வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மதுக்கடையை இடம் மாற்றம் செய்யவேண்டும் - அரசுக்கு கோரிக்கை


பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர், இந்நிலையில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்கான மனுவை அளித்துள்ளதாக தினமணி நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வழி தவறிய மூதாட்டி

நன்றி: தினமலர்

வக்ஃபு சொத்துக்களை மீட்க வேண்டும் - முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், கோரிக்கை

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக செயல்வீரர்கள் கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் பக்ருதீன், மாவட்ட தலைவர் முஸ்தபா கமால் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சாஹுல் ஹமீது வரவேற்றார். கூட்டத்தில் புதிய நகர தலைவராக அன்வர் அலி கான், செயலாளராக பாபா பக்ருதீன், துணை செயலாளராக செய்யது அப்பாஸ், முஹம்மது இர்பான், பொருளாளராக கமருதீன், இளைஞரணி தலைவர் செய்யது ஆலம், செயலாளர் செய்யது முஸ்தபா, மற்றும் நிர்வாகிகளாக அஹமது மரைக்காயர்,அப்துல் மாலிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டையில் உள்ள வக்ஃபு சொத்துக்களை வக்ஃபு வாரியம் மீட்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தினமலர் நாளேடு (இ-பேப்பரில்) சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது