உணர்வோடு அட்லீஸ்ட் இரண்டு மரமாவது நட்டு வைத்துவிட்டு பிறகு தூக்குங்கள் அரிவாளை, கோடாரியை...

இந்த மரத்தை விட்டு விடலாம். இனி எந்த மரம் என்றாலும் வெட்டப்படுவது மரம் மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததியினரின் நலவாழ்வும் தான் என்பதை மனதில் வைப்போம் .

மேலும் வாசிக்க>>>> "வெட்டபடுவது மரம் மட்டுமல்ல..."

0 கருத்துரைகள்!

தமிழக அரசு கல்லூரி கல்வித்துறையின் விதிமுறைகளின் படி, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும். என்றாலும் கல்லூரி முதல்வர், கல்லூரியின் மூத்த தேர்வு நிலை விரிவுரையாளர்கள், இணைப்பேராசிரியர் கொண்ட கமிட்டி பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக தகுதி உடைய மாணவர்களை படிப்பில் சேர்க்கிறது.

வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் வரம்புகளின் கீழ், அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரி, சிறுபான்மை கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2வில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி 210 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு மாணவர்களின் தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

பட்டப்படிப்பில் மாணவர் சேர விரும்பும் அதே பாடத்தில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண்களே மாணவரின் தரவரிசை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் பிளஸ்2வில் எடுத்த பாடங்கள் அடிப்படையில் 5 வகையினராக பிரிக்கப்படுகிறார்கள். கல்லூரியில் சிலப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு அதே பாடத்தை பிளஸ் 2வில் படித்திருந்தால் மட்டுமே சேர முடியும். உதாரணமாக கணிதம்.

பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு எடுத்திருந்தாலும் சில பட்டப்படிப்புகளை படிக்க முடியும் உதாரணமாக இதழியல், உளவியல். இவ்வாறு வித்தியாசப்படும் பாடப்பிரிவுகளில் விண்ணப்பம் செய்த மாணவர்களை தரவரிசை கீழ்க்கண்ட 5 வகையாக பிரிக்கப்படுகிறது.

1. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப் பாடங்களை பிளஸ் 2வில் படித்திருப்பவர்.(தேர்வு செய்யும் முக்கிய மெயின் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடங்கள் இரண்டுக்கும் தலா 50 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)

2. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவில் பிளஸ் 2வில் மாணவர் எடுத்த மதிப்பெண் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். துணைப்பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும்.)

3. துணைப்பாடங்கள் இரண்டையும் பிளஸ் 2வில் படித்திருப்பவர். (தேர்வு செய்யும் துணைப்பாடங்கள் பிரிவுகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்)

4. முக்கிய பாடம் அல்லது ஏதாவது ஒரு துணைப்பாடத்தை படித்திருப்பவர். (முக்கிய பாடம் அல்லது துணைப்பாடத்தில் 100 மற்றும் மூன்றாம் பிரிவு பாடங்களில் செயல்முறை தேர்வு இல்லாமல் 100)

5. கல்லூரியில் விண்ணப்பிக்கும் முக்கிய பாடம் மற்றும் துணைப்பாடங்களை பிளஸ் 2வில் படிக்காதவர். (மூன்றாம் பிரிவு பாடங்களில், செயல்முறைத் தேர்வு இல்லாமல் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.)

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/QualificationDetails.asp?id=14
மேலும் வாசிக்க>>>> "கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி"

புதன், 18 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், முத்தைய முதலியார் தெரு உஸ்மான் (துபை) அவர்களின் தம்பியும், அன்வர், நூர்பாஷா, சாதிக், ஜான் ஆகியோரின் தகப்பனாருமான ஷேக் அப்துல் காதர் அவர்கள், திட்டச்சேரியில் இன்று இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். நாளை காலை திட்டச் சேரியில் அடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க பிரார்த்திப்போம்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச்செய்தி"

1 கருத்துரைகள்!

சில காலம் முன்பு வரை மக்களின் மிக அத்தியாவசிய இடமாக இருந்தது பரங்கிபேட்டை தபால் நிலையம். தொலை தொடர்பு ஏறுமாறாக முன்னேறி விட்ட இந்த காலத்தில் மெகா சைஸ் பார்சளுக்கும் மாணவர்களின் சிறு சேமிப்புக்கும் மட்டும் தான் இடமாகிபோனது போனது தபால் நிலையம்.


தற்போது சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ள நமதூர் தபால் நிலைய அலுவலகத்தை பார்த்தால் நாம் பரந்கிபெட்டயில்தான் இருக்கிறோமா என்று சந்தேகம் ஏற்ப்படும் எனும் அளவிற்கு ஆச்சர்யம். புத்தம் புதிய கணினிகள், லேசர் பிரிண்டர்கள், தகவல் அறிய சுமார் ஒன்னேகால் லட்சம் செலவில் தொடுதிரை வசதி கம்ப்யூட்டர், மணி டிரான்ஸ்பார், என்று சகல வசதிகளுடன் மிளிர்கிறது பரங்கிபேட்டை தபால் நிலையம்.
போஸ்ட் மாஸ்டர் அப்துல் ரஹீம் அவர்களுடன் பேசியதில் மிகுந்த பொருட்செலவில் நமது அரசு செய்து கொடுத்திருக்கும் இத்தகைய வசதி மேம்பாடுகளை பற்றி மேற்கண்ட விஷயங்களை விவரித்தார். பள பள டைல்ஸ் மீது நடந்து வருவது ஐ சி ஐ சி ஐ போன்ற துரைமார்கள் நிறுவனங்களில் தான் என்பதான மாயையை மாற்றி சாதரண அரசு அலுவலகங்களில் கூட அரசாங்கம் அளிக்கும் கார்ப்பரேட் வசதிகளை கண்டு சராசரி பொது ஜனம் கண்களில் ஆச்சர்ய மின்னல்கள்.
மேலும் வாசிக்க>>>> "புதிய பொலிவுடன் பரங்கிபேட்டை தபால் நிலையம்"

செவ்வாய், 17 மார்ச், 2009 0 கருத்துரைகள்!


ஒரு சந்தோஷமான நிகழ்வு: அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் தமது கடைக்கண் பார்வையை பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலை பக்கமும், ரயிலடி பாலம் மீதும் திருப்பியுள்ளது சந்தோஷமான நிகழ்வு என்று தானே சொல்ல வேண்டும்.

6 கி.மீ தூரம் உள்ள பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலையில் எதிரே இரு பஸ்கள் வந்து விட்டால், மண்ணில் தான் இறங்க வேண்டும், இது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலையை சீர் செய்து அகலப்படுத்த வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர், அதனடிப்படையில், ரூ 1.76 கோடியில், அகலப்படுத்தி, புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது மேலும், அகரம்-ரயிலடி அருகே சேதமடைந்த பாலத்திற்கு பதில் புதியதாக பாலம் கட்டப்படுகின்றது, இதன் காரணமாக வாகனங்கள் மாற்று வழியாக செல்ல பழைய பாலம் அருகே புதியதாக சாலை போடும் பணி நடப்பதாக, தினமலர் நாளேடு (17-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை வலைப்பூ/இணையதளத்தின் சார்பாக, நாமும் இதுகுறித்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம், நமது இணையதளத்திற்கு அளித்த செவ்வியில், "முட்லூர் ரோடு உங்களுக்கே சங்கடமாக இல்லையா?" என்ற வினாவினையும் அவர் முன் வைத்திருந்தோம் என்பது இங்கே நினைவுக்கூறதக்கது.

மேலும் வாசிக்க>>>> "புதுப்பிக்கப்படுகின்றது முட்லூர் நெடுஞ்சாலை"

0 கருத்துரைகள்!


அன்று "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார் திருவள்ளுவர். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. தமிழக மாநிலத் திட்டக் குழு வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உலகுக்குச் சோறு போடும் வேளாண்மை தொடர்பான கல்வி கற்போருக்கு வேலைவாய்ப்பு வீடு தேடி வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. அத்தகைய படிப்புகள் குறித்த விவரங்கள் இதோ

இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயம் போற்றப்படுகிறது. இந்தியாவில் விஞ்ஞானக் கல்வி அதிகரிப்பினால், விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் இன்றும் 50 சதவீதம் பேருக்கு வாழ்க்கைத் தொழில் விவசாயம்தான்.

