பரங்கிப்பேட்டை: தி.மு.கழக தலைவர் கருணாநிதி எழுதிய "நீதி வெல்லும், நிச்சயம் வெல்லும்" என்ற தலைப்பிலான அறிக்கையினை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை தி.மு.க. சார்பில் நடைபெற்றது.
நகர தி.மு.க.செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டு சஞ்சீவிராயர் கோயில் தெரு, கச்சேரி தெரு, உள்ளிட்ட பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் வழங்கினார்.
கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன் முன்னிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதிகள் கோமு, வேலவன், நகர நிர்வாகிகள் மாமுன் அலி மாலிமார், ஆரிபுல்லா, மாயா உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.