வியாழன், 10 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதிக்கு காய் நகர்த்தும் பரங்கிப்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள் சிதம்பரம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு கணிசமான அளவில் ஓட்டு வங்கி உள்ளது. இதனால் இவ்விரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட குறி வைத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்த 41 ஊராட்சிகள் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி, கிள்ளை பேரூராட்சி ஆகியவை புவனகிரி தொகுதியில் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி முழுவதும் சிதம்பரம் தொகுதியில் சேர்ந்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் தொகுதியில் எப்படியும் சீட் பெற்றுவிட வேண்டும் என பரங்கிப்பேட்டை தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.

அதே சமயம் சிதம்பரம் தொகுதியை தற்போது தன் வசம் வைத்துள்ள அ.தி.மு.க., இந்த முறையும் தக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் சிட்டிங் எம்.எல்.ஏ., முதல் பரங்கிப்பேட்டை பகுதி அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளும் சிதம்பரத்தின் மீது கண் வைத்துள்ளனர்.
Source: Dinamalar

பரங்கிப்பேட்டை நடுக்கடலில் மோதல்: கடத்தப்பட்ட 8 மீனவர்களும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கடத்தப் பட்ட 8 பேரும் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நான்குமீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் புதுக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் மீன்பிடித்த போது நாகை மாவட்டம் பழை யாறு மீனவர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் பழையாறு மீனவர்கள் புதுக்குப்பம் மீனவர்களின் வலைகளை அறுத்ததுடன் அவர்கள் 4 பேரையும் கடத்தி சென்று விட்டனர். படகையும் கொண்டு சென்றனர்.
அதற்கு பழி வாங்கும் வகையில் புதுக்குப்பம் பகுதியில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இருவரையும், சீர்காழியை சேர்ந்த இருவரையும் புதுக்குப்பம் மீனவர்கள் பிடித்து சிறை வைத்து படகையும் கொண்டு வந்தனர்.

இதனால் 2 மீனவ பகுதி களிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 2 கிராம மக்களிடமும் பரங்கிப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பேரில் புதுப் பேட்டை மீனவர்கள் சிறை பிடித்து வைத்திருந்த 4 பேரையும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல் பழையாறு மீனவர்கள் பிடித்து சென்ற புதுக்குப்பம் மீனவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று கடத்தப்பட்ட 8 பேரும் கிராம மக்கள் முன்னிலையில் விடு விக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களின் பிரச்சினை குறித்து சிதம்பரம் கவால் துறை து.கண்காளிப்பாளர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், மீன்வளத்துறை ஆய் வாளர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் அறுந்த மீன் வலைக்கு நஷ்ட ஈடு வழங்குவது, படகுகளை திருப்பி கொடுப்பது என்றும், பிரச்சினை இன்றி மீன்பிடிப்பதாக உறுதி அளித்து சென்றனர். இதையடுத்து இந்த பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...