இத்தொழிலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே புதிய அறிவாற்றல், சிந்தனையை வலுப்படுத்தவும் 1868-ம் ஆண்டிலேயே விவசாயக் கல்வி வடிவமைக்கப்பட்டுவிட்டது.

சைதாப்பேட்டையில்தான் அந்த ஆண்டு விவசாயப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னாளில் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கே ஓரளவு வளர்ந்து, மேம்பாடு அடைந்த பிறகு, 1920-ம் ஆண்டில் வேளாண் கல்வி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

கோவையில் உள்ள வேளாண் கல்லூரி -ஆராய்ச்சி நிலையம்தான் பின்னர் 1958-ம் ஆண்டு வேளாண் பட்ட மேற்படிப்பு மையமாக அங்கீகாரம் பெற்றது. மதுரையிலும் இதே போல் வேளாண் ஆராய்ச்சி மையம், வேளாண்மைப் பல்கலைக்கழகமாக 1971-ம் ஆண்டு விசுவரூபம் பெற்றது.

1972-ம் ஆண்டு தோட்டக் கலைக்கான பி.எஸ்ஸி., 80-ல் பி.எஸ்ஸி. மனையியல் பட்டப் படிப்பு ஆகியவை தொடங்கப்பட்டன.

பிறகு, 1984-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவதாக வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டது.

1985-ம் ஆண்டில் கோவையில் பி.எஸ்ஸி. வனவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.

1989-ல் நான்காவதாக திருச்சி, குமுளூரில் தொடங்கப்பட்டு, பிறகு நவலூர் குட்டப்பட்டுக்கு மாற்றப்பட்டது.

தற்போது, பெரியகுளத்தில் தோட்டக் கலையியல் கல்லூரியும் மேட்டுப்பாளையத்தில் வனவியல் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் அறிவியல் மேம்பாட்டுக்கு ஏற்ற வகையில் தற்போது வேளாண் துறை சார்ந்திருந்த உணவுப் பதனம் குறித்த கல்வி பொறியியல், தொழில்நுட்பக் கல்வியாக மாறிவிட்டது. தற்போது பல கல்லூரிகளில் பி.டெக். (உணவுப் பதனப் பொறியியல்) என்ற பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது.

அதிலும் வேளாண் உயிரியல் தொழில்நுட்பம் (Agriculture Bio Technology), தோட்டக் கலையியல் (Horticulture) ஆகிய பி.டெக். பட்டப் படிப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. உலக அளவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை ஒட்டி, எரிசக்தி, சூழல் பொறியியல் (Energy and Environmental Engineering) என்ற பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது.

இத்துறை மேலும் விரிவடைய வேண்டுமானால், ஆய்வுகள், விரிவாக்கப் பணிகள் தேவை. அதற்காக தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 32 ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் வேளாண் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றுக்குப் பெரிதும் உதவுகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 950 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்வி நிறுவனங்கள் "ஐ.சி.ஏ.ஆர்.' எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council for Agriculture Research) கண்காணிப்பில் உள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்பட மொத்தம் 31 வேளாண் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உள்ளன.

இவற்றில் 5 தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள், 3 மத்திய பல்கலைக்கழகங்கள். இவற்றில் 11 வகையான வேளாண்மைப் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. எல்லா வகையான வேளாண்மைப் பல்கலைக்கழகங்களையும் சேர்த்துப் பார்த்தால், நாட்டில் மொத்தம் 39 வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

அவற்றின் விவரங்கள் (அடைப்புக் குறிகளில் மாநிலங்கள்) :

1) ஏ.ஜி. ரங்கா வேளாண் பல்கலை. (ஆந்திரம்)

2) அசாம் வேளாண் பல்கலை. (அசாம்)

3) ராஜேந்திரா வேளாண் பல்கலை. (பிகார்)

4) பிர்சா வேளாண் பல்கலை. (பிகார்)

