
பரங்கிப்பேட்டையில் ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின் நிறுத்தத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். நகரில் தினமும் சுமார் 2 மணிநேரத்திற்கு இரவிலும், பகலிலும் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்றும் (வெள்ளி) கடந்த செவ்வாய் அன்றும் 6 மணிநேரம் மின்சாரம் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. இது குறித்து மின்வாரியத்தை கேட்டபோது,
"இனி பிரதி செவ்வாய் கிழமைகளில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளி கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் மின்உற்பத்தி தட்டுப்பாட்டினால் தினமும் 2 மணிநேரம் மின்னிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்'ளது.
மேலும் வாசிக்க>>>> "தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி"