பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 2 மார்ச், 2011 0 கருத்துரைகள்!

தமிழகத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்வுகள் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. ஆண்டார்முள்ளிபள்ளம் (பெரியப்பட்டு), சாமியார்பேட்டை, முட்லூர், சேவாமந்திர்,பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலிமா, மூனா ஆஸ்திரேலியன் ஆகிய எட்டு பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி வருகின்றனர். 

தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களை www.mypno.com சார்பில் வாழ்த்துகிறோம்.மேலும் வாசிக்க>>>> "+ 2 தேர்வுகள் தொடங்கியது."

2 கருத்துரைகள்!

தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நகர தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் அருகில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தி.மு.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், வழங்கப்பட்டது, மேலும் பரங்கிப்பேட்டை 17-வது வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும்-நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹூசேன்,  மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கோ.செழியன், நகர அவைத்தலைவர் S.தங்கவேல்,ஒன்றிய பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி,கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், கவுன்சிலர் M.E.அஷ்ரப் அலி, ராஜு, K.H.ஆரிபுல்லாஹ், ரசூல் கான்,  ஜாபர், பொற்செல்வி உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.  
மேலும் வாசிக்க>>>> "ஸ்டாலின் பிறந்த நாள் விழா.."

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: அப்பாபள்ளி சமுதாயநலக்கூடம் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமை தாங்கினார். ஜெய்னுல்லாபுதீன் மாலிமார், லியாக்கத் அலி முன்னிலை வகித்தனர். ஹமீது மரைக்காயர் வரவேற்றுப்பேசினார்.

இக்கல்வி கருத்தரங்கில் சி.எம்.என். சலீம் சிறப்புரையாற்றினார். இன்னும் இருபது வருடங்களில் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களிடையே மூன்று விஷயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென்றால் மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தனது உரையினை ஆரம்பித்தார் சி.எம். என். சலீம். தற்போதைய கல்வி முறை, பொருளாதாரம், வாழ்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக காரைக்கால் இக்ரா பள்ளிக்கூடத்தின் து. தலைமையாசியர் செய்தா பானு முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் குறித்து உரை நிகழ்த்தினார். நிகழ்சியின் இறுதியில் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு சலீம் பதிலளித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் பலர் திரளாக வருகை புரிந்தனர்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் CMN சலீம் பங்குபெற்ற கல்விக் கருத்தரங்கம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் முஹமது யூனுஸ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், பரங்கிப்பேட்டை பகுதிகளில் அரசு உத்தரவுபடி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பொதுநிதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதி 40 லட்சம் ரூபாயில் 18 வார்டுகளில் சாலைகள், வடிகால், கல்வெர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேரூராட்சி தீர்மானம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பகுதியில் மொபைல் போன் டவரில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகளை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள வோடோபோன் மொபைல் போன் டவர்களில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகள் திருட்டு போயின.
இது குறித்து வோடோபோன் நிறுவன திட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சிதம்பரம் - கடலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் மூவரும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ராமதுரை (35), பண்ருட்டி மேல்பாதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம் (43), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த மணி (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் திண்டிவனம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், புவனகிரி பகுதியில் மொபைல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வாசிக்க>>>> "மொபைல் போன் டவரில் பேட்டரி திருட்டு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரங்கிப் பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்துக்கு நகர செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

நகர இளைஞரணி செயலாளர் சங்கர், நகர துணை செயலாளர் நாகையன், வார்டு செயலாளர் ஜெய்சங்கர், ஜெயலலிதா பேரவை ரமேஷ், அருள்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ், ஆரூர்நாதன், மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்விராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கனகராஜன், தலைமை கழக பேச்சாளர் தனஜெயராமன், மாவட்ட பேரவை துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பேரவை இணை செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்மணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகர துணை செயலாளர் சம் பந்தம், மாவட்ட பிரதிநிதி குமார், முகமது இக்பால், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர தலைவர் மலை மோகன் நன்றி கூறினார்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234