5) குஜராத் வேளாண் பல்கலை. (குஜராத்)

6) ஹரியாணா வேளாண் பல்கலை. (ஹரியாணா)

7) கிரிஷி விஸ்வ வித்யாலயா (ஹிமாசலம்)

8) ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை -வனவியல் பல்கலை. (ஹிமாசலம்)

9) எஸ்.கே. வேளாண்மை -நுட்பப் பல்கலை., ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)

10) எஸ்.கே. வேளாண்மை -நுட்பப் பல்கலை., ஜம்மு (ஜம்மு காஷ்மீர்)

11) வேளாண் அறிவியல்கள் பல்கலைக்கழகம், பெங்களூர் (கர்நாடகம்)

12) வேளாண் அறிவியல்கள் பல்கலைக்கழகம், தார்வாட் (கர்நாடகம்)

13) கேரள வேளாண் பல்கலை. (கேரளம்)

14. ஜவாஹர்லால் நேரு கிரிஷி விஸ்வ வித்யாலயம், ஜபல்பூர் (ம.பி.)

15) இந்திரா காந்தி கிரிஷி விஸ்வ வித்யாலயம்,ராய்ப்பூர் (ம.பி.)

16) டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம், அகோலா (மகாராஷ்டிரம்)

17) மராத்வாடா வேளாண் பல்கலை., பர்பானி (மகாராஷ்டிரம்)

18) கொங்கண் கிரிஷி வித்யாபீடம் (மகாராஷ்டிரம்)

19) மத்திய வேளாண்மை பல்கலை., இம்பால் (இந்திய தென்கிழக்கு)

20) மகாத்மா புலே கிரிஷி வித்யாபீடம் (மகாராஷ்டிரம்)

21) ஒரிசா வேளாண் -நுட்பப் பல்கலை. (ஒரிசா)

22) ராஜஸ்தான் வேளாண் பல்கலை. (ராஜஸ்தான்)

23) பஞ்சாப் வேளாண் பல்கலை. (பஞ்சாப்)

24) ராஜஸ்தான் வேளாண் பல்கலை., உதய்பூர் (ராஜஸ்தான்)

25) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை (தமிழ்நாடு)

26) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ்நாடு)

27) சந்திரசேகர் ஆஸôத் வேளாண்-தொழில்நுட்ப பல்கலை., கான்பூர் (உ.பி.)

28) ராஜேந்திர தேவ் வேளாண்-தொழில்நுட்ப பல்கலை., ஃபைசாபாத் (உ.பி.)

29) ஜி.பி. பந்த் வேளாண் -தொழில்நுட்ப பல்கலை., பந்த் நகர் (உ.பி.)

30) பீதான் சந்திர கிரிஷி விஸ்வ வித்யாலயம், மோகன்பூர் (மேற்கு வங்கம்)

31) மேற்கு வங்க, விலங்கின - மீன் வளப் பல்கலை, கோல்கத்தா (மே.வங்கம்).

நம் நாட்டில் வேளாண் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் சேர்கிறார்கள். முதுநிலைப் படிப்புகளில் 7 ஆயிரம் பேர் வரை சேர்கிறார்கள்.

இவை தவிர, நாடு முழுவதும் 49 தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.

படிப்புகள் அடிப்படையில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் விவரம்:

படிப்புகள் :

பி.எஸ்ஸி. (வேளாண்மையியல்)

வேளாண் படிப்புகளில் முதன்மையானது இக்கல்வி. நான்கு ஆண்டுப் படிப்பு ஆகும். வேளாண் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டப் படிப்பு இது. இதில் சேருவதற்கு பிளஸ் 2 அடிப்படைக் கல்வியாகும்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களோ இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களையோ படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம்.

வேலைவாய்ப்பு:

இப்படிப்பை முடித்தோருக்கு அரசு, தனியார் துறைகளில் வேளாண்மை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணி கிடைக்கும்.வேளாண் பண்ணைகள், பயிர் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரலாம்.

வங்கிகளிலும் வேளாண் அதிகாரிகளாகப் பணியாற்றலாம்.வங்கிகளின் உதவியுடன் வேளாண்மை இடுபொருள் விற்பனை மையங்களையும் தொடங்கலாம்.

பட்ட மேற்படிப்பு படித்தோர், ஐ.சி.ஏ.ஆர். நடத்தும் ஏ.ஆர்.எஸ். தேர்வு எழுதி அதில் ஆய்வாளர்களாகவும் சேரலாம்.

பட்டமேற்படிப்பு முடித்தால், உரிய தகுதியைப் பெற்று வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாகப் பணியில் சேரலாம்.

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர ஆர்வம் இல்லாதவர்கள், சொந்தக் காலில் நின்றும் வெற்றி பெறலாம். வேளாண்மை ஆலோசகர்களாகவோ அல்லது விவசாயத்தை ஒரு தொழிலாகத் தொடங்கியோ வாழ்க்கையில் முன்னேறலாம்.

நல்ல விதைப் பண்ணைகளை அமைக்கலாம், தரமான விதைகளை உற்பத்தி செய்து வேளாண் நிறுவனங்களுக்கும் தொழில்களுக்கும் வழங்கலாம்.

ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து கூட்டுறவு முறையில் விவசாயம் செய்யலாம்

நன்றி : தினமணி கல்வி மலர் 2007 - http://www.dinamani.com/malar/manavarmalar07/agriculture/agriculture1.asp

மேலும் வாசிக்க>>>> "உழவுக்குப் படிப்பு, உழைப்போருக்கு உயர்வு"

0 கருத்துரைகள்!

ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.


...ச்சேச்சே...உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே...சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.


குறிப்பு: மேலே இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்


மேலும் வாசிக்க>>>> "வினோத குரங்கு?- பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு"

ஞாயிறு, 15 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் 2 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூரில் இருந்து பரங்கிப் பேட்டைக்கு பைப் லைன் மூலம் குடிநீர் செல்கிறது. அகரம், மெயின்ரோடு, வாத்தியாப்பள்ளி பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பு.முட்லூரில் இருந்து குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது வாத்தியாப்பள்ளி தெருவில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.முக்கிய இடங்களில் உள்ள அகரம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் தண்ணீர் இல்லாததால் மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

நன்றி: தினமலர்

மேலும் வாசிக்க>>>> "குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி"

சனி, 14 மார்ச், 2009 1 கருத்துரைகள்!
தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட (?!)
பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்று.

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படங்களிலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?

மேலும் வாசிக்க>>>> "ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!"

வெள்ளி, 13 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

# உலகில் உள்ள அகதிகளில் என்பது சதவிகிதத்தினர் பெண்களும் குழந்தைகளுமே (ஐ. நா. மனித உரிமை அறிக்கை 2001)

# 1994 இல் ருவாண்டாவில் நடந்த இனக்கலவரத்தில் பாலியல் பலாத்க்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். (செஞ்சிலுவை சங்க அறிக்கை 2002)
# இராக்கில் பாக்தாத் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 2003 வரை கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 400 க்கும் மேல். (மனித உரிமை கண்காணிப்பின் சர்வே 2003)
# கொசாவாவில் சில கிராமங்களில் செர்பிய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 30 சதவிகிதத்தினர் கர்ப்பிணிகள். (அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை 1999).
இன்னும் தொடர்கிறது பட்டியல். இந்த புள்ளி விவரங்களில் பெண்கள் வெறுமனே எண்களாக சுருங்கிவிடும் நிலையில், மகளிர் தினம் கொண்டாட மனம் வருமா என்ன?
நன்றி : நானே கேள்வி நானே பதில்., ஆனந்த விகடன் 18.03.2009.
மேலும் வாசிக்க>>>> "உலக மகளிர் தினச்செய்திகள்"

வியாழன், 12 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

MYPNO செய்தி எதிரொலி: சாலைப் பணி விரைவாக முடிந்தது

நகுதா மரைக்காயர் தெருவில் சிமெண்ட் சாலை போடும் பணயில் இருந்த தொய்வு குறித்து தொங்கும் சாலைகள் என்ற தலைப்பில் பிப்ரவரி 20 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி எதிரொலியாக இந்த சாலைப் பணி விரைந்து முடிக்கப்ட்டுள்ளது.

