முடித்துவைப்பதை குறித்தாலும்
முற்றுப்புள்ளிகள்
அழகானவை.
முடிக்கத்திணறும் ஒரு காற்புள்ளியை விடவோ ( கமா )
அர்த்தம் தராத ஒரு அரைப்புள்ளியைவிடவோ (செமிகோலன்)
நிச்சயம் அழகானது
முழுவட்ட பூரணமான
முற்றுப்புள்ளி.
நம்மில் பலருக்கு
முற்றுப்புள்ளி வைப்பது இன்னும்
கைவராத கலைதான்.
சுருதியற்ற வெட்டிப்பேச்சுக்களுக்கும்,
கைகூடிவராத காதல்களுக்கும்,
முடிச்சுக்கள் விழுந்த கவிதைகளுக்கும்,
அர்த்தமில்லா தனிமை சிந்தனைகளுக்கும்....
அழகிய முற்றுப்புள்ளியொன்று வைக்க
நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
முற்றுப்புள்ளி
முறித்துக்கொள்ளும் வன்மத்தின் அடையாளமல்ல.
அடுத்த வாக்கியத்தை இணைத்து வைக்கும்
சமாதானத்தூதுவன் அது.
முற்றுப்புள்ளியற்ற வாக்கியம்
அழகாக இருக்குமா என்ன?
துவக்கப்புள்ளியில் துலங்கினாலும்
முடித்துவைக்கும்
முற்றுப்புள்ளியில் அல்லவா உள்ளது
வாசல் கோலத்தின் பரிபூரணம்.
முற்றவே முற்றாத மறுமை வாழ்விற்கு முன்
மரணம் நமக்கிடப்போகும் முற்றுப்புள்ளி
எங்கு, எப்போது என்று
முற்றாக அறியாத நிலையில்
வாருங்கள்
வாழ்க்கையை
அழகாக்கி அர்த்தப்படுத்துவோம்.
திங்கள், 29 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...