சனி, 10 மே, 2008

வரலாறு பாடத்தில் சேவாமநதிர் பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவது இடம்.


பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளிச் சேர்ந்த செல்வி. இனியா என்கிற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2 வது இரண்டத்தைப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் 1036 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விபரம்: தமிழ்: 177, ஆங்கிலம்: 128, கம்ப்யூட்டர் சயின்ஸ்: 173, எகனாமிக்ஸ்:180, புவியியல்:179, வரலாறு: 199.

ஏழை விவசாயியின் மகளான இம்மாணவி டியூஷன் போன்றவைக்கு வசதியில்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தினாலும் தன்னால் இம்மதிப்பெண்களை பெறமுடிந்தது என குறிப்பிட்டதுடன் மேற்கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போவதாக கூறினார்.

பரங்கிப்பேட்டை புத்தகக் கண்காட்சி



அரிதாகி வரும், புத்தக வாசிப்பு எனும் அற்புத பழக்கத்தை மக்களிடையே குறிப்பாக சிறார்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட புத்தகம் மற்றும் சி.டி./டி.வி.டி. கண்காட்சி மே 1 முதல் 4 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.

இது குறித்து கல்விக் குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் கூறியதாவது: கல்விக்குழு, ஐ.இ.டி.சி யுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் சற்று மெத்தனமாக இருந்த நிலை மாறி திரளான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு அதிகளவில் புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தது ஏற்பாட்டாளர்களுக்கு நிறைவினை தந்தது. இந்த கண்காட்சிக்கான அறிவிப்பினை குழுமத்திலும், வலைப்பூவிலும் கண்டு எந்த கோரிக்கையும் வைக்கப்படாமலேயே அதற்காக மனமுவந்து நிதியளித்த சகோதரர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக என தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...