இது குறித்து அங்கு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இந்த செய்தி இண்டெர்நெட்டில் வெளிவந்துள்ளது என்று சிலர் கூறினார்கள். ஆனால் இதை நாங்கள் வேண்டுமென்று செய்வதில்லை. போதிய ஆட்கள் வேலைக்கு கிடைக்ககாததினாலேயே சில சிரமங்கள் ஏற்படுகிறது. அந்த சிரமங்களை தாண்டியும் நாங்கள் இதில் அக்கரை எடுத்து இப்பணியை விரைந்து முடித்திருக்கிறோம் என்றார்.

மேலும் வாசிக்க>>>> "சாலைப் பணி விரைவாக முடிந்தது"

0 கருத்துரைகள்!

புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.

நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் 12-03-2009

மேலும் வாசிக்க>>>> "திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி"

புதன், 11 மார்ச், 2009 1 கருத்துரைகள்!

கஷ்டப்பட்டு சுமை இழுக்கும் மாடுகளும், அத்தனை கஷ்டம் படாத ஜீவராசிகள் சிலரும்.

இடம் : பரங்கிப்பேட்டை ('ப்' நன்றி - வாசகன்) பெரியமதகு இறக்கம்.

மேலும் வாசிக்க>>>> "இந்த வார புகைப்படம்"

2 கருத்துரைகள்!

பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனாருமான பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று வபாஅத்தாகிவிட்டார்கள். அன்னாருக்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச்செய்தி"

செவ்வாய், 10 மார்ச், 2009 1 கருத்துரைகள்!
மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்கு
கடும் மணற்காற்று வீசுகிறது.
வெளியே தலைகாட்ட முடியவில்லை.

சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சாலைகளில் தத்தம் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சநம்பிக்கைகளைப் பற்றி நகரும் வாகனங்களுக்கு எறும்பினும் சற்றே வேகம் அதிகம்.
சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க>>>> "கடும் மணற்புயல் : ரியாதிலும் வானிலை மாற்றம்"

2 கருத்துரைகள்!

இந்த கோடை வெயிலுக்கு மூனாருக்கோ கொல்லி மலைக்கோ தப்பித்து ஓடி விட பரங்கி மகா ஜனங்கள் சிலர் திட்டமிட்டு இருந்திருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு நாட்க்களாக ஊட்டியை தூக்கியடிக்கும் ரம்மியமான பரங்கிபேட்டை கிளைமேட்டை பார்த்து அவர்கள் நிச்சயம் தங்கள் திட்டத்தை மாற்றி கொண்டிருப்பார்கள்.

சில வாரங்களாக கொளுத்தி எடுத்த வெயிலுக்கு பதில் செய்வது போல் இதமான தூறல், அழகான காற்று, மிதமான மழை என்று களை கட்டுகிறது பரங்கிபேட்டை சீதோஷன நிலை.


இதோ இப்போது கூட, இருண்ட வானமும், அது பொழியும் ஜில் மழையும், அது தரும், உடம்பை ஊடுருவும் குளிருடனும் இந்த பதிவினை பதிக்கிறோம். (வெளிநாட்டு சகோஸ்... பொறாமை தவிர்க்க)


இந்த திடீர் பருவ மாற்றத்தின் ஒரே ஒரு சந்தோஷ முரண் : வழக்கமாக காலை 8 - 10 போகும் கரண்ட் கூட இன்று போகவில்லை. (இப்ப தானே சொல்லி இருக்கோம்....)

மேலும் வாசிக்க>>>> "சட்டென்று மாறியது வானிலை"

திங்கள், 9 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

இன்று நடைபெற்ற எதிர்பாரா விபத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாகவும் மிகவும் அக்கறையுடனும், பாராட்டத்தக்க அளவில் நமது அரசு மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களும் சிகிச்சை அளித்தனர். அந்த அவசர நிலையிலும் இதனை கவனிக்க முடிந்தது.

