திங்கள், 1 ஜூலை, 2013

சிங்கை டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பரங்கிப்பேட்டை அன்வர்!


சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை ஜுன்னத் மியான் தெருவினைச் சேர்ந்த எம்.ஹெச்.காஜா மொய்னுத்தீனுடைய மகன் கே.அன்வர் ஹஸன், இவர் கடந்த 5 ஆண்டுக்காலமாக சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில், சுற்றுப்புற சூழல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  சமீப காலமாக சிங்கப்பூரில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரப்பு ஏடிஸ் வகை கொசு குறித்து தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், பெரிய வடிவமைப்பில் ஏடிஸ் கொசு-வினை உருவாக்கி, ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான செய்தி நேற்றைய சிங்கப்பூர் ஆங்கில நாளிதழான வெளிவந்துள்ளது.
சமூக நல நோக்குடன் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து அன்வர் ஹசனுக்கு MYPNO வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

சம்சுதீன் காசுமி பயானில் திரளாக பெண்கள் பங்கேற்பு!








பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று மாலை மஹ்முதிய்யா மஹாலில் நடைப்பெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். செயல் தலைவர் முனைவர் எம்.எஸ் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார்.

எம்.ஹெச். கபீர் அஹமது மதனி கிராஅத்துடன் துவங்கிய இந்த நிகழச்சிக்கு சென்னை மக்கா பள்ளி இமாம் சம்சுதீன் காசுமி சிறப்புரையாற்றினார். இறைவனின் நீதிமன்றத்தில் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்திய இந்த சொற்பொழிவு கூட்டத்திற்கு முஸ்லிம் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். குறிப்பாக இதில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதிரியா மதரஸாவில் நடைப்பெற்ற மாணவர் பட்டிமன்றம்! (படங்கள்)






பரங்கிப்பேட்டை: காதிரியா பள்ளி மக்தப் மதரஸாவின் 5-ம் ஆண்டு விழா முன்னிட்டு மாணவ - மாணவியர்களின் கிராஅத், பயான், உரையாடல் போட்டிகள் மற்றும் நகைச்சுவை உரையாடல் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நேற்று நடைப்பெற்றது. இதன் மாணவ - மாணவியர் நடத்திய இஸ்லாமிய பட்டிமன்றம் சிறப்பு அம்சமாக இருந்தது. உயர்ந்த வாழ்விற்கு உறுதுணையாய் இருப்பது கல்வியா.. செல்வமா? என்கிற தலைப்பில் நடைப்பெற்ற இப்பட்டிமன்றத்திற்கு நெல்லை ரியாமுல் அரபிக்கல்லூரி முதல்வர் ஹுமாயூன் கபீர் நடுவராக இருந்தார்.

காதிரியா பள்ளி முத்தவல்லி எஸ்.ஓ. செய்யது ஆரிப் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆண்டுவிழாவிற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவரும் இஸ்லாமிய ஐக்கியஜமாஅத் து. தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர், நிர்வாகிகள் எம்.எஸ். அலி அக்பர், அப்துல் காதிப் உமரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்காக பங்கேற்றனர்.

பெரியமதகு சுங்க வசூல்: உள்ளூர் வாகனங்களுக்கு இனி வசூல் கிடையாது..?


பரங்கிப்பேட்டை: நீண்ட காலமாக நீடித்து வரும் பெரியமதகு பாலத்தின் சுங்க வசூலை தடுத்த நிறுத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் அடிக்கடி முன்வைக்கப்படும் நிலையில், நேற்று பெரியதெருமுனை ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை சேர்மேன் அசோகனிடம் கோரிக்கை மனுவை அளித்து பெரியமதகு பால சுங்க வசூலை தடுத்த நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போது மனு அளித்த ஓட்டுநர் சங்க நிர்வாகிகளிடம் பேசிய அசோகன் கூறியதாவது: "இது குறித்து பலதரப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வந்துக் கொண்டுதான் இருக்கிறது. தங்களின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அரசுத் தரப்பில் எப்போது இதற்கான டென்டர் நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் இது முடிவுக்கு வரும்" என்றார். இதனை தொடர்ந்து பேசிய ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், "அப்படியென்றால் குறைந்தபட்சமாக உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் இதனை நிறுத்த நடவடிக்கை எடுங்கள்" என்று கோரினர். அதற்கு பதிலளித்த சேர்மன், "அப்படியென்றால், அதனை குறிப்பிட்டு தனியாக ஒரு மனு எழுதிக் கொடுங்கள்" என்று கூறியதை அடுத்து உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வசூலை தடுத்த நிறுத்த கோரி மனுவை ஓட்டுநர் சங்கம் சார்பில் அளித்தனர்.

இதனால்,  உள்ளூர் வாகனங்களுக்கு பெரியமதகு பாலத்தின் சுங்க வசூல் விரைவில் நிறுத்தப்படும் என்று ஓட்டுநர்சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...