திங்கள், 6 ஜூலை, 2009

சில நிமிடங்களில் கருகி காலி கொட்டகையானது வெல்டிங் ஷாப்

பரங்கிப்பேட்டை:

நெல்லுக்கடை தெருவில் கீற்று கொட்டகையில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்தது.

இன்று இந்த பட்டறையில் தினசரி வேலை நடந்துகொண்டிருந்த போது, சிறிய தீப்பொறி கொட்டகையில் தெறித்து தீ பரவியது.

ஆனால் சில நிமிட நேரங்களில் தீ கொட்டகை முழுதிற்கும் பரவியதினால் அணைக்க முயற்சித்தும் பலனற்று கருகிப் போனது.

அதிகப் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டாலும், வெல்டிங் பட்டறைகள் இதுபோன்று கொட்டகையில் பாதுகாப்பின்றி குடியிருப்பு பகுதிகளுக்கிடையே இயங்குவது சட்டவிதிகளுக்கு முரணானது.

இனிமேலாவது இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கீற்று கொட்டகையை தவிர்க்க வேண்டும் என்றார் அருகில் கடை வைத்திருக்கும் கடைகாரர் ஒருவர்.

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அப்போது கும்மத்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பபட்டது.

மேலும் இவ்வவிழாவில் அரசுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், கும்மத்பள்ளி ஆரம்ப பள்ளியின் வகுப்பறைக்கு பாயும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பழைய நிர்வாகிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

விழா இறுதியில் உணவு பரிமாறப்பட்டது.

அதிரடி போஸ்டர்களும் குமுறல்களும்

பரங்கிப்பேட்டை:

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரங்கிப்பேட்டை நகருக்கு வருகை புரிந்தார்.

இவருடைய திடீர் வருகையினால் செய்வதறியாது திகைத்து நின்ற நகர சிறுத்தைகள் அதிரடியாக நன்றி அறிவிப்பு போஸ்டர்களை வீதியெங்கும் சுவர்களில் ஒட்டினர்.

ஆனால் இது சிலருக்கு (வீட்டு உரிமையாளர்கள்) சற்று கோபத்தை வரவழைத்தது. தேர்தலின் போதுதான் அனுமதியின்றி எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றார்கள்.

இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் காலம் கடந்து இப்போது அதிரடியாக எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றுள்ளனர் என்று குமுறினார் ஒரு இல்லத்தரசர்.

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்ணாமலை கடல்வாழ் உயிரியல் கல்லூரி அரங்கத்தில் நேற்ற மாலை நடைபெற்றது.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார்.

புதிய நிர்வாகிகளாக O.A.W. பாவாஜான் புதிய தலைவராகவும், M. இராதாகிருஷ்ணன் புதிய செயலாளாளராகவும், A.K.T. அன்சாரி புதிய பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பொருப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகள் விபரம்:

  • தலைவர்: O.A.W. பாவாஜான்
  • செயளாளர்: M. இராதாகிருஷ்ணன்
  • பொருளாளர்: A.K.T. அன்சாரி
  • து. தலைவர்கள்: Er. P. அருள்வாசகம், K. அரசு, T. ஜெயராமன்
  • து. செயளாளர்: A. காஜா அமினுத்தீன்
  • து. பொருளாளர்: M. ஹமீது சுல்தான்
  • P.R.O. : M.S. சுல்தான் சேட்

விழா முன்னுரையின் போது M. கவுஸ் ஹமீது (Raja), M.S. சுல்தான் சேட் ஆகியோர் முந்தைய நிர்வாகத்தின் சாதனைகளை விளக்கினார்கள்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம், பேரா. அஜ்மல் கான் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பரங்கிப்பேட்டையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமை தாங்கினார்.

பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்த ராஜசுந்தரிக்கு ஆயிரத்து 500 ரூபாய், இரண்டாம் பிடித்த அனிதாவுக்கு ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த சாந்தினி, சரஸ்வதி ஆகிய இருவருக்கும் தலா 500 ரூபாய் வீதம் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கன் பரிசு வழங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை மீனவ கிராமங்களில் போலீசார் விழிப்புணர்வு கூட்டம்

பரங்கிப்பேட்டை:

வெளிநபர்கள் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் போலீசார் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.

கடற்கரை மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துமாறு போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பில் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார் பேட்டை, வேளங்கிராயன் பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா, வீரமணி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வெளிநபர்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கடலில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் மாயமானாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் புகைப்படத்துடன் மொபைல் போன் நம்பர்களை சேகரித்தனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...