ஆனால் தலையில் கடுமையாக அடிபட்ட இருவரும் ஒரு குழந்தையும் மிகவும் மோசமான நிலைக்கு செல்ல, தலைமை டாக்டர் அவர்களை கடலூருக்கு கொண்டு செல்ல சொல்லி விட்டார். உடனடியாக 253800 என்ற ஜமாஅத் எண்ணுக்கு போன் செய்து சொல்லி விட்டு அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் என்ன ஆயிற்று என்று கேட்டால்.. டிரைவர் இல்லை என்று பதில் வந்தது. பரவாயில்லை எங்களுக்கு தெரிந்த நிறைய டிரைவர் இருக்கிறார்கள் வரச்சொல்கிறோம் என்றதற்கு இல்லை... அரசு டிரைவர் தவிர வேருயாரும் ஆம்புலன்சை எடுக்க கூடாது என்பது அரசு விதி என்று பதில் வந்தது. பிறகு பேசியதில், ஆம்புலன்ஸ் டிரைவர் இன்று ஒரு நாள் தான் லீவ் போட்டார் (?) அன்று போய் இது போல் நடந்து விட்டது என்றார்கள்.
அவசரத்திற்கு இல்லாத அரசு மருத்துவமனை ஆம்புலன்சை நொந்து கொண்டே அவசர எண் 108 க்கு போன் செய்தால் .... இதே கதை தான். கனிவாக விபரம் கேட்டவர்கள் "மன்னிக்கவும் ஒரு அரசு மருத்துவமனையிலிருந்து இன்னொரு அரசு மருத்துவமனைக்கு அம்புலன்சை இயக்க எங்களுக்கு அனுமதி இல்லை" (?) என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த பத்தே நிமிடத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் ஆம்புலன்ஸ் அங்கு வரவும் தான் அனைவருக்கும் நிம்மதி வந்தது.
மேலும் வாசிக்க>>>> "அவசர கால உதவியில் ஜமாஅத் ஆம்புலன்ஸ்"

ஞாயிறு, 8 மார்ச், 2009 0 கருத்துரைகள்!

தள்ளு வண்டி; அரசு பேருந்துக்கள் சரிவர பராமரிப்பு இல்லாததால்
பயணிகளால் தள்ளப்படும் நிலையில் உள்ள ஒரு பேருந்து.
இடம் : பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே.
மேலும் வாசிக்க>>>> "தள்ளு வண்டி"

வியாழன், 5 மார்ச், 2009 0 கருத்துரைகள்!


தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.
தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருவறையில் இருந்து கல்லறை வரை மக்களின் தேவை அறிந்து நலதிட்டங்களை அறிவித்து மக்களுக்காகவே உழைக்கக்கூடிய ஆட்சி கலைஞர் தலைமையிலான இந்த அரசு தான் என்றும், இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளின் படி இடஓதுக்கீடு கொடுத்ததும்,மேலும் அமைச்சரைவையில் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பதும் கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான் என்றார். எனவே வர இருகின்ற மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், துணை தலைவர் செழியன், வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி முனவர் ஹூஸைன், காண்டீபன், பைசல், அன்சாரி, அஷ்ரப் அலி, பாவாஜான், ஹபிபூர்ரஹ்மான் மற்றும் தி.மு.க முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "தெருமுனை பிரச்சார கூட்டம்"

புதன், 4 மார்ச், 2009 1 கருத்துரைகள்!


கடந்த சில நாட்களாகவே பரங்கிப்பேட்டை நகரில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டையின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான நன்னாரி சர்பத் அமோகமாக விற்பனையாகின்றது. மார்ச் மாத தொடக்கத்திலேயே நிலைமை இவ்வாறிருந்தால் கோடைக்காலம் என்றறியப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை எப்படியோ.? நம்ம அரசியல்வாதிகள் தான் பாவம், மே 13-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு வெயிலில் அலைந்து-திரிந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு பெற வேண்டுமே..!


இதற்கிடையில் காலை-மாலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து சாலைகளில் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றது, மேலும் இப்பனியின் காரணமாக குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றார்கள்.
மேலும் வாசிக்க>>>> "கதிரவனும்..... காலைப் பனியும்...!!!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234