வெள்ளி, 6 மே, 2011

அட்சய திரிதியையும் வியாபார யுக்திகளும்!

நம் மக்களுக்கு அளவு கடந்த ஆசையில் வரும் மோகத்திற்கு என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை! இதற்க்கு நம் கண் முன்னே பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன! கொஞ்சம் சமீபமாக பார்த்தோமானால் இந்த அட்சய திருதியை! இதை வைத்து ஒரு கூட்டம் மேலும் மேலும் பொருள் சேர்க்க... இன்னொரு பக்கம் கடனாளி ஆகும் நடுத்தர வர்க்கம்!

ஆரம்பகாலம் தொட்டே நம் இன பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம் வளர்ந்துகொண்டேதான் வருகிறது! இதை சரியாக பயன்படுத்திகொண்ட வியாபார உலகம் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே வரும் என்று கொளுத்திப்போட.. அது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகிறது!

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இப்போது ஒரு ஜோதிடர் சொல்லுகிறார்.. அட்சய திருதியை அன்று பிளாட்டினம் வாங்கினால் நல்லது என்று! இது தங்கத்தை விட விலை அதிகம்! அவர் சொல்லுவது அன்றைய தினம் வெண்மை நிறம் கொண்ட பொருள் வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது..இதுதான் அன்றைய நாளின் சிறப்பு! அது ஏன் பாலாக... உப்பாக.. தயிராக இப்படி விலை குறைந்த பொருளாக இருக்கக்கூடாது?.. இதையெல்லாம் விளம்பரப்படுத்தினால் வியாபாரிகளின் நிலைமை என்னாவது? அதனால்தான் முதலாளிகளும் ஊடகங்களும் இதுபோன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து தங்கம் பிளாட்டினத்திர்க்கு மட்டும் வெளிச்சம் போடுகின்றன!
 
பணம் இருப்பவர்கள் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்.. இல்லாதவர்களுக்கு இதைப்பற்றி கவலையும் இல்லை! ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் இதனால் படும் திண்ட்டாட்டம் இருக்கிறதே.. அது சொல்லிமாளாது.. விளம்பரங்கள் எதைசொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல் கொஞ்சம் யோசித்தோமானால் இதில் உள்ள முட்டாள்தனம் நமக்கு புரிபடும்!

டிப்ஸ்: கழுகு

காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் இந்தவாரச் சந்தையில் விலை வீழ்ச்சி!

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கூட்டப்படும் வாரச்சந்தை மிகவும் பெரிதும் மட்டுமின்றி பிரபலமானது. பரங்கிப்பேட்டையில் பிரதி வியாழன்களில் கூட்டப்படும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தைக்கு, பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிருந்து மட்டுமல்லாமல் முட்லூர், கிள்ளை, புதுச்சத்திரம் போன்ற பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். காய்கறிகள் மட்டுமின்றி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், மண் பாண்டங்கள், செடி வகைகள் மற்றும் இன்ன பிற பொருட்கள் இங்கு கிடைக்கின்றது.

இந்த வாரச்சந்தையில், பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது. தக்காளி மற்றும் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 10-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. மட்டுமின்றி, பெரும்பாலான காய்கறி வகைகள் கிலோ 10 ரூபாய்க்கே விற்கப்பட்டது.
நேற்றைய சந்தையில் பணை நுங்கு, வெள்ளரிப் பழம், மாம்பழங்கள் புதிய வரவாக மட்டுமின்றி குறைந்த விலையிலும் விற்கப்பட்டது.

சுட்டெரிக்கும் வெயிலிலும் குவியும் சுற்றுலாப் பயணிகள்: பிச்சாவரம் ஜிலீர்!

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சுற்றுலா பயணிகள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தும் ,தொப்பிகள் அணிந்து ஆனந்தமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
இங்குள்ள மாங்குரோவ் காடுகள் என்னும் சதுப்பு நில காட்டில் 4 ஆயிரம் வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் காடுகளை ரசித்து வண்ணம் உள்ளனர். காடுகளுக்கு நடுவே சிறிய வாய்க்காலில் படகில் சென்று மாங்குரோவ் மரங்களை தொட்ட படி பயணம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது அக்னி வெயில் கொளுத்திவருகிறது. இந்த வெயிலின் தாக்கம் வருகிற 29-ந் தேதி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர்.ஆனால் அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது. இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை.இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஊட்டியாகவும், கொடைக்கானல் ஆகவும் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.

காடுகளை படகு மூலம் ரசிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் 38 துடுப்பு படகுகளும், 8 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடுப்பு படகில் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது.மோட்டார் படகில் 8 பேர் பயணம் செய்யலாம். இதில் 1 மணி நேரத்திற்கு 8 பேருக்கு ரூ.1200 வசூ லிக்கப் பட்டு வருகிறது. இதே படகில் 2 மணி நேரத்திற்கு சவாரி செய்ய ரூ.2 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது.படகு சவாரி செய்ய குறைந்த கட்டணமே வசூல் செய்வதால் இங்கு அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்கின்றனர்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் இந்த சுற்றுலா மையத்திற்கு செல்ல முடியும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.கடந்த மே மாதம் 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.தற்போது மே மாதம்( 5-ந் தேதி )நேற்று வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.இன்னும் சுற்றுலா பயணிகளின் எண் ணிக்கை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை மேலாளர் ஹரி கரன